தமிழர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு எவிகேஎஸ் இளங்கோவன் !
பிரிவு: செய்திகள்
காங்கிரசை தமிழகமண்ணைவிட்டு ஒழிப்போம் என்று முழங்கியர் பெரியார். அவரின் வம்சவழியில் வந்ததாககூறி நான்கு இனிசியலோடு நடமாடும் இளங்கோவன் தமிழனின் (எருமைமாடு போன்ற)பொறுமைக்கு ஒரு சான்றாக இருக்கிறார். பெரியாரின் வீட்டுபிள்ளை என்று காட்ட இவர் பெயருக்கு முன்னர்வரும் “எவிகேஎஸ்” இல்லையென்றால் இளங்கோவனுக்கு அரசியலில் முகவரியே கிடையாது. ஆனால் பெரியாரின் கருத்துக்கு சிறிதும் ஒவ்வாத காங்கிரசில் இருந்துகொண்டு பதவி சுகத்திற்க்காக தமிழினத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார் இளங்கோவன். கடந்த தேர்தலில் இவரின் தமிழினவிரோதபோக்கினால் ஈரோட்டு மக்களால் சவுக்கடி(செருப்படி என்ற வார்த்தை சபை நாகரீகம் கருதி தவிர்க்கப்பட்டு இருக்கிறது) கொடுக்கப்பட்டு மூலையில் உற்காரவைக்கப்பட்டு இருக்கிறார் இளங்கோவன்.
தனது அரசியல் இருப்பை நிலைநாட்ட தொடர்ந்து தனது தமிழினவெறுப்பை அரங்கேற்றிவருகிறார் பெரியாரின் இனிசியல் கொள்ளுபேரன். நாமும் வழமை போல பொறுமைகாத்து வந்தோம். உலகெங்கும் மாவீரர்நாள் நவம்பர் 27 இல் கண்ணீர் மழ்க நினைவுபடுத்தப்பட்டு “தமிழனுக்கு நாடு வேண்டும்!” என்று தங்கள் கடைசி மூச்சை நிறுத்தி கொண்ட அந்த மாவீரர்கள் நினைவில் நிறுத்தும் நாளில். மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு தமிழீழ உணர்வாளர்கள் ஈரோட்டில் வைத்திருந்த பதாகைகளை தனது கைத்தடிகள் துணையுடன் கிழித்து எறிந்திருக்கிறது இந்த கருங்காலி. அரசியல் செய்வதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கிறது அப்படி இருக்க மாவீரர்கள் பதாகைகளை கிழித்துத்தான் தனது அரசியல் நடத்தவேண்டும் என்று எண்ணும் இந்த இழிபிறவியை கண்டு இரத்தம் கொதித்து போயிருக்கிறோம்.
உங்களுக்கு மாவீரர்தினத்தில் உடன்பாடு இல்லையென்றால் ஒதுங்கி போங்கள் எதற்க்காக மாவீரர்கள் நினைவுபதாகைகளை கிழிக்க வேண்டும்?. முறையாக அனுமதிபெற்று ஈழ ஆதரவாளர்கள் வைத்த பதாகைகளை “நான் சோனியா விசுவாசி” என்று காட்ட கிழித்துபோட்டு இருக்கிறார் இந்த காங்கிரசுக்காரர். கேட்டால் “ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் அவர்களுக்கு நினைவு பதாகையா?” என்று பதிலளிப்பார்கள். அப்படி பார்த்தால் அமைதி படையை அனுப்பி பல்லாயிரம் தமிழர்களை கொன்றழித்த ராஜீவ் காந்தியின் நினைவுநாளில் நீங்கள் வைக்கும் பதாகைகளை நாங்கள் கிழித்து போடுவதா?
இளங்கோவன் அவர்களே வந்தாரை வாழவைத்து வாழவழியில்லாமல் அலையும் தமிழர்கள் என்று எங்களை சாதாரணமாக நினைத்துவிட்டீர்கள் போல. எங்கள் தொப்புள்கொடி உறவுகள் ஈழத்தில் அகதிமுகாம்களில் வாட கர்நாடகாவிலிருந்து பொருளாதார ஏதிலிகளாக வந்த நீங்கள் தமிழகத்தில் அனுபவிக்கும் வசதிகளை எண்ணிப்பாருங்கள். எவன் உண்மையான தமிழன் எவன் உண்மையான தமிழன் இல்லை என்று தமிழன் சிந்திக்க ஆரம்பித்தால் நீங்கள் காணமல் போய்விடுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.கடந்த தேர்தலில் உங்கள் சொந்த தொகுதிவரை வந்து உங்களை விரட்டி அடித்த உணர்வாளர்களுக்கு உங்களை தமிழகத்தை விட்டே அடித்து விரட்ட ரெம்ப நாளாகிவிடாது.கறைபடிந்த உங்கள் கரங்கள் எங்கள் மாவீரர்கள் படங்களை தீண்டியது கொண்டு கொதித்து போயி இருக்கிறோம். உங்கள் எஜமானியம்மா உங்களுக்கு எலும்பு துண்டுகளாக பதிவிகளை எடுத்து வீசலாம் தமிழன் விழித்து எழுந்தால் நீங்களோ உங்கள் காங்கிரசுகட்சியோ தமிழ்நாட்டில் இருக்கமுடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். முடிந்தால் தமிழ்நாட்டில் எங்காவது ஒரு மூலையில் வார்டு கவுன்சிலாராக வென்றுவிட்டு வாருங்கள்.
அது என்ன இந்திய இறையாண்மை?
நீங்கள் தற்போது சீமான் போன்ற தமிழ் இன உணவாளர்களுக்கு எதிராக கையில் எடுத்திருக்கும் துருப்பிடித்த ஆயுதம் இந்திய இறையாண்மை. அது என்னங்க இந்திய இறையாண்மை? எங்களை பொறுத்தவரை இறை என்பது பொய். நீங்கள் இந்தியாவிற்கு இருப்பதாக சொல்லும் ஆண்மையும் எங்கள் மீனவர்கள் சிங்களவனால் சுட்டு வீழ்த்தப்படும் கோரத்தை இந்தியாவால் தட்டி கேட்க்கமுடியாத பொழுதே பொய் என்று ஆகிவிட்டது. இப்படி இல்லாத ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு எங்கள் தோழர்களை நசுக்க முனைவது நியாயமா?
காவேரில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று சொல்ல ஒரு எஸ்எம் கிருஷ்ணாவால் முடிகிறது. தலைமையால் அவர்களுக்கு உத்தரவிட முடியவில்லை. ஆனால் நீங்கள் தமிழக நலனுக்காக சிறிதேனும் குரலை உங்கள் தலைவியிடம் உயர்த்தியது உண்டா? அப்போது இந்திய இறையாண்மை எங்கே போனது? தண்ணீர் பிரச்சனையில் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படாதா? ஒகேனக்கல் நீர் தமிழத்தின் உரிமை என்று உங்களால் உரக்க சொல்ல முடியுமா? முல்லை பெரியாரில் புதிய அணைகட்ட ஆய்வினை மேற்கொள்ள உங்கள் காங்கிரசுகட்சி அனுமதிகொடுத்ததை பத்தி உங்கள் தலைமையிடம் கிசுகிசுக்கவாவது முடியுமா?
அது என்னங்க இந்திய இறையாண்மை தமிழனுக்கு மட்டும் தொடர்ந்து போதிக்கப்படுகிறது? இந்தியாவில் பிறவாத ஒருவரை இந்திய பிரதமராக்க நீங்கள் முயலும் பொழுது வெளிநாடுகளில் வாழும் தொப்புள்கொடி உறவுகள் எம் தமிழர்களுக்காக குரல்கொடுத்தால் அது குற்றமா?
—-
தமிழகத்திலிருந்து தமிழன்பன்
(Visited 197 times, 197 visits today)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக