சனி, 13 மார்ச், 2010

ஈழத்தமிழினம் வாழ்ந்த ஆதாரங்கள் சிறிலங்காவால் இரண்டு ஆண்டுகளில் அழிக்கப்படும்

பதிந்தவர்_ரமணன் on March 11, 2010
பிரிவு: பிரதானச்செய்திகள்

இன்னும் இரண்டு ஆண்டுகள் கழிந்தால் ஈழத்தில் தமிழினம் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுவிடும். என்று தமிழகம் சென்றுள்ள ஏதிலிகள் தெரிவித்துள்ளார்கள்.

வன்னியில் சிறீலங்காப்படையினரின் வதை முகாம்களில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிய இளைஞர்கள் மூவர் மன்னார் கடல்வழியாக தமிழகத்தின் இரமேஸ்வரம் சென்றடைந்துள்ளார்கள். தமிழகம் சென்றுள்ள இளைஞர்களை கியூபிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

இந்நிலையில் தமிழகத்தின் ஊடகம் ஒன்றிற்கு இவர்கள் கருத்து தெரிவித்துள்ளர்கள். வன்னியில் வதை முகாம்களில் இன்னமும் சிறீலங்காப்படையினரின் சித்திரவதைகள் மேற்கொண்டு வருகின்றார்கள். தொடர்ந்தும் முட்கம்பிவேலிக்குள் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் இன்னும் இரண்டு ஆண்டுகள் கழிந்தால் ஈழத்தில் தமிழினம் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுவிடும்.

ஏராளமான தமிழ் இளைஞர்கள் சிறப்பு வதைமுகாம்களில் சிறீலங்காப்படையினரின் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். வதைமுகாம்களில் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தொடர்ந்தும் இருந்து வருவதாகவம் இளைஞர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கடல் வழியாக தமிழகம் வந்த இளைஞர்கள் தமிழகத்தின் சட்டத்திற்கு அமைய கியூபிரிவு காவல்துறையினரின் தொடரான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக