காலமானார் எழுத்தாளர் அனுராதா ரமணன் First Published : 17 May 2010 01:16:16 AM IST Last Updated : சென்னை, மே 16: பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் (62) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த அனுராதா ரமணன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 850 நாவல்களையும் எழுதியுள்ளார். சிறை, ஒரு வீடு இரு வாசல், கூட்டுப் புழுக்கள் ஆகிய இவருடைய நாவல்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. எழுத் துத் துறையில் சிறந்து விளங்கியதற்காக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடமிருந்து தங்கப் பதக்கம் மற்றும் சிறந்த எழுத்தாளருக்கான ராஜீவ் காந்தி விருது என பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார். கடந்த சில நாள்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த இவர், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தா
5/17/2010 3:16:00 AM
புகழ் பெற்ற எழுத்தாளராக இருந்தும் செயேந்திரன் என்னும் போலிச்சாமியாரால் அல்லல்பட்டுத் துன்புற்று இடர்ப்பட்டு இன்னலுற்று ஆற்றாது அழுத போது உதவுவார் யாருமின்றித் தன்னம்பிக்கையுடன் மீண்டு எழுந்தவர். அவர் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவர் திட்டமிட்டடவற்றைத் தொடர்ந்து முடித்திடுக.
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
5/17/2010 3:12:00 AM
இத் துயரினை உம குடும்பத்தினருடன் ..இலக்கிய உலகத்தினருடன் பகிரிந்து கொள்கிறேன் !...எழுத்துலகில் நிகரற்ற உமது படைப்புக்களின் மூலம் உமது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் !..உமது ஆன்மா என்றென்றும் அமைதியில் நிலைத்து உய்வடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் !!!
5/17/2010 3:00:00 AM