ஞாயிறு, 22 நவம்பர், 2009

பேராசிரியர் இலக்குவனார் நூற்றாண்டு விழா



திருப்பரங்குன்றம், நவ. 21: திருப்பரங்குன்றத்தில் தமிழ் அறிஞர் பேராசிரியர் இலக்குவனார் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இலக்குவனார் ஏராளமான இலக்கிய, இலக்கண நூல்களை எழுதியவர். அவரது தமிழ்ப்பணி அளப்பரியது. அவரது நூற்றாண்டு விழா முற்போக்குக் கவிஞர் பேரவை சார்பில் நடைபெற்றது. இதற்கு நா. நாகசுந்தரம் தலைமை வகித்தார். பாவேந்தர் பேரவைச் செயலர் க. முருகேசன் முன்னிலை வகித்தார். வாசகர் வட்ட துணைச்செயலர் பொன். மனோகரன் வரவேற்றார். புலவர் ரா. இளங்குமரனார், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ரா. மோகன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். விழாவை முன்னிட்டு நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் அளிக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கவிஞர் பேரவை நிறுவனர் மு. தமிழ்கூத்தனார் செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக