வெள்ளி, 12 மார்ச், 2010

நித்யானந்தா விவகாரம்: நடுநிலையான அணுகுமுறை தேவை-இராம. கோபாலன்



சென்னை, மார்ச் 11: நித்யானந்தா விவகாரத்தில் நடுநிலையோடு கூடிய அணுகுமுறை தேவை என்று இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் இராம. கோபாலன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:நித்யானந்தா விவகாரத்தில் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் நடந்து கொள்ளும் விதம் ஆரோக்கியமற்றது.ஒருவர் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபணம் ஆகாத வரையில், அவர் குற்றமற்றவர் என்று நினைப்பதுதான் மரபும், பண்பாடும் ஆகும். நித்யானந்தா தன்னிலை விளக்கம் அளிக்க அவருக்குப் போதிய கால அவகாசமும் வழங்கப்பட வேண்டும்.அவருடைய பக்தர்களையும், சீடர்களையும் காவல் துறை தேடுவதாக வெளியாகும் செய்திகள் மற்றவர்களை மிரட்டுவதாக அமைகிறது.சாமியார் என்று கூறி ஒட்டுமொத்த துறவிகள் சமுதாயத்தையே ஏளனம் செய்து கொச்சைப் படுத்துவதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. இதுவரை எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, அவர் குற்றமற்றவர் என்றே நம்புகிறோம்.ஆசிரமத்துக்கு சொத்து இருப்பது பாவமல்ல. அந்தச் சொத்து தவறான முறையில் சேர்க்கப்பட்டிருந்தால் அது தண்டனைக்குரிய குற்றம். வழக்குத் தொடுப்பதன் மூலம் அதுகுறித்து விசாரிக்க முடியும். வருமான வரித்துறையினர் இதுகுறித்து ஆய்வு நடத்த முடியும்.இதைவிடுத்து ஊடகங்களே நீதிபதிகளாகவும், சாட்சிகளாகவும், தண்டிக்கும் அதிகாரிகளாகவும் இருப்பது ஜனநாயகத்துக்கு பெரும் கேட்டை ஏற்படுத்தும். அரசியல் ஆசாபாசங்களால் உந்தப்பட்டும், பிடிவாதம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்துடன் அவரை நடத்துவதும் துறவிகளையே இழிவுபடுத்துவதாகும்.÷இதை இந்து சமுதாயம் ஒரு நாளும் ஏற்காது. நித்யானந்தருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்து ஒளிபரப்பப்பட்ட காட்சிகளைப் பார்க்கும்போது, ஒரு சிறு கும்பல் மட்டுமே இதைச் செய்வதும் சாதாரண மனிதன் இதில் ஈடுபடவில்லை என்பதும் தெளிவாகிறது.அனைத்து விவரங்களையும் அவர் வெளியிடும் வரை காவல்துறையும், அரசும், ஊடகங்களும் மக்களும் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று ராம. கோபாலன் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

குற்றச் செயல்களை மூடி மறைக்கத் தூண்டுபவர்களுக்கும் தண்டனை வழங்குவதே உண்மையான நடுநிலைமை என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். எல்லாச் சாமியார்களும் இப்படித்தான் இருப்பர் எனக் காக்க முற்படாமல் போலிகளை ஒழிக்க முற்பட்டால்தான் இந்து சமயம் மாசு அகன்று ஒளி விடும் என்பதை இந்துச் சமயப் போர்வையில் பிராமணிய மதத்தைத் திணிப்பவர்கள் உணர வேண்டும். அவர்கள் உணராவிட்டாலும் நாமாவது உணர்ந்து இத்தகையோரையும் புறக்கணிக்க வேண்டும்.எல்லாத் தரப்பிலும் ஆட்சி செலுத்தும் பிராமணிய மதத்திலிருந்து இந்து சமயத்தைக் காப்பாற்றுவோமாக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
3/12/2010 3:45:00 AM

இந்து மக்கள் கட்சியின் அர்ச்சுன் சம்பத் கறைகளைப் போக்க எடுக்கும் முயற்சிகளே நடுநிலையானது. இவரோ நடுநிலை என்ற போர்வையில் காமவெறி பிடித்த போலிகளின் செயல்பாடுகளை மூடி மறைக்க முயல்வதற்கு நடுநிலைப் போர்வை அணிவிக்க விரும்புகிறார். காவல் துறை விசாரணைகளை முடிக்கும் வரை என்று சொல்லியிருந்தாலாவது ஓரளவு ஏற்றிருக்கலாம். குற்றவாளி தன்னுடைய குற்றஙகளை மறைத்து அறிக்கை தரும் வரை நடுநிலையாக இரு்க்க வேண்டுமாம். நித்யானந்தன் தவறு செய்யவில்லை எனப பொய்யாக எழுதினால் அது நியாயமானது; நித்யானந்தனின் முகத்திரை கிழித்தால் அது அநியாயமானது என்பதே இவரது நடுநிலை அளவு கோலாக இருக்கும் பொழுது குற்றச் செயல்கைள மூடி மறைக்கத் தூண்டுபவர்களுக்கும் தண்டனை வழங்குவதே உண்மையான நடுநிலைமை என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். எல்லாச் சாமியார்களும் இப்படித்தான் இருப்பர் என க் காக்க முற்படாமல் போலிகளை ஒழிக்க முற்பட்டால்தான் இந்து சமயம் மாசு அகன்று ஒளி விடும் என்பதை இந்துச் சமயப் போர்வையில் பிராமணிய மதத்தை த் திணிப்பவர்கள் உணர வேண்டும். அவர்கள் உணராவிட்டாலும் நாமாவது உணர்ந்து இத்தகையோரையும் புறக்கணிக்க வேண்டும்.எல்லாத் தரப்பிலும் ஆட

By Ilakkuvanar thiruvalluvan
3/12/2010 3:43:00 AM

YOUR Oppinion 100% correct. The media could say anything.to response many readers commented about the illicit relatoinship about various people.Some body try these complaints,and as he said should wait untill the court decide.

By Ravi
3/12/2010 3:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக