war crimes day லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
war crimes day லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 மே, 2010

இலங்கையில் கனமழை:​ வெற்றிவிழா ரத்து

கொழும்பு, ​​ மே 18:​ இலங்கையில் கன மழை பெய்து வருகிறது;​ இதனால் கொழும்பு நகரையும் அதை ஒட்டிய 5 மாவட்டங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.​ இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்த போர் வீரர்கள் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியும் 20-ம் தேதி ​(வியாழன்)​ காலியில் நடைபெறுவதாக இருந்த விடுதலைப் புலிகளை ஒடுக்கியதைக் கொண்டாடும் வெற்றி விழாவும் ரத்து செய்யப்படுவதாக அரசு அதிகாரி அறிவித்தார்.கொழும்பு நகரிலேயே பல பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.​ தண்ணீரை வெளியேற்ற வழியில்லாமல் அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருக்கிறது.​ ​கொழும்பிலிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்லும் இணைப்புச் ​ சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் தேங்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது.கட்டுநாயக விமான நிலையத்துக்குச் செல்ல முடியாதபடிக்கு அந்தச் சாலையும் தண்ணீரில் மூழ்கியிருப்பதால் வெளிநாட்டுக்குச் செல்லும் விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் செல்கின்றன.​ ​ பயணிகள் பயண நேரத்துக்கு 4 மணிநேரம் முன்னதாகவே விமான நிலையம் வந்து சேரும்படி அதிகாரிகள் கோரியுள்ளனர்.ரத்மலானை விமான நிலையத்தை இலங்கை விமானப்படைதான் பயன்படுத்துகிறது.அந்த விமான நிலையத்திலும் தண்ணீர் தேங்கி விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.இந்த மழை மேலும் சில நாள்களுக்கு நீடிக்கும்,​​ மழை இதற்கு மேல் வலுக்காது என்றாலும் இதே அளவில் தொடரக்கூடும் என்று அந்த நாட்டு தலைமை வானிலை அதிகாரி கரியவாசம் தெரிவிக்கிறார்.இலங்கையின் மேற்கில் உள்ள மாவட்டங்களில் 45,775 குடும்பங்களைச் சேர்ந்த 1,92,075 பேர் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக இயற்கைப் பேரிடர் நிர்வாக அமைச்சகம் தெரிவிக்கிறது.செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்த இலங்கை நாடாளுமன்ற கூட்டம் மழை காரணமாகவே ரத்து செய்யப்பட்டது.யாழ்ப்பாணத்துக்கு புறத்தே 600 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் பெரும் புயலாக உருவெடுக்கக்கூடும் என்று கரியவாசம் இலங்கை அரசை எச்சரித்திருக்கிறார்.​ அதே சமயம் இந்தப் புயல் இலங்கையைத் தாக்காது என்றும் கூறியிருக்கிறார்.ராணுவத்துடனான போரில் விடுதலைப் புலிகளுடன் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களும் இறந்தார்கள்.​ அவர்கள் இறந்து ஓராண்டு பூர்த்தியாவதை ஒட்டி அவர்களுடைய நினைவு நாளை துக்க தினமாகக் கடைப்பிடிக்க தமிழ் தேசிய கூட்டணி சார்புள்ள அரசியல் அமைப்பினர் அழைப்பு விடுத்தனர்.இலங்கை அரசின் ஒடுக்குமுறைக்கு அஞ்சியோ அல்லது அன்றாடமே நமக்கு துக்க தினமாக இருக்கும்போது இந்த ஒருநாளை மட்டும் அப்படி அறிவித்துக் கடைப்பிடிப்பானேன் என்று நினைத்தோ தமிழர்கள் அன்றைய தினத்தில் வெளிப்படையாக பொது நிகழ்ச்சி எதிலும் பங்கேற்கவில்லை.இருபதாண்டுகளாய் வேதனையைத் தவிர வேறு எதையுமே அனுபவித்திராத இலங்கைத் தமிழ் இனம் அழுதழுது கண்ணீர் வற்றிவிட்டதால்,​​ அவர்களுக்குப் பதிலாக இயற்கையே அழுவதைப் போல இருக்கிறது இடைவிடாத இந்த மழை.
கருத்துக்கள்

இயற்கைக்கு நன்றி. ஒரு வேளை ஈழத்தமிழர்களின் துயர நிலைகண்டு கையறு நிலையில் வானும் அழுததோ! அதனால் வான்மழையும் பெய்ததோ! கடவுள் மீது நம்பிக்கை வைத்திருந்தும் நூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் இனவெறி, பதவி வெறி, பண வெறி, அதிகார வெறி அரசுகளால் கூட்டம் கூட்டமாக வஞ்சகமாகக் கொல்லப்பட்ட பொழுது் தடுக்க ஆற்றலின்றியும் தெய்வம் நின்று கொல்லும் என்னும் மக்கள் நம்பிக்கையை மெய்ப்பிக்க முடியாது வலிமையின்றியும் உள்ள பல்சமயக் கடவுளர் கூட்டம் அழுததால் தோன்றியதோ விண்மழை! எவ்வாறிருப்பினும் இந்திய சிங்கள வெற்றிக் கனவு பொய்த்ததற்கு நன்றி. இதே போல் இந்தியத் திரைப்பட விழாவும் நிற்கட்டும்! வீரப் போரில் வாழ்விழந்தவர்களுக்கு நம் அஞ்ச்லி! வாழ்வுரிமை இழந்தவர்களுக்கு ஆறுதலுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/19/2010 4:24:00 AM

Nature knows what is wrong and what is correct ;we all part of the nature. Nature will change if any one do wrong doing and abuse the system.Ethopia is one the rich country in the world about 500 years age. Now they beg for the food. China was poor about 500years age. Now, the super power china is the rich around the world. American, and England borrow money from china. It is nature. We'll see what will happen in future for us.

By kaddapoman
5/19/2010 3:23:00 AM

there is god,GHHEERS

By raj
5/19/2010 2:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

திங்கள், 17 மே, 2010

வேலைக்கு மொழி முக்​கி​ய​மில்லை; இடத்​துக்கு தகுந்​த​படி மொழியை தேர்ந்​தெ​டுங்​கள்: இரா.​ பாவா​ணன்



விழுப் ​பு​ரம்,​​ மே 16: ​ ஒரு குறிப்​பிட்ட மொழியை படித்​தால்​தான் வேலை கிடைக்​கும் என்று கருத்து நில​வு​கி​றது.​ ஒரு​வர் வேலை செய்ய வேண்​டிய இடத்தை முடிவு செய்​த​பி​றகு அதற்கு தகுந்​த​படி மொழியை தேர்ந்​தெ​டுத்​துக் கொள்​ள​லாம் என்று தமி​ழர் எழுச்​சிப் பெரு​நாள் பொதுக்​கூட்​டத்​தில் புதுக்​கோட்டை இரா.​ பாவா​ணன் தெரி​வித்​தார்.​இ ​லங்கை முள்​ளி​வாய்க்​கால் நினைவு தினத்தை தமி​ழர் எழுச்​சிப் பெரு​நாள் விழா​வாக விழுப்​பு​ரத்​தில்,​​ பெரி​யார் சிலை அரு​கில் ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்​றது.​ முள்​ளி​வாய்க்​கால் மண் வைக்​கப்​பட்​டி​ருந்த கண்​ணாடி பேழைக்கு அஞ்சலி செலுத்​தி​னார் பாவா​ணன்.​பின் ​னர் அவர் பேசி​யது:​ இந்தி படித்​தால் வேலை​கி​டைக்​கும் என்​றால்,​​ ரூ.​ 100 கூலிக்கு பிகாரி​லி​ருந்து நூற்​றுக்​க​ணக்​கா​ன​வர்​கள் தமி​ழ​கம் வந்து வேலை செய்ய வேண்​டிய அவ​சி​யம் இல்லை.​தற்​போது கொரியா படித்​தால் வேலை,​​ அரபு படித்​தால் வேலை என்று விளம்​ப​ரங்​கள் வரு​கின்​றன.​ யார் எந்த நாட்​டுக்கு போக விரும்​பு​கி​றார்​களோ அவர்​கள் அந்த மொழியை படிக்​கட்​டும்.​நம் முன்​னோர்​கள் யவ​னத்​துக்​கும்,​​ கிரேக்​கத்​துக்​கும் சென்று வெற்​றி​க​ர​மாக வணி​கம் செய்து வந்​தார்​களே அவர்​கள் என்ன அந்த மொழி​யையா படித்​தார்​கள்.​தி ​ரு​வண்​ணா​மலை மாவட்​டத்​தில் சாத்​த​னூர் அணை​யில் திரைப்​ப​டங்​கள் அதி​கம் எடுப்​பார்​கள்.​ இத​னால் அங்கு சுற்​று​லாப் பய​ணி​கள் அதி​கம் வந்​த​னர்.​ அவர்​கள் கொண்டு வந்த உண​வின் மிச்​சங்​களை சாப்​பிட அங்கு நாய்​கள் அதி​கம் குவிந்​தன.​ அவை பல்​கிப் பெரு​கி​விட்​டன.​இ​த​ னால் சுற்​று​லாப் பய​ணி​க​ளுக்கு பெரும் தொல்​லை​யாக இருந்​த​தால்,​​ அவற்றை சுட்​டுக் கொல்ல,​​ மாவட்ட நிர்​வா​கம் முடி​வெ​டுத்து,​​ 40 நாய்​களை சுட்​டுக் கொன்​றது.​அப்​போது பெங்​க​ளூரி​லி​ருந்து வந்​தி​ருந்த பயணி ஒரு​வர் புளு​கி​ராஸ் உறுப்​பி​னர்,​​ அவர் அந்த காட்​சியை படம்​பி​டித்து நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்து விட்​டார்.​ இப்​போது மாவட்ட நிர்​வா​கம் அச்​சத்​தில் உள்​ளது.​நாய்​க​ளுக்​ குக் கூட குரல் கொடுக்க ஒரு​வர் உள்​ளார்,​​ ஒரு அமைப்பு உள்​ளது,​​ ஆனால் லட்​சக்​க​ணக்​கான தமி​ழர்​கள் இலங்​கை​யில் கொல்​லப்​பட்​டதை கேட்க நாதி​யில்​லா​மல் போனதே என்​றார்.​முன்​ன​தாக தமி​ழி​ளை​ஞர் கூட்​ட​மைப்பு பா.​ ஜோதி​ந​ர​சிம்​மன்,​​ குமார் ஆகி​யோ​ரின் குறு​நா​ட​கங்​கள் நடை​பெற்​றன.​ எழில்.​ இளங்கோ வர​வேற்​றார்.
கருத்துக்கள்

சாலியன் வாலாபாக் படுகொலை பற்றி இன்றைக்கும் அழுது கண்டித்துக் கொ்ணடிருக்கும் இந்தியா தன் முழு வல்லாண்மைஒத்துழைப்புடன் எரி குண்டுகள், கொத்துக் குண்டுகள், வேதியல் குண்டுகள், ஏவுகணைகள், படைத்தலைவர்கள், படைக்கலன்கள் அளித்து நாட்டு விடுதலைக்காகப் போரிட்ட மண்ணின் மைந்தர்களையும் நூறாயிரம் அப்பாவிப் பொதுமக்களையும் கொன்றொழித்து இனப்படுகொலை செய்த பெருந்துயர நாள் இன்று. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்! வாழ்விழந்தவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதி யளிப்போம்! உலகின் முதல் இனம் தன் தாய்நிலத்தில் அழிக்கப்படும் கொடுமைக்கு முடிவுகட்டுவோம்!

துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/17/2010 2:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

ஞாயிறு, 16 மே, 2010

கனடாவில் கைதான இலங்கைத் தமிழருக்கு 6 மாத சிறை



டோரன்டோ, மே 15- விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்ததாக கனடாவில் கைதான இலங்கைத் தமிழருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபாகரன் தம்பித்துரை (46) என்னும் அவர் புலிகளுக்கு நிதி அனுப்பிய குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2008 மார்ச் மாதம் கனடாவில் கைது செய்யப்பட்டார்.

கனடா உச்சநீமன்றத்தில் அவருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது என்றும், இதில், தம்பித்துரைக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி ராபர்ட் பவர்ஸ் உத்தரவு பிறப்பித்தார் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதனிடையே பசியால் வாடுகின்ற மக்களுக்கு தனது கணவர் உதவியதற்காகவே அவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உலகம் விரைவில் உண்மையை உணரும் என்று தம்பித்துரையின் மனைவி கருத்துத் தெரிவித்துள்ளார் என்றும், இத்தீர்ப்பின் மூலம் கனடிய நீதித்துறை தவறிழைத்துள்ளதாக லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறு்பபினர் உஜால் டொசாஜ் விமர்சித்துள்ளார் என்றும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

பல நாடுகளின் கூட்டுப் பயங்கர வன்முறைகளில் பாதிக்கப்படும் மக்களுக்காகவும் அவ்வன்முறைகளில் இருந்து காக்கும் காப்பாளர்களுக்காகவும் உதவுவது பெரிதும் போற்றப்பட வேண்டிய செயல். இதற்குத் தண்டனை வழங்குவது என்பது அறமற்ற செயல். உலக மக்களே விழித்தெழுந்துஉண்மையின் பக்கம் நில்லுங்கள். சாலியன் வாலாபாக் படுகொலைகளை இன்றும் கண்டித்துக் கொண்டிருக்கும் நாட்டின் மூளையுடனும் துணையுடனும் எரிகுண்டுகளாலும் கொத்துக் குண்டுகளாலும் எரிகணைகளாலும் ஏவுகணைகளாலும் கூட்டம் கூட்டமாக நூறாயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஈழத்தில் படுகொலை செய்யப்பபெற்ற உலகத் துயர நாள் நாளை வருகையில் அதைக்கூட உணராமல் வழங்கப்படும் தண்டனை முறையற்ற்தே! விரமரணம் உற்ற போராளிகளுக்கும் மக்களுக்கும் அஞ்ச்லி! வாழ்வுரிமை இழந்தவர்களுக்கு இழந்த உரிமையை மீட்டு வளமான வாழ்வு பெற நம் துணையுண்டு என்னும் நம்பிக்கை அளிப்போம். உலக நாடுகளில் உள்ள போற்றுதலுக்குரியவர்களைத் தண்டிக்கும் சட்டங்களை நீக்க வலியுறுத்துவோம்! வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/16/2010 2:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

ஞாயிறு, 9 மே, 2010

மே 18 – போர்க் குற்றவியல் நாளாக பிரகடனம் – தமிழீழ மக்கள் அவை


கருவிப்பட்டை
PathivuToolbar ©2010thamizmanam.com

மே 18 நாளை போர்க் குற்றவியல் நாளாக தமிழீழ மக்கள் அவையின் அனைத்துலகச் செயலகம் பிரகடனப்படுத்துகிறது…..

21.04.2010

அன்பார்ந்த தமிழ் ௨றவுகளே,

மே 18… சிங்கள தேசம் எங்கள் மக்கள் மீது நிகழ்த்திய கொடூர யுத்தத்தின் இறுதி நாள்… கொத்துக் குண்டுகளும், எங்கள் மக்கள் மீது கொடூர நச்சுக் குண்டுகளும் பரீட்சித்துப் பார்த்த நாள்… எங்கள் மக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரோடு புதைக்கப்பட்ட நாள்…

மே 18… எங்கள் நெஞ்சங்களை ரணமாக்கிய நாள்… பூக்களும், பிஞ்சுகளும், காய்களும், பழங்களுமாய் பூத்துக் குலுங்கிய எங்கள் தேசத்து ஆலம் விருட்சம் வேரோடு சாய்க்கப்பட்ட கரி நாள்… உயிர் காக்க, உடல் தெறிக்க ஓடிய எம் பாசத்திற்குரிய மக்கள் சிங்களம் வீசிய குண்டுகளுக்கு வீழ்ந்து கருகிய நாள்…

மே 18… மனிதமே வெட்கித் தலைகுனிய மானிட தர்மம் நிலை குலைய விடுதலை வேண்டிய தமிழர்கள் வீழ்ந்து சாய்ந்த நாள்… மிருகவதைச் சட்டம் போட்டு விலங்குகளுக்கும் காவலர்களாய் நின்ற, அகில உலகமும் வேடிக்கை பார்க்க, எமது மக்கள் சிங்களத்தால் வேட்டை ஆடப்பட்டு குருதி சிந்திய நாள்…

மே 18… நாகரீக உலகில், நமக்கு மட்டும் சுதந்திரம் மறுக்கப்பட்டது… வாழும் மனிதர்கள் போல் வாழ விரும்பிய ஈழத் தமிழர்கள் இழி நிலைக்குள் தள்ளப்பட்ட கொடூர நாள்… விடுதலை எமக்கு மீண்டும் மறுக்கப்பட்ட நாள்…

எங்கள் மக்கள்மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லும் நாளாக இந்த மே 18-ம் நாளை போர்க் குற்றவியல் நாளாகத் தமிழீழ மக்கள் அவை பிரகடனப்படுத்துகின்றது.

எங்கள் தேசத்து மக்களின் சுதந்திர தாகத்தை முற்றாகத் துடைத்தெறிய… சிங்களம் திட்டமிட்டு நடாத்திய இனப் படுகொலையை நாம் மறந்துவிட முடியுமா…? முள்ளிவாய்க்காலில் எமது மக்களின் மூச்சு நிறுத்தப்பட்டதை உலகத் தமிழினம் மறந்துவிட முடியுமா…? மே 16 முதல் 18 வரை ஈழத் தமிழர்களுக்கு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களை மனித குலம் மறந்துவிட முடியுமா…?

எனவே, இந்தக் கொடூர நாளை சிங்கள அரசின் அதி உச்ச «போர்க் குற்றவியல் நாள்» என்று ஈழத் தமிழர்கள் சார்பில் தமிழீழ மக்கள் அவையினர் பிரகடனப்படுத்துகின்றனர்.

1) சர்வதேசங்களினால் தடை செய்யப்பட்ட நச்சுக் குண்டுகளையும், எரிகுண்டுகளையும் பாவித்து பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தது,

2) பாதுகாப்பு வலையங்களாக அறிவித்து, மக்களை அங்கே வரவழைத்து, அவர்கள்மீது விமானக் குண்டுகளையும், எறி கணைகளையும் இரவு பகலாக வீசி இன அழிப்பு நடாத்தியது,

3) பாதுகாப்புத் தேடிப் பதுங்கு குழிகளுக்குள் பதுங்கியிருந்த மக்களை ஈவிரக்கமில்லாமல் உயிரோடு மண்மூடிப் புதைத்தது,

4) காயப்பட்ட, அங்கவீனப்பட்ட மக்கள்மீதும், போராளிகள் மீதும் கனரக வாகனங்களை ஏற்றிக் கதறக் கதற நெரித்துக் கொன்றது,

5) வெள்ளைக் கொடியுடன் நிராயுதபாணிகளாக வருமாறு கூறி, அவ்வாறு வந்த போராளிகளை இரக்கமின்றிச் சுட்டுக் கொன்றது,

6) காயப்பட்டுக் களத்தில் வீழ்ந்த பெண் போராளிகள் மீது மிருகத் தனமாகப் பாலியல் கொடும் வதை புரிந்து, அவர்களைப் பலி கொண்டது, என எண்ணற்ற போர்க் குற்றங்கள் புரிந்த கொடூரமிக்க சிங்கள அரசினை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை பெற்றுக் கொடுக்க நாம் அனைவரும் அணி திரள்வோம்.

நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
இவ்வண்ணம்,
சி. பிரதீபன்
இணைப்பாளர்,
அனைத்துலகச் செயலகம்,
தமிழீழ மக்கள் அவை.
INFO.MAKKALAVAI@GMAIL.COM

(Visited 81 times, 3 visits today) }
You can leave a response, or trackback from your own site.