மே 18 சிங்கள மாவீரர் தினமாம்: பதிலடி கொடுக்குமா தமிழினம் ?
15 May, 2010 by admin
மே மாதம் 18ம் திகதி அன்று சிங்கள இராணுவத்தின் வீடுகளில் விளக்குகளை ஏற்றுமாறும், இறந்த இராணுவத்தினரை நினைவுகூறுமுகமாக தேசிய கீதங்கள் நாடு எங்கும் முழங்கவேண்டும் எனவும், மகிந்த அரசு அறிவித்துள்ளது. இலங்கையின் தேசிய கொடியை நாடு முழுவதும் பறக்கவிட்டு, பாசிச அரசு, கொலைக் குற்றங்களை மூடி மறைக்க முனைகிறது. மகிந்தவின் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடி, இறுதியில் சிங்கள மாவீரர் நாளாக மே 18 ஜ அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருக்கும் நாம் என்ன செய்யப் போகிறோம் ? வழமை போல மே 18ம் திகதி வேலைக்குச் சென்று, பின்னர் வீடு திரும்பி சாப்பிட்டுவிட்டு, ரீவியில் சீரியல் பார்த்து உறங்கப் போகிறோமா ? போன வருடம் இதே மாதத்தை நினைவு படுத்திப் பாருங்கள் தமிழர்களே !. எத்தனை ஆயிரம்பேர் திரண்டு பல நாடுகளில் போராட்டங்களை முன்னெடுத்தனர். குறிப்பாக பிரித்தானியா வாழ் தமிழர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். லண்டன் நகரம் ஸ்தம்பித்தது. பின்னர் மே 18 உடன் எமது போராட்டம் முடிந்ததே என்று மனமுடைந்து போனார்கள் பல தமிழர்கள்.
இறுதி நாளில் மட்டும் 25,000 த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர், பிறந்த குழந்தைகள், பிறக்காத குழந்தைகள், தள்ளாடும் முதியவர்கள், நடக்கவே நாதியற்ற தமிழர்கள், தாலி இழந்த பெண்கள், தாயை இழந்த சிறுவர்கள், அனைவரையும் விட்டுவைக்கவில்லை இலங்கை அரசின் கோரத் தாக்குதல். பதுங்கு குழியில் உயிருக்காக பதுங்கியிருந்தவேளை, டாங்கிகளை அதன் மேல் ஏற்றி, உயிரோடு புதைத்தான். பாதுகாப்பு வலையம் என்று சொல்லி மக்களை அங்கு கூப்பிட்டு, கூண்டோடு கொன்றான். காயமுற்றவர்கள் செல்வது வைத்தியசாலை என்பதால் அங்கும் குண்டுமழை பொழிந்து ஓடக்கூட நாதியற்றவர்களைக் கொன்றான். கொல்வதற்கு எவ்வளவு முறை இருக்கிறதோ அத்தனை முறைகளையும் கையாண்டான் சிங்களவன். நாதியற்று கிடந்தது தமிழினம்.
இவர்கள் இறந்த மே 18ம் நாள் ! இவர்களுக்கு நாம் நினைவுகூராவிட்டால் ,அவர்கள் எங்களை மன்னீப்பார்களா ?, அவர்கள் ஆத்மா சாந்தியடையுமா ? , கொல்லப்பட்ட தமிழர்களுக்காக 1 நாள் தன்னும் நாம், எமது வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒன்று கூடாவிட்டால் எம் இனத்தை, வேற்றினக்காரன் கேவலமாகப் பார்க்க மாட்டானா ? யூதர்கள் கொத்துக் கொத்தாக கொலைசெய்யப்பட்ட நாளை அவர்கள் நினைவுகூர அரம்பிக்கும் போது, நாட்டில் உள்ள ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடச் செல்லவில்லையே. ஆனல் விட்டார்களா அவர்கள் ? ஒவ்வொரு வருடமும் அதனை நினைவுகூர ஆரம்பித்தார்கள், இறுதியில் தற்போது பிரித்தானிய ராணி எலிசபெத் அம்மையார் தொடக்கிவைக்கும் ஒரு துக்கதினமாக அது மாறவில்லையா ?
ரெஸ்கோ(TESCO), ஜோன் லூவிஸ், போன்ற பெரும் வாணிபத்தை தனதாக்கியுள்ள யூதர்கள், தமது பொருளாதாரம் காரணமாக இங்கு உள்ள அரசியலை தமக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். யூதர்களுக்கு தமிழன் ஒன்றும் குறைந்தவன் அல்லவே. யூதர்கள் பிரித்தானியாவிலும், மற்றைய நாடுகளிலும், முன்னேறி ஒரு நிலைக்கு வர எடுத்துக் கொண்ட காலத்தோடு ஒப்பிடும் போது, புலம்பெயர் தமிழன் தற்போது முன்னேறியுள்ள வேகம் அதீதமானது. பிரித்தானிய வாணிபத்தில் தமிழர்களின் பலம் அதிகரித்துள்ளது.
முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழர்களுக்காக, பிரித்தானிய ராணியோ அல்லது வருங்கால பிரித்தானிய இளவரசன் வில்லியமோ வந்து துக்கதினத்தை தொடக்கிவைக்கும் அளவுக்கு, நாம் இதை நகர்த்தவேண்டும். உலகறியச் செய்யவேண்டும். மேற்குலகுகள், அங்கே நடைபெற்றது ஒரு இன அழிப்பு என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும், இலங்கை அரசு வெட்கி நாணிக், குறுகவேண்டும். அதுவரை ஓயமாட்டான் தமிழன் என்று நாம் உரக்கக் கூறுவோம் !
காலை எழுந்தோம் வேலை.. சென்றோம், மாலை திரும்பினோம், தூங்கச் சென்றோம், என்று இல்லாமல் மே 18ம் தேதியை நினைவுகூர பிரித்தானிய மக்களே வாருங்கள். பிரித்தானிய பாராளுமன்றம் நோக்கி வாருங்கள், உங்கள் நெஞ்சில் சற்றேனும் ஈரம் இருந்தால் வாருங்கள் !, இறந்த உயிர்களுக்காய் உங்கள் உள்ளம் துடிக்கிறதா வாருங்கள் ! உங்கள் உறவுகளை நேசிக்கிறீர்களா.... வாருங்கள் ! தமிழ் காற்றை சுவாசிக்கிறீர்களா... வாருங்கள் ! தமிழ் தாயின் பாலைப் பருகினீர்களா.... வாருங்கள் ! ஒரு உண்மையான தமிழனா.... வாருங்கள் ! ஒரு வீரத் தமிழ் தாய்க்குப் பிறந்தால் வாருங்கள் ! இலங்கை அறிவித்திருக்கும் சிங்கள மாவீரர் தினத்தின் முகமூடியைக் கிழிக்கவாருங்கள் ! ஒன்று திரள்வோம் வாருங்கள், ஒன்றாய் நிற்போம் வாருங்கள் . உரக்கச் சொல்வோம் வாருங்கள்.
குவியவேண்டும் 2 லட்சம் மக்கள் பாராளுமன்ற சதுக்கத்தில் ! பிரித்தானியாவே எம்மை திரும்பி பார்க்கவேண்டும் ! நடைபெற்ற இனப் படுகொலை வெளிச்சத்துக்கு வரவேண்டும் ! முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி கிடைக்கவேண்டும், அணி திரளுவோம் பிரித்தானிய பாராளுமன்றம் முன்பாக ! இனப்படுகொலைகளை உலகறியச் செய்யும் பிரித்தானிய தமிழர் பேரவையுடன் தமிழர்கள் ஒன்றினைந்து மாபெரும் சக்தியாக உரக்கச் சொல்வோம் இலங்கை அரசு பயங்கரவாதிகள் என்று ! .....
நடைபெற உள்ள மே 18 பேரெழுச்சியைக் குழப்ப விஷமிகளால் சில கட்டுக்கதைகல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பொது மக்கள் எதனையும் நம்பவேண்டாம், அமைதியான முறையில் மிகவும் ஒழுங்கான முறையில் இந்த எழுச்சி நாள் நடைபெற உள்ளதாக ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 9939
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக