வெள்ளி, 12 மார்ச், 2010

புதிய சட்டப்பேரவை கட்டடம்: தொழிலாளர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் பாராட்டுசென்னை, மார்ச் 10: புதிய சட்டப்பேரவைக் கட்டடம் சிறப்பாக நிறைவு பெறுவதற்குப் பாடுபட்ட தொழிலாளர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:பூம்புகார் சிலப்பதிகாரக் கலைக் கூடம், வள்ளுவர் கோட்டம், விவேகானந்தர் மண்டபம், டைடல் பூங்கா போன்றவை எழிலார்ந்த அழகுடன் திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை ஆகும்.அவற்றின் தொடர்ச்சியாக, புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. உத்திரமேரூர் கல்வெட்டு உணர்த்தும் மக்கள் பிரதிநிதித்துவ மாண்புகளைப் பேணிக் காத்த தமிழகத்தில் திராவிடப் பழமையும், பொறியியல் புதுமையும் பின்னிப் பிணைந்த பிரம்மாண்டச் சின்னமாய் புதிய தலைமைச் செயலக வளாகம் எழுப்பப்பட்டு வருகிறது.தமிழ் கலாசாரத்துடன் ஒன்றிணைந்து திராவிடக் கட்டடக் கலையின் வெளிப்பாடாக எல்லா வகைகளிலும் உலகத்தரம் வாய்ந்ததாக புதிய கட்டடங்கள் உருவாகின்றன.கட்டடத்தின் வெளிப்பகுதியில் வேதியியல் வண்ணப்பூச்சைத் தவிர்த்து, கண்ணாடியும் மெருகேற்றப்பட்ட கருங்கல் பலகையும் பொருத்தப்படுகிறது. நான்கு வட்டங்கள் கொண்ட இந்தக் கட்டடத்தின் முதல் மற்றும் இரண்டாம் வட்டத்தின் மேல் தளத்தில் பசுமையானத் தோட்டமும், வெளிப்புறம் வாகனங்கள் செல்ல கூரை அமைக்கப்பட்ட சாலையும், கூரையின் மேல் புல்வெளி மற்றும் செடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.கட்டடத்தில் குறைந்த அளவு மின்சாரத்தில் எரியும் விளக்குகள் மற்றும் மின்சாரக் கருவிகள் உபயோகிக்கப்படுகின்றன. இந்தியாவில் எங்கும் இல்லாத புதிய வடிவமைப்பாக இந்தக் கட்டடம் இருப்பதாலும், அதிநவீன தொழில்நுட்பத்தில் கட்டப்படுவதாலும் மற்ற கட்டடங்களுக்கு இது முன்ணுதாரணமாக விளங்கும்.கட்டடம் சிறப்பாக நிறைவுப் பெறுவதற்குப் பாடுபட்ட தலைமைச் செயலாளர், நிதித் துறை, பொதுப்பணித் துறை செயலாளர்கள், பொறியாளர்கள், தனியார் கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்த அலுவலர்கள், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

நாமும் பாராட்டுவோம்.

வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
3/12/2010 3:20:00 AM

அதென்ன பெண் தனி ஒதுக்கீடு?? தனியாப்போற பெண்களை 'ஒது'க்கறதா? நான் தான் மனைவிபோறாதுன்னு துணைவி வேற ஒதுக்கிருக்கேனே. என் வழி வந்த கோ சி, பாலு, ராசா, வீரபாண்டின்னு பல மந்திரியும் ரெண்டுமூணு வச்சிருக்கானுங்க. இதுக்கும் மேல தனி ஒதுக்கீடா? அய்யயோ..நம்மள மாதிரி நம் பொண்டாட்டிகளும் ஒதுக்க ஆரம்பிச்சுடுவான்களா? வயசான காலத்திலியுமா? இருக்கும் 84 வயசு திவாரியும் வெளையாடர காலம் இது!எதுவும் நடக்கும். இப்படிக்கு கலைஞர் alias மஞ்சத்துண்டார்

By Kalai
3/11/2010 10:36:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக