தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாட்டில் புலவர் இரா.இளங்குமரனார் (இடமிருந்து 4-வது) தொகுத்த தமிழ் வரிவடிவ சீர்திருத்தமா சீரழிப்பா
புதுச் சேரி, மே 16: தமிழ் எழுத்து வடிவ மாற்றம் கொண்டு வந்தால் தமிழ் அறிந்தவர்கள் மீண்டும் புதிய தமிழை படிக்க வேண்டும் என்று தமிழறிஞர் ஆர்.இளங்குமரனார் தெரிவித்துள்ளார்.÷புதுச் சேரியில் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் அமைப்பு சார்பில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு, புதுவை வணிக அவையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.÷இதில் ஆர்.இளங்குமரனார் பேசியது: தமிழக அரசு வரும் ஜூன் மாதத்தில் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்த உள்ளது.÷இதில் தமிழ் மொழியில் எழுத்து சீர்திருத்தம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என செய்தி வெளியாகியுள்ளது. அவ் வாறு சீர்திருத்தம் கொண்டு வந்தால் தமிழ் அறிந்தவர்கள் மீண்டும் புதிய தமிழை படிக்க வேண்டிய நிலை உள்ளது. தமிழில் குறைந்த கல்வியறிவு பெற்றவர்கள் முற்றிலும் கல்லாதவர்களாக மாற நேரும்.÷தமிழக அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உலக அளவில் தமிழ் அறிஞர்களும், கணினி வல்லுநர்களும் இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.÷தமிழக அரசு இது குறித்து எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை. தமிழ் எழுத்தை மாற்றும் முயற்சியில் முன்னாள் துணை வேந்தர் வா.செ.குழந்தைசாமி முதன்மையாக உள்ளார்.÷அ வர் எழுதியுள்ள கட்டுரையின்படி உயிர் மெய் இகர, ஈகரஸ உகர, ஊகர எழுத்துக்கள் 72-க்கும் மாற்றாக குறியீடுகளுடன் கூடிய எழுத்துக்கள் பயன்படுத்த வேண்டுமென அறிகிறோம்.÷இதன்படி எழுத்து மாற்றம் செய்தால் தமிழ் மொழி அறிவியல் மொழியாகவும், கணினியில் எளிதில் பயன்படக்கூடிய மொழியாகவும், வளர்ச்சி பெறும் என்று கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.÷72 எழுத்துக்களில் மாற்றம் என்பது தமிழில் 59 சதவீதம் மாற்றத்தை ஏற்படுத்தம் என்று ஆய்வாளர்கள் கணக்கிட்டு கூறியுள்ளனர். 59 சதவீத எழுத்து மாற்றம் தமிழ் மொழியையே மாற்றிவிடும்.÷இத னால் தமிழில் ஏற்கெனவே உள்ள பல்லாயிரக்கணக்கான அரிய நூல்களும், இணையதளத்தில் உள்ள பல்துறை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்கங்களில் உள்ள செய்திகளும் பயனற்று போகும்.÷உலக அளவில் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் இந்த எழுத்து மாற்றம் தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும். தமிழ்நாட்டு தமிழர்களை உலகத் தமிழர்களிடமிருந்து தனிமைப்படுத்தும்.÷இதனால் தமிழ் மொழியின் வளர்ச்சி பின்னடையும் என்பதோடு, தமிழர்களின் நிலை மேலும் பின் தள்ளப்படும். எழுத்து மாற்றம் குறித்து வற்புறுத்துவோர் கூறும் காரணங்கள் எதுவும் ஏற்கும்படியாக இல்லை.÷எழுத்து மாற்றத்தால் கணிப்பொறியில் உழைப்பு குறையும், விரைவாக செயல்பட முடியும் என கூறப்படும் கருத்தை கணினி வல்லுநர்கள் சான்றுகளுடன் மறுத்துள்ளனர்.÷தமிழ் எழுத்து வடிவத்தில் மாற்றம் கொண்டு வர எவ்வித காரணமும் இல்லாதபோது, தமிழக அரசு இவ்வாறாக முயற்சி மேற்கொள்வது தமிழ் மீது கொண்டுள்ள பற்று காரணமல்ல.÷மாறாக பல்வேறு அரசியல் காரணங்களுக்காகவும், தன்னல விளம்பரங்களுக்காகவும் தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.÷எழுத்து மாற்றம் செய்யவேண்டுமானால் பல்துறை சேர்ந்த அறிஞர்கள் கொண்ட குழு அமைத்து, மிக நுணுக்கமாக ஆராய்ந்து படிப்படியாக மக்கள் ஏற்கும்படி செய்ய வேண்டும். ÷அதை விடுத்து அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது போல் தமிழ் எழுத்து மாற்றம் செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.÷இவர் எழுதிய தமிழ் வரிவடிவ சீர்த்திருத்தமா சீரழிப்பா என்ற நூலை பேராசிரியர் ம.லெ.தங்கப்பா வெளியிட, மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் பெற்றுக் கொண்டார்.÷விடியோ கான்பரன்சிங் முறையில் அமெரிக்காவில் உள்ள தமிழ்மணம் வலைப்பதிவுகளின் திரட்டியின் நிர்வாகி சொ.சங்கரபாண்டி, செüதி அரேபியாவில் உள்ள பொறியாளர் நாக.இளங்கோவன் உள்ளிட்டோர் பேசினர்.÷புதுவை வலைப்பதிவர் சிறகம் ஒருங்கிணைப்பாளர் ரா.சுகுமாரன், பேராசிரியர் நா.இளங்கோ, மென்பொருள் வல்லுநர் க.அருணபாரதி, பொறியாளர் மு.மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்
உண்மையான கருத்து. வரிவடிவச் சிதைவு என்பது நம் வாழ்விற்கு அழிவு என்பதைஉணர வேண்டும். தமிழ் இணையப்பல்கலைக்கழகங்களில் விதிமுறைக்கு மாறாக எழுத்துச் சீரழிப்பு குறித்து விளம்பரப்படுத்துவதையும் உடனே நிறுத்த வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/17/2010 3:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 5/17/2010 3:24:00 AM