புது தில்லி, மே 16: இந்தியாவில் 100 தீவிரவாதக் குழுக்களுக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.இந் தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாதக் குழுக்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சம் தயாரித்துள்ளது. இதில் 100 தீவிரவாதக் குழுக்கள் இடம்பெற்றுள்ளன.இதில் பஞ்சாபை பிரித்து தனி காலிஸ்தான் மாநிலத்தை உருவாக்க வலியுறுத்தி போராடி வரும் பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (பிகேஐ), காலிஸ்தான் கமாண்டோ படை (கேசிஎப்), சர்வதேச சீக்கிய இளைஞர்கள் சங்கம் (ஐஎஸ்ஒய்எப்) ஆகிய 3 தீவிரவாதக் குழுக்கள் முக்கியமானவை.தவிர, லஷ்கர் இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, தெஹ்ரிக்-இ-பர்கான், ஜமியாத்-உல்-முஜாகிதீன், அல்-காய்தா, ஹர்கத்-உல்-முஜாகிதீன், ஹர்கத்-உல்-அன்சர், ஹர்கத்-உல்-ஜிகாத்-இ-இஸ்லாமி, ஹிஸ்புல் முஜாகிதீன், அல்-உமர்-முஜாகிதீன், ஜம்மு-காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி, உல்பா, என்டிஎப்பி, விடுதலைப் புலிகள் அமைப்பு (எல்டிடிஈ), சிமி உள்ளிட்டவையும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.தீவி ரவாத நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் விதத்தில் சட்டவிரோத செயல்களை தடுக்கும் சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் திருத்தி அமைத்தது. இந்த சட்டத்தின் கீழ் இந்தத் தீவிரவாதக் குழுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மத் திய அரசின் இந்த நடவடிக்கை, தீவிரவாதிகளுக்கு எதிரான வழக்கை பாதுகாப்பு அமைப்புகள் திறன்பட நடத்த உதவியாக இருக்கும் என்று பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.தடை செய்யப்பட்ட தீவிரவாதக் குழுக்கள் பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்வது அவசியம். இதனால் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாதக் குழுக்கள் பட்டியல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருத்துக்கள்
100 தீவிரவாதக் குழுக்கள் உள்ளன எனில் நாட்டில் ஆட்சி மிகவும் புரையோடிப் போய் உள்ளது என்பது தெரிகிறது. தடை செய்வதையே சாதனையாக எண்ணாமல் நாட்டு மக்களின் வறுமை, வேலையின்மை முதலியவற்றைப் போக்கவும் ஊழலை அடியோடு ஒழிக்கவும் சமநிலைக் கூட்டரசாக இந்தியக் கண்டத்தை மாற்றவும் முன்வரவேண்டும். மேலும் தீவிர வாதம் என்பது வேறு; வன்முறைச் செயல்பாடு என்பது வேறு; மக்கள் உரிமைக்காகப் போராடுவது என்பது முற்றிலும் வேறு; அயல்நாட்டுக் கைக்கூலிகளாகச் செயல்பட்டு நாட்டைச் சிதைப்பது என்பது அனைத்திலும் வேறுபட்டது. எனவே, எல்லாவற்றையும் ஒத்த அளவில் மதிப்பிடாமல் வேறுபாடுகளை அறிந்து வெவ்வேறு முறைகளில் சிக்கல்களைக் கையாண்டால் பாழ்செய்யும் உட்பகையை நீக்கலாம். எல்லாவற்றிற்கும் மூலமாக அமைவது அரசே பயங்கரவாத வன்முறைக் குழுவாகச் செயல்படும் கொடுமை என்பதை உணர்ந்து அதை நிறுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்