திங்கள், 17 மே, 2010

இலங்கை அதி​பர் ராஜ​பட்ச ஜூன் 8-ல் இந்​தியா வருகை



தெஹ் ​ரான்,​​ மே 16:​ இலங்கை அதி​பர் ராஜ​பட்ச ஜூன் 8-ம் தேதி இந்​தி​யா​வில் சுற்​றுப் பய​ணம் மேற்​கொள்ள உள்​ளார்.​ அதி​ப​ரின் பயண திட்​டத்தை அந்​நாட்டு வெளி​யு​றவு அமைச்​சர் ஜி.எல்.​ பெரிஸ் தெரி​வித்​தார்.÷÷தெஹ் ​ரா​ஹின் நடை​பெ​றும் ஜி-​15 நாடு​க​ளின் அமைச்​சர்​கள் கூட்​டத்​தில் பங்​கேற்க வந்​தி​ருந்த பெரிஸ்,​​ மத்​திய வெளி​யு​றவு அமைச்​சர் எஸ்.எம்.​ கிருஷ்​ணாவை சந்​தித்​துப் பேசி​னார்.​ அப்​போது அவர் இத்​த​வ​லைத் தெரி​வித்​தார்.​ இரு​வ​ரி​டை​யி​லான பேச்​சு​வார்த்தை சுமார் 30 நிமி​ஷம் நடை​பெற்​றது.​÷க​டந்த ஜன​வரி மாதம் இலங்​கை​யில் நடை​பெற்ற பொதுத் தேர்த​லில் வெற்றி பெற்ற பிறகு முதல் முûறா​யாக அவர் இந்​தி​யா​வுக்கு வர உள்​ளது குறிப்​பி​டத்​தக்​கது.​÷திம் ​பு​வில் நடை​பெற்ற தெற்​கா​சிய நாடு​கள் கூட்​ட​மைப்பு ​(சார்க்)​ மாநாட்​டில் பிர​த​மர் மன்​மோ​கன் சிங்​கும்,​​ இலங்கை அதி​பர் ராஜ​பட்​ச​வும் சந்​தித்​துப் பேசி​னர்.​÷வி​டு​த​லைப் புலி​கள் முற்​றி​லு​மாக அழிக்​கப்​பட்ட பிறகு முகாம்​க​ளில் தங்க வைக்​கப்​பட்​டுள்ள பொது​மக்​களை மீண்​டும் குடி​ய​மர்த்​தும் பணி​களை விரை​வு​ப​டுத்​து​வது குறித்து அமைச்​சர் எஸ்.எம்.​ கிருஷ்​ணா​வும்,​​ இலங்கை அமைச்​சர் பெரி​ஸýம் விவா​தித்​த​னர்.​ உள்​நாட்டு போரி​னால் பாதிக்​கப்​பட்ட இலங்​கையை சீர​மைக்க இந்​தியா ரூ.​ 500 கோடி நிதி உதவி அளித்​துள்​ளது.​÷மு​காம்​க​ளில் தங்க வைக்​கப்​பட்​டி​ருந்த 2.9 லட்​சம் பேரில் 2 லட்​சம் பேர் ஏற்​கெ​னவே அவர்​க​ளது குடி​யி​ருப்​பு​க​ளுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​ட​னர் என்​றும்,​​ எஞ்​சி​ய​வர்​களை மறு குடி​ய​மர்வு செய்​வ​தற்​கான நட​வ​டிக்​கை​கள் துரி​த​மாக மேற்​கொள்​ளப்​பட்டு வரு​வ​தாக கிருஷ்​ணா​வி​டம் பெரிஸ் தெரி​வித்​தார்.​÷க​டந்த 20 நாள்​க​ளில் இரு அமைச்​சர்​க​ளும் சந்​தித்​துப் பேசிக் கொள்​வது இது இரண்​டா​வது முறை​யா​கும்.​ கடந்த முறை திம்​பு​வில் நடை​பெற்ற சார்க் மாநாட்​டின்​போது இரு​வ​ரும் சந்​தித்​துப் பேசி​யது குறிப்​பி​டத்​தக்​கது.​÷இந்​தியா வரும் அதி​பர் ராஜ​பட்ச,​​ இரு தரப்பு உற​வு​கள் மற்​றும் இந்​தி​யா​வு​டன் இணைந்து மேற்​கொள்ள வேண்​டிய திட்​டப் பணி​கள் குறித்து விவா​திப்​பார் என்று தெரி​கி​றது.
கருத்துக்கள்

தமிழ் இனப்பகையாளிக்குக் கூட்டுக் கொலையாளி என்ற முறையில் இந்தியா சிறப்பான வரவேற்பு அளிக்கும். அதில் மானங்கெட்ட தமிழக அரசியல் வாதிகளும் இடம் பெறுவர். எந்த நாட்டிலு்ம் இல்லாத கொடுமை இந்த நாட்டில்தான் நடைபெறுகிறது. என் செய்வது? தமிழ் மக்ள நாதியற்றவர்கள்; அவர்களுக்கு எதிராக யார் என்ன செய்தாலும் சேட்பதற்கு யாரும் இல்லை என்பதுதான் வரலாறு கூறும் உண்மையாக உள்ளதே! இந்திய ஆட்சியை மாற்றுவோம்! ஈழத் தமிழர் உரிமையை மீடடுத்தருவோம்! அவலத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/17/2010 3:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக