புதன், 10 மார்ச், 2010

சோனியா காந்திக்கு கிடைத்த வெற்றி: தங்கபாலு



சென்னை, மார்ச் 9: பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கிடைத்த வெற்றி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:இந்திய அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் வைர முத்திரையாக இடம்பெறும் வகையில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இடையறாத முயற்சியாலும், தொய்வின்றி மேற்கொண்ட தளராத நடவடிக்கையாலும் இம்மசோதா முதல்கட்ட வெற்றியை அடைந்துள்ளது.பெண்ணினத்தைப் போற்றிப் பாதுகாக்கும் இம்மசோதா மாநிலங்களவையில் நிறைவேற உறுதுணையாக இருந்த காங்கிரஸ், திமுக மற்றும் தோழமைக் கட்சிகளுக்கும், பிரதான எதிர்க்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

இந்த வெற்றிக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என நாடாளுமன்றத்தில் அறிவித்த கட்சியின் மாநிலத் தலைவர் இவ்வாறு உளறலாமா? நன்றி சொல்லி த் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் தமிழினப் பகையாளியான இவர் மக்களவையில் தள்ளிப்போனதற்கான தோல்வியின் பொறுப்பு சோனியாவிற்கு உரியது என்று கூறுவாரா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/10/2010 3:15:00 AM

இதுவரைகாலமும் 1833ல் வன்னி பகுதி தமிழ் மக்களால் புனிதமான பகுதியாக பாதுகாக்கப்பட்டு வந்தது. வன்னி யின் தொன்மையையும் பண்டாரவன்னியனின் சிறப்பையும் வெளி உலகிற்கு வெளிப்படுத்தக்கூடிய தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுக்கல் சிங்களப் படைகள்ல் சிதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நினைவுக்கல்லே ஆதாரபூர்மான நினைவுக் கல்லாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே தனியான சுண்ணக்கல்லால் ஆக்கப்பட்ட இந்த நினைவுக்கல் அமையப்பெற்றமையால் தான் அது அமைந்துள்ள கிராமம் கற்சிலைமடு என பெயர் பெற்றது. இந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுக்கல் சிங்களப் படைகள்ல் சிதைக்கப்பட்டுள்ளதாக அரச ஊடகம்த்தல் வெளி வந்துள்ளது தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்த சிங்களப் படைகள் தமிழர் தாயகப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நினைவுத்துயிலிடங்களை அழித்து வருகின்ற நிலையில் பண்டாரவன்னியன் நினைவுக்கல் அழித்து வருகின்றது குறித்து தமிழ் மக்கள் கடும் விசனம் அடைந்துள்ளனர்

By தமிழ்மன்னன்
3/10/2010 3:08:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக