செவ்வாய், 9 மார்ச், 2010

நித்யானந்தருக்கு எதிராக திட்டமிட்ட சதி: விரைவில் நேரில் விளக்கமளிப்பார்-சீடர்கள்



பெங்களூர், மார்ச் 8: சுவாமி நித்யானந்தருக்கு எதிராக சதித்திட்டமிட்டு செக்ஸ் விடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து அவரே இன்னும் சில நாள்களில் பெங்களூருக்கு திரும்பி மக்களுக்கு விளக்கமளிப்பார்; தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பார் என்று நித்யானந்த தியான பீடத்தின் செய்தித் தொடர்பாளரும் சீடர்களும் தெரிவித்தனர்.ஒரு தமிழ் நடிகையுடன் நித்யானந்தர் நெருக்கமாக இருப்பது போன்ற விடியோ காட்சிகள் கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி சானல்களில் ஒளிபரப்பப்பட்டன. இது நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விடியோ காட்சிகளைப் படம்பிடித்து வெளியிட்டதாகக் கூறப்படும் நித்யானந்தரின் சீடர் தர்மானந்தா என்கிற லெனின் சென்னை போலீஸôரிடம் சரணடைந்தார்.இதற்கிடையே நான் சட்ட ரீதியாக எந்தத் தவறும் செய்யவில்லை என்று நித்யானந்தர் ஹரித்துவார் கும்பமேளாவில் இருந்தவாறு பத்திரிகைகளுக்கு விடியோ மூலம் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் நித்யானந்தரின் சீடர்கள் ஞானானந்தா மகாசார்யா, நித்யா பிரனானந்தா, நித்யா மனிஷானந்தா, சர்வதேச ஒருங்கிணைப்பாளர் நித்யா சச்சிதானந்தா ஆகியோர் பிடதியில் உள்ள தியான பீடத்தில் நிருபர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:நித்யானந்தரும், நடிகையும் நெருக்கமாக இருப்பது போன்ற விடியோ காட்சிகள் பற்றி எங்களுக்கு முழுமையாக எதுவும் தெரியாது. இந்த விடியோ காட்சிகளை படம் பிடித்ததாக நித்யானந்தரின் சீடர் லெனின் போலீஸôரிடம் தெரிவித்துள்ளார். லெனினுக்கு கேமரா, நவீன தொழில்நுட்பங்களை கையாளுவது குறித்து எதுவும் தெரியாது.அவருக்கு பின்னணியில் யாரோ அரசியல்வாதிகள், அதிகாரிகள், தனி நபர்கள் இருந்துகொண்டு இந்த சதித் திட்டத்தை செய்துள்ளனர். கிராபிக்ஸ் நிபுணர்கள் மூலம் நடிகையுடன் சுவாமி நெருக்கமாக இருப்பதுபோல விடியோ காட்சி உருவாக்கப்பட்டு இருக்கலாம். நடிகை ரஞ்சிதா பெங்களூர் ஆஸ்ரமத்தில் பக்தையாக இருந்தார். அவரைப் பற்றியும் விடியோ பற்றியும் எதுவும் தெரியாது. விடியோ குறித்து யூகித்து கூறப்படும் செய்திகளுக்கும் கேட்கப்படும் கேள்விகளுக்கும் எங்களால் பதிலோ, கருத்தோ தெரிவிக்க முடியாது.நித்யானந்தர் தலைமறைவாகிவிடவில்லை. தற்போது அவர் வட நாட்டில் நடக்கும் கும்பமேளாவில் பங்கேற்று வருகிறார். அவர் ஓரிரு நாள்களில் பெங்களூருக்கு வருவதாகக் கூறினார். ஆனால் பாதுகாப்பு காரணங்களால் உடனே இங்கு வர வேண்டாமென நாங்கள் அவரிடம் தெரிவித்துள்ளோம். எனவே, சில நாள்களில் அவர் கும்பமேளாவில் இருந்து திரும்பியவுடன் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மக்கள் முன் தோன்றி விளக்கம் அளிப்பார். இந்த விவகாரத்தில் தான் குற்றமற்றவர் என்பதை ஆதாரத்துடன் அவர் நிரூபிப்பார். அப்போது உண்மை என்னவென்று தெரியவரும். பக்தர்கள் மர்மச்சாவு? இங்குள்ள ஆஸ்ரமத்தில் தங்கியிருக்கும் சில வெளிநாட்டு ஆண்களும், பெண்களும் மர்மமான முறையில் இறந்திருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை. கனடா நாட்டைச் சேர்ந்த மெல்வின் என்பவர் ஆஸ்ரமத்தின் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துதான் இறந்தார். அதில் மர்மம் ஏதும் இல்லை. அதேபோல வெளிநாட்டு யோகா பெண் ஆசிரியையும், ஒரு தமிழக பெண்ணும் மர்மமான இறந்ததாகக் கூறப்படுவதிலும் உண்மையில்லை என்று அவர்கள் மறுப்புத் தெரிவித்தனர்.
கருத்துக்கள்

கொடும்பாவி நித்யானந்தனுக்கு எதிரான உண்மையின்பக்கமான பதிவுகளை அகற்றியும் நிதயானந்தனுக்குச் சாரபான செய்திகளுக்கு முதன்மை அளித்து வெளியிட்டும் தின மணி நடுநிலை பிறழ்ந்து ஓர வஞ்சனையுடன் நடந்து கொள்வது ஏன்?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/9/2010 3:04:00 AM

நித்யானந்தன் சட்டப்படியாகத்தான் தவறு செய்ய வில்லை என்று கூறுகின்றான். அதாவது அந்தப் பெண்ணின் விருப்பத்துடன் சேர்ந்து இருந்தேன்; எனவே சட்டப்படி தவறு இல்லை என்கிறான். ஆனால், 2 1/2மணி நேரம் ஓடும் காட்சிப்படத்தை எடுத்த மற்றொரு சாமியார் இந்த ஆள் மடத்திற்கு வரும் அப்பாவிப் பெண்களின் கற்பைச் சூறையாடியதால்தான் இதனை வெளிபப்டுத்துவதாகக் கூறியுள்ளார். எனவே, உடன் உள்ள நடிகையிடம் அமைதி தேடி வந்தவரிடம் தான் கண்ணனின் மறுபிறப்பு என்று சொல்லி ஏமாற்றி மயக்கி விருப்பத்துடன் அவர் சேரும் வகையில் சூழலை உருவாக்கியுள்ளான். இவனைப் போன்ற ஆட்கள் களையெடுக்கப்பட்டால்தான் இந்து சமயம் பொலிவுறும். எனவே, விளக்கம் கேட்டெல்லாம் மயங்காமல் ஓட ஓட விரட்டி யடித்துச் சட்டத்தின் முன் நிறுத்திக் கம்பி எண்ண வைப்பதே நம்மவரின் கடமையாக இருக்க வேண்டும். போலிச் சாமியான் நித்யானநதன் பரத்தமைக்கு- விபச்சாரத் தொழிலுக்கு - உதவி புரிந்தவர்கள் மட்டுமே அவன்பக்கம் இருப்பர். அத்தகையோரை அவர்களது குடும்பத்தினர் கவனித்துக் கொள்ளட்டும்.உலகமகளிர் நாளை முன்னிட்டு நடிகையை மன்னிப்போம். நித்யானந்தனைத் தூக்கிலிடுவோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/9/2010 3:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக