௨.) மக்களவையில் நிறைவேற்றப்படாத சட்ட வரைவை நிறைவேற்றியதாகத் தினமலர் தவறாகக் கூறுகிறதா? எதிர்நோக்கி உருவாக்கப் பட்ட அறிக்கையை அவசரப்பட்டுத் திமுக வெளியிட்டு விட்டதா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சென்னை : லோக்சபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு, கனிமொழி எம்.பி., மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க., தலைமையகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நம்நாட்டில் பல மசோதாக்களை நிறைவேற்றியுள்ளோம். பல சட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். ஆனால், லோக்சபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது, பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களை களைய இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையும், அதன் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இந்த மசோதா நிறைவேற ஆதரித்த அனைத்து கட்சிகளையும் பாராட்டுகிறேன். தற்போது லோக்சபாவில், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதன் மூலம் மகாகவி பாரதியின் கனவு நனவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக