வெள்ளி, 12 மார்ச், 2010

இந்திய கடல் எல்லையில் நுழைந்த 17 சிங்கள மீனவர்கள் கைதுமசூலிப்பட்டினம், மார்ச் 11: இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 17 சிங்கள மீனவர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் கடற்கரை பகுதியில் 3 படகுகளில் வந்த இவர்களை அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். வழி தவறி இந்தியப் பகுதிக்குள் வந்து விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று ஆந்திர மாநில போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள்

இவர்கள் அரச விருந்தினராக நடத்தப்பட்டுச்சிங்கள அரசிடம் ஒப்படைக்கப்படுவர். சிங்கள அரசு போல் பழிக்குப் பழியாக இவர்களைக் கொல்லத் தேவையில்லை. ஆனால், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் இவர்கள் ஒப்படைக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கலாம் அல்லவா? என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், இந்திய அரசே தமிழக மீனவர்களின் படுகொலைகளுக்குக் காரணமாக இருக்கும் பொழுது எவ்வாறு இவ்வாறு அறிவிக்க இயலும் என்னும் உண்மை நினைவிற்கு வருகிறது. இனிச் சிங்கள மீனவர்களுடன் சீனர்களும் வரும் எண்ணிக்கை உயர்நத பின்னராவது இந்தியத்திற்கு அறிவு வருமா எனத் தெரியவில்லை.

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
3/12/2010 3:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக