வியாழன், 11 மார்ச், 2010

மராத்தி மொழி சேவை வழங்காத செல்போன் நிறுவனங்கள் மீது தாக்குதல்



மும்பை, மார்ச் 10- ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மராத்தி மொழி சேவை வழங்காத தனியார் செல்போன் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பந்த்ரா பகுதியில் உள்ள பிரபல தனியார் செல்போன் சேவை நிறுவனத்தின் விற்பனை மையம் மீது நேற்று மதியம் திடீரென ராஜ் தாக்கரே கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதில், அந்த கடையின் நுழைவாயில் மற்றும் கண்ணாடி ஜன்னல்கள் சேதமடைந்தன.

மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், அவர்கள் செல்லும் முன்னர் மகாராஷ்டி நவநிர்மாண் கட்சிக் கொடியை வீசிவிட்டுச் சென்றதாகவும் அந்த கடையின் ஊழியரான சபீனா என்பவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கஹ்ர் பகுதியில் உள்ள மற்றொரு தனியார் செல்போன் சேவை மையத்தின் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.

குறிப்பிட்ட அந்த இரு செல்போன் நிறுவனங்களின் சேவையில் ஒலிபரப்பாகும் பதிவு செய்யப்பட்ட குரல் பதிலில் மராத்தி மொழி இல்லை என்று ராஜ் தாக்கரே குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், இத்தகைய தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இதனிடையே, அந்த இரு செல்போன் சேவை நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளருக்கான பதிவு செய்யப்பட்ட குரல் பதில் சேவையில் மராத்தி மொழியை சேர்த்துவிட்டதாக மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சிக்கு கடிதம் எழுதியுள்ளன.

கருத்துக்கள்

மராட்டிய மாநிலத்தில் வன்முறை மூலம்தான் விடிவு பிறக்கிறது. தமிழ் நாட்டில் இத்தகைய சூழல் இல்லை. தமிழாய்ந்த தமிழன் ஆட்சியில் இருப்பதால் இவர எண்ணித் துணிந்து செயற்படுத்தினால் தமிழகத்தில் விற்பனையாகும் பொருள்கள் எந்நாட்டினதாய் இருப்பினும் தமிழில் குறிப்புகள் இடம் பெறும்; தொலை பேசி, அலைபேசிப் பதிவொலிகள் தமிழில் இருக்கும்;தமிழும் தமிழ் நாட்டவரும் முதன்மை பெறுவர்;மழலைக் கல்வி முதல் உயராய்வுக் கல்வி வரை தமிழில் இருக்கும்; தமிழ் மொழிப்பாடம் கட்டாயமான பாடமாக இருக்கும்;விளம்பரங்களில் தமிழ் இருக்கும்; அலுவல் மொழியாக, ஆட்சி மொழியாக, வழிபாட்டு மொழியாக, கலை மொழியாக எல்லா நிலைகளிலும் எல்லாத் துறைகளிலு்ம் தமிழ் வீற்றிருக்கும். ஆனால் இவரது பார்வையை மறைக்கும் கட்டுகள் அவிழ வேண்டுமே! அல்லது கட்டுகளை அவிழ்த்தெறிய தமிழ் உணர்வாளர்கள் கிளர்ந்து எழ வேண்டுமே!


வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/11/2010 2:48:00 AM

I welcome Mr.Ragavakumar comment.Yes they occupied most of the places in Chennai and also most of land grabbing in all over tamil nadu.One day Tamil nadu will become under hindi speaking people.First we have to kick those speaking people from TN

By Tamilan
3/11/2010 12:40:00 AM

கொடுக்கவேண்டிய்வர்களுக்கு கொடுத்து வடமாநிலத்தவர் சென்னையில் குடியேறிக் கொண்டு இருக்கிறார்கள். இதுகூட தெரியவில்லையா ? முட்டல்பயல்களா ??

By RAJ THAKKARE
3/10/2010 9:13:00 PM

What Ragavakumar said is correct. I get the same feeling. In the near future we are going to loose chennai and it is going to be the home land for hindi speaking north indians. They came and settled in millions around Chennai and till the day keep coming in large numbers. South India seems to be the home land for North Indian traders and their family.

By Baskaran
3/10/2010 8:55:00 PM

மராத்திக்காரன் உணர்ச்சி உள்ளவன். தமிழனுக்குத்தான் அது கிடையாதே! இப்பவே மண்ணடி, புரசைவாக்கம், வேப்பேரி, அயனாவரம் இதெல்லாம் தமிழன் கிட்ட இருந்து போயாச்சி-அங்க கேக்குற பாஷையெல்லாம் இந்திதான்! அவனுங்க தனி மார்வாடி/குஜராத்தி தேசம் கேட்கப் போறானுங்க! தமிழன் வந்து , முல்லைப் பெரியார், காவிரி, பாலாறு, கிருஷ்ணாவை கைவிட்ட மாதிரி சென்னையையும் கைவிட்டுட்டு ஒரு ரூபா குச்சி ஐஸ் கிரீம் வாங்கி சப்பிகிட்டே, தமிழ் வாழ்க! தமிழ் வாழ்கன்னுட்டு, கடல்ல குதிச்சு கைமா ஆகவேண்டியது தான்! (மராத்திக் காரன் பரவா இல்லியே! உஷாரா இருக்கானே!)

By ragavakumar
3/10/2010 8:48:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக