டோரன்டோ, மே 15- விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்ததாக கனடாவில் கைதான இலங்கைத் தமிழருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபாகரன் தம்பித்துரை (46) என்னும் அவர் புலிகளுக்கு நிதி அனுப்பிய குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2008 மார்ச் மாதம் கனடாவில் கைது செய்யப்பட்டார்.
கனடா உச்சநீமன்றத்தில் அவருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது என்றும், இதில், தம்பித்துரைக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி ராபர்ட் பவர்ஸ் உத்தரவு பிறப்பித்தார் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இதனிடையே பசியால் வாடுகின்ற மக்களுக்கு தனது கணவர் உதவியதற்காகவே அவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உலகம் விரைவில் உண்மையை உணரும் என்று தம்பித்துரையின் மனைவி கருத்துத் தெரிவித்துள்ளார் என்றும், இத்தீர்ப்பின் மூலம் கனடிய நீதித்துறை தவறிழைத்துள்ளதாக லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறு்பபினர் உஜால் டொசாஜ் விமர்சித்துள்ளார் என்றும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளின் கூட்டுப் பயங்கர வன்முறைகளில் பாதிக்கப்படும் மக்களுக்காகவும் அவ்வன்முறைகளில் இருந்து காக்கும் காப்பாளர்களுக்காகவும் உதவுவது பெரிதும் போற்றப்பட வேண்டிய செயல். இதற்குத் தண்டனை வழங்குவது என்பது அறமற்ற செயல். உலக மக்களே விழித்தெழுந்துஉண்மையின் பக்கம் நில்லுங்கள். சாலியன் வாலாபாக் படுகொலைகளை இன்றும் கண்டித்துக் கொண்டிருக்கும் நாட்டின் மூளையுடனும் துணையுடனும் எரிகுண்டுகளாலும் கொத்துக் குண்டுகளாலும் எரிகணைகளாலும் ஏவுகணைகளாலும் கூட்டம் கூட்டமாக நூறாயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஈழத்தில் படுகொலை செய்யப்பபெற்ற உலகத் துயர நாள் நாளை வருகையில் அதைக்கூட உணராமல் வழங்கப்படும் தண்டனை முறையற்ற்தே! விரமரணம் உற்ற போராளிகளுக்கும் மக்களுக்கும் அஞ்ச்லி! வாழ்வுரிமை இழந்தவர்களுக்கு இழந்த உரிமையை மீட்டு வளமான வாழ்வு பெற நம் துணையுண்டு என்னும் நம்பிக்கை அளிப்போம். உலக நாடுகளில் உள்ள போற்றுதலுக்குரியவர்களைத் தண்டிக்கும் சட்டங்களை நீக்க வலியுறுத்துவோம்! வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
5/16/2010 2:26:00 AM