சென்னை, மார்ச் 11: ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு மணி மண்டபம் கட்ட அதிமுக ஆட்சியில் நிலம் கையகப்படுத்தப்பட்டது என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.மார்ச் 7-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடக்க விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, ""ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு அவர் பிறந்த ஊரில் மணி மண்டபம் கட்டப்படும்'' என்று அறிவித்தார்.÷அதற்கு பதிலளிக்கும் வகையில் ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:÷""திமுக எம்.எல்.ஏ. சிவராஜின் கோரிக்கையை ஏற்று ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு அவர் பிறந்த ஊரில் மணி மண்டபம் கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்'' என்று மார்ச் 7}ம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.÷ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு மணி மண்டபம் அமைப்பதற்காக 15}6}2004 அன்று விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் ஓமந்தூர் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதற்காக ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் கருத்துரு திட்டமிடப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.÷அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததும் மணி மண்டபம் கட்டுவது குறித்து பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் 23}6}2006 அன்று அரசுக்கு அறிக்கை அனுப்பினார். ÷அதனை பரிசீலித்த திமுக அரசு, ""ராமசாமி ரெட்டியாருக்கு மணி மண்டபம் அமைப்பது தொடர்பாக அரசின் ஒப்புதல் வேண்டி கோரப்பட்ட தங்களின் செயற்குறிப்பு அரசால் ஏற்பதற்கில்லை'' என்று தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தி (நினைவகங்கள்) துறை இணைச் செயலாளர் 9}8}2007 அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.÷இதிலிருந்து ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு மணி மண்டபத்தை நிராகரித்தவர் கருணாநிதி என்பதை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் உயர்நிலைப் பள்ளி அதிமுக ஆட்சிக் காலத்தில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு திமுக ஆட்சியில் மட்டுமே நினைவு மண்டபங்கள் எழுப்பப்பட்டது என்பது தவறானது. அதிமுக ஆட்சியிலும் நினைவு மண்டபங்கள் எழுப்பப்பட்டன.வ.உ. சிதம்பரனாருக்கு திருநெல்வேலியில் ரூ. 75 லட்சம் செலவில் மணி மண்டபம், கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளிக்கு அருகில் மோர்னப்பள்ளியில் ராஜாஜிக்கு மணி மண்டபம் கட்ட ஒரு ஏக்கர் நிலம் தேர்வு, ஈரோடு மாவட்டம் அரச்சலூர் கிராமத்தில் தீரன்சின்னமலைக்கு மணி மண்டபம் கட்ட 3 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது, சென்னை திருவல்லிக்கேணியில் பாரதியாருக்கு நினைவு இல்லம், விருதுநகரில் காமராஜர் நூற்றாண்டு நிறைவு விழா நினைவுத் தூண் அமைக்க ரூ. 14 லட்சம் ஒதுக்கீடு, மருது சகோதரர்களுக்கு திருப்பத்தூரில் நினைவகம், ஸ்ரீபெரும்பூதூரில் ராஜீவ் காந்திக்கு நினைவகம், பெரியாருக்கு வைக்கத்தில் நினைவகம், சென்னையில் அம்பேத்கர் மணி மண்டபம் கட்ட நிலம் ஒதுக்கீடு, முத்துராமலிங்கத் தேவர், பெரும்பிடுகு முத்தரையர், வீரன் அழகுமுத்துக்கோன் ஆகியோருக்கு சிலைகள் என அதிமுக ஆட்சியில் பல்வேறு நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டன என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
கருத்துக்கள்
தி.மு.க. ஆட்சியின் வழிகாட்டுதலில் அதிமுக ஆட்சியிலும் நினைவு போற்றும் பணிகள் நடைபெற்றுள்ளன என்பது உண்மைதான். இதனைக் கூட உடனுக்குடன் மறுக்காததைதப்பாரக்கும் பொழுது இவருக்கும் அறிக்கை உருவாக்குநருக்கும் உள்ள இடை வெளி தெரிகிறது. மேலும் இரண்டு ஆட்சியிலும் சீர்காழித் தமிழிசை மூவர் மணிமண்டபம் போன்ற சில தி்ட்டங்கள் இழுத்தடிக்கப்படுவதும் நிகழ்ந்துள்ளன என்ற உண்மையை இரு தரப்பாரும் ஒத்துக் கொள்ள வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
3/12/2010 3:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
3/12/2010 3:28:00 AM