ஞாயிறு, 7 மார்ச், 2010

இலங்கைப் போரில் மனித உரிமை மீறல்: ஐ.நா. விசாரிக்க ராஜபட்ச எதிர்ப்பு



கொழும்பு, மார்ச் 6: இலங்கை போரின் போது நிகழ்ந்த மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க குழு அமைக்கும் ஐ.நா.வின் நடவடிக்கைக்கு அந்நாட்டு அதிபர் ராஜபட்ச கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் இலங்கை ராணுவம் பல்வேறு மனித உரிமை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், தமிழர் பகுதியில் வெடிகுண்டுகளை வீசி பலரை வேண்டுமென்றே கொலை செய்ததாகவும், ராணுவத்தினரிடம் பிடிபடும் பெண்கள் உள்பட பலரை சித்ரவதை செய்து கொன்றதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.இது தொடர்பான சில விடியோ பதிவுகளும் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க ஐ.நா. குழு ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள ராஜபட்ச, "இந்த நடவடிக்கையை இலங்கை ஏற்றுக் கொள்ளாது. இதை நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை' என்று கூறியுள்ளார்.முன்னதாக இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் -கி- மூன், ராஜபட்சவுடன் கடந்த வியாழக்கிழமை தொலைபேசியில் பேசினார்.
கருத்துக்கள்

கூலிப்படையான காங்.அரசு இருக்கையில் ப்கசேவிற்குப் பயம் ஏன்? கூட்டாளியாகவும்கூலிப்படையாகவும் இந்திய அதிகாரிகளையும் இந்தியப் படையினரையும் செயல்படச் செய்த காங். துணை நிற்கும். ஐநாவில் கோரிக்கை ஏற்கப்படும். கவலற்க! பாவம் அப்பாவித் தமிழர்கள்! அவர்கள் என்ன ஆனால் என்ன? எப்படி அழிக்கப்பட்டால் என்ன? ஆரியச் சிங்களத்தைக் காப்பாற்றுவதே எங்கள் முழு மூச்சு எனச் செயல்படும் இந்தியம், நீர் தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்குத் துணை நிற்கும் வரை உம் பக்கம் இருக்கும்.

இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/7/2010 3:22:00 AM

India thinks that Rajapaksa is their friend and supported him to kill Tamils. Read this news, see what Rajapaksa upto with China to deceive India."The presence of Chinese in Sri Lanka owned island of Kachchatheevu, considered as a threat to the security of India, is confirmed by a group of journalists and social activists from Tamil Nadu. More than thirty pre-fabricated structures with Chinese names were found on the island of Kachchatheevu located on the sea boundary between India and Sri Lanka by Tamil Nadu journalists and social activists who participated in the recent annual festival of Kachchatheevu St. Antony’s Church, according to Dinamalar, a Tamil Nadu daily. The pre-fabricated structures, however, were unoccupied but evidence of people living in them was observed by the visiting journalists from Tamil Nadu who were not permitted to photograph them by Sri Lanka Navy (SLN) soldiers. The presence of Chinese in the island of Kachchatheevu is seen as a threat to the security of In

By Vani
3/7/2010 2:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக