சனி, 28 நவம்பர், 2009

ராம் வெளியிட்ட மாவீரர் தின உரை இலங்கை அரசின் கொள்கைப் பிரகடனமா ?

27 November, 2009 by admin

விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகளில் ஒருவரான ராம் அவர்கள் இன்று மாவீரர் தின உரை ஒன்றை ஒலிவடிவில் வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் இலங்கை இராணுவத்தின் பிடியில் இருந்து செயல்படுவதாக பல செய்திகள் வெளிவந்தது. இருப்பினும் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரித்தறிவதே மெய் என நாம் பொறுமை காத்தோம். இருப்பினும் இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை மூலம் அவர் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவது போலான தோற்றப்பாடு வலுத்திருக்கிறது.

(1) முதலாவதாக அவர் வெளியிட்டுள்ள மாவீரர் தின உரையில் பின் புலத்தில் குயில் கூவுவதுபோல ஒரு ஒலி எழுப்பப்பட்டு அவர் காட்டில் இருப்பதைப் போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயன்றுள்ளனர் சிலர். அவர் ஆற்றிய உரையின் 30 நிமிடமும், அந்தக் குயில் பின் புலத்தில் தொடர்ந்து ஒரே சீராகக் கூவிக்கொண்டிருப்பதை கேட்கக்கூடியதாக உள்ளது. அத்துடன் குயில் கூவுவதை பதிவுசெய்து அதனை மீண்டும் மிண்டும் பின் புலத்தில் ஒலிபெருக்கியுள்ளனர் சிலர்.

(2) விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இறந்ததாக ஒப்புக்கொள்ளும் அவர், இலங்கை இராணுவத்தின் இக் கூற்றை ஏற்றுக்கொள்கிறார். ஏற்கனவே இலங்கை புலனாய்வுப் பிரிவினர் இத்தகைய தோற்றப்பாட்டை வெளிப்படுத்த விரும்பியிருந்தனர் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்.

(3) இனியும் எமது இலக்கான தமிழீழத்தை அடைய தொடர்ந்தும் போராடுவோம் என ஒரு இடத்தில் கூட அவர் கூறவில்லை. முடிவில் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் எனக் கூறி முடித்துள்ளார்.

(4) உரையில் மே 17 ம் திகதி தன்னைத் தொடர்புகொண்ட தேசிய தலைவர் தன்னையே பொறுப்பை ஏற்று வழி நடத்துமாறு கூறியதாக தெரிவித்துள்ளார். அப்படியாயின் கே.பி என்று அழைக்கப்படும் பத்மநாதன் அவர்களும் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தம்மையே தலைவராக இருக்கும்படி தேசிய தலைவர் கூறியதாகத் தெரிவித்திருந்தார். இதனை நோக்கும் போது தேசிய தலைவர் அவர்கள் 2 பேரை விடுதலைப் புலிகளின் தலைவராக இருக்கும் படி கூறியிருக்க மாட்டார். இரண்டில் ஒருவர் பொய்யுரைப்பது, புலனாகின்றது. கே.பி அவர்கள் தம்மை தலைவர் என பிரகடனப்படுத்தும் போது ராம் ஏன் எதிர்க்கவில்லை?

(5) தாமும் சில தளபதிகளும் காட்டில் காலூன்றி இருப்பதாகக் கூறும் ராம் அவர்கள் போராட்டத்தைப் பற்றியோ அல்லது வருங்கால நடவடிக்கைகள் குறித்தோ எதுவும் கூறாமல், புலம் பெயர் மக்கள் தொடர்ந்தும் நிதியளிக்க வேண்டும் எனக் கூறுகிறார். காட்டில் காலூன்ற இவருக்கு நிதி அவசியமாக உள்ளதா? அதாவது பெரும் தொகையான நிதி?

(6) உரையில் தேசிய தலைவர் உறுதியாக இறுதிவரை போராடியதால் தான் மக்கள் தற்போது முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டு கிடக்கிறார்கள் என்பதுபோன்ற சாயலில் தனது உரையை நிகழ்த்தியது மட்டுமல்லாது, வெளி நாடுகள் வேகமாக வந்து உதவவேண்டும் என்றும் கோரியுள்ளார். அதாவது போராட்டம் ஏதும் இன்றி வெளிநாடு ஒன்று தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டுமாம்.

ராம் அவர்கள் இராணுவத்தின் பிடியில் இல்லை என்று ஒரு கணம் நாம் வைத்துக்கொண்டால் கூட, ஒரு தூர நோக்கும், தெளிவற்ற சிந்தனையும், போராட்டத்தை முன்னெடுக்கத் திறனும் இன்றி இவர் இருப்பது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது. இப்படியான ஒருவரிடம் தமிழீழப் போராட்டத்தை எவ்வாறு கையளிப்பது?. தேசிய தலைவர் ஒருபோதும் புலம்பெயர் மக்களிடம் நிதி உதவி கேட்டது இல்லை. மாறாக மக்களே மனமுவந்து நிதி அளித்தனர். காரணம் அங்கு நடைபெற்ற தாக்குதல்கள். இலங்கை இராணுவம் மீது புலிகள் நடத்திய தாக்குதல்களே காரணம்.

தளபதிகளுடன் தாம் காட்டில் கால் பதித்துள்ளோம் என, ஏதோ இமயமலையில் கால் பதித்தது போல இவர் கூறுவதை எவரும் நம்பத் தயாரில்லை. இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவினருடன் இவர் சேர்ந்து இயங்குகிறார் அல்லது இயங்கவில்லை என்பதை விட இவர் போராட்டத்தை கொண்டு நடத்தக்கூடிய திறன் அற்றவர் என்பதே இன்றைய தினம் தெளிவாகியுள்ளது.



சர்ச்சைக்குரிய இவ் விடையம் குறித்து உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். அனைத்து கருத்துக்களும் உள்வாங்கப்படும். மக்களாகிய நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதே முக்கியமானது. athirvu@gmail.com


---------------------------------------------
comments by: Kokulan UK
லங்காசிரியில் இதைக் கேட்டபோதே நினைச்சேன், நீங்கள் எழுதி விட்டீங்க.. ஒரு பெரிய பாராட்டு. என்ன நடக்கப் போகுது எண்டு கூடச் சொல்லாமல் ஒரு சிறுபிள்ளைத் தனமான மாவீரர் தின உரை. உன்மையா ராம் காட்டில் இருந்தாலும் இவரால போராட முடியாது அது தான் உண்ம்மை
---------------------------------------------
comments by: Vasu
Sorry i dont trust this guy anymore
---------------------------------------------
comments by: Kala Thurairaja
So who to trust ? its a big question,
---------------------------------------------
comments by: Seevaratnam Swiss
இதை எல்லம் எழுதி பெரிய எதிர்ப்பை நீ ராமிடம் சம்பாதிக்கப் போற
---------------------------------------------
comments by: Sam
dont trust anyone man just keep reading the hear say
---------------------------------------------
comments by: Arivu
வன்னியில் புலிகள் நடத்தியது தற்காப்பு யுத்தம் மட்டுமே .அங்கே இருந்ததெல்லாம் தற்காப்புக்கு தேவையானவை மட்டுமே . உண்மையான சண்டை இன்னும் தொடங்கேலை , அதை சிங்களவனும் உலகமும் இன்னும் பார்க்கேலை . நிச்சயம் அதை அவை பார்ப்பினம் . வரலாறு மீண்டும் எழுதப்படும். தீர்ப்பு தமிழர்களால் வழங்கப்படும்
---------------------------------------------
comments by: Saravanan
இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவதை விட சயனைட் அடிச்சு சாகலாம். அதிலும் மாவீரர் தின உரைவேறு, அப்பவே கணக்க கதை வந்தது உரை கேட்ட பின் தான் தெரியுது வண்டவாளம்
---------------------------------------------
comments By: Thevaraja
to be honest he is not reading this speeach, i am pretty sure, thats not his Voive, i have heard that many times since 2005 . some is going on , dont know what ?
---------------------------------------------
comments by: Yokithan
கலே மிஸ்டர் ராம். நீயும் ஒரு கருணாவா மாறீட்டியா ? எல்லம் இனி போராடவேண்டியது இல்ல. இனிமேல் ரஜபக்ஷ குடும்பத்திற்கு சேலை களுவி கொண்டு இரு கருணா மாதிரி
--------------------------------------------
comments by: M.Riva
நானும் ஒரு தமிழ் மகள் என்பதால் கூருகிறேன், எங்கள் தேசிய தலைவரினதும், மாவீரச் செல்வங்களினதும் உணர்வுகளை லட்சியத்தையும் எவரும் கேவலப்படுத்தாமல் உண்மையான தமிழ் உணர்வுடன் பேசுங்கள். வருங்காலத்தில் நிச்சயம் தமிழீழம் மலரும்
---------------------------------------------
comments by: kedasamy
எல்லோரும் தலைவர் ஆகாமல் தேசிய தலைவரின் கீள் செயல்பட்டு எல்லாத்தையும் வென்றெடுக்க வேண்டும். முதலில் தமிழர் எல்லோரும் ஒரு குடும்பமாக ஆகுங்கள். எலம் வெரைவில் கைஜில் வரும்தமிலுக்கு மென்மைதகு வெலுபில்லை பிரபகரந்தன் தனி தைவன் எனும் நொக்குடன் செயர்படுன்கல்தமிலச்ச்க்ஜின் பனிவன வென்டுகொல்
--------------------------------------------
comments by: Ravichandran
எப்படி முதலில் ஒண்டா வேலை செய்வது ? காட்டிக் கொடுப்பவனை கூட வைச்சிருக்கச் சொலுறியளா ? முதலில் களை எடுக்க வேனும், பின்னர் போராட்டம் தொடங்கவேணும், இல்லை என்டா இன்னும் 33 வருடத்திற்குப் பிறகும் இப்படித் தான் நிர்ப்போம்.
---------------------------------------------
comments by: empiyan
1. Speech is not authentic.
2. Every Tamils knew that a proper and longer, longer, longer... period is being given by LTTE to the Sri Lankan Government and to the Worlds political leaders, to bring peace, happiness, and security to the Tamil Nation.
3. In this situation, we do not need an M V Speech now.
4. First action and then speech, this is LTTE.
5. According to some reliable people, Thal. Prabakaran is living. I believe it too...
6. No one can underestimate the political knowledge of Thal. Prabakaran.
7. Speech of Mr. Ram, does not match with Tamils present situation.
--------------------------------------------
comments by: Eela makan
தமிழ் ஈழ மகளெய் ராம் போன்ற துரோகிகளின் பேச்சு எல்லாம் கேட்டு குழம்ப வேண்டாம்,கருணா ,ராம் ,தாஜா மோகன் ,இந்நிசும் வருவார்கள் பல துரோகிகள்,அன்ன பறவை போல் வாட்டர் அஹ ஜும் பால் அசும் தனிஜாக பிரிக்கும் தெளிவு மக்களுக்கு வேண்டும்,ராம் எதிர் பார்த்து இருப்பது எல்லாம் புலம் பெயர் தமிழ் மகளின் பணத்தை தான்,ராம் இன் உரை அதைத்தான் முகிஜமாக எதிர் பார்த்து இருக்கிறது ,ராம் கருணா போல் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் இருந்து தான் இந்த அறிக்கை விடு உள்ளார் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்,புற சூழ்நிலைகள் சரிஜாக அமஜும் போது தலைவர் மக்கள் முன் தோன்றுவார்,தலைவரால் மாடும் தான் தமிழ் ஈழத்தை பேர்தரு தர முடிசும்,ராம் இடம் தலைவர் போராடத்தை ஒப்படைக்கும் அளவுக்கு ராம் ஒரு முக்கிஜமான தளபதி இல்லை,ராம் சாதாரண தர போராளி என்பதசும் மக்கள் புரிஞ்சு கொள்ள வேண்டும்,ராம் இன் நுகம் எல்லாம் புலம் பெயர் மகளிடம் இருந்து பணத்தை பெறுவது தான் மக்களெய் ஏமாற வேண்டாம் ,
---------------------------------------------
comments by: Unknown person
I believe and agree with AYYA Nedumaran's words....
---------------------------------------------
comments by: karthi
karthi; i am not beleve ram speach. he is not good leader of ltte
---------------------------------------------
comments by:Savaranan
raamin uraiyai tamilarkal namba vendaam endru kettukolkirom.
---------------------------------------------
comments by: Ram
ராம் ஒரு முக்கிய தளபதி தான்.அவருக்கு தலைவருக்கு உரிய தகுதி எல்லாம் இருக்கிறது.புலம்பெயர் மக்கள் அனைவரும் நிதி அளித்து அண்ணன் ராமின் கரங்களை பலப்படுத்துங்கள்.வெளிநாட்டில் உள்ள சில துரோகிகள் ராமை துரோகி ஆக்கபார்க்கிறார்கள்.
---------------------------------------------
comments by: சம்பூகன்
ராம் என்பவர் வெளீயிட்டிருக்கும் அறிக்கையானது முழுக்க முழுக்க இலங்கையின் தயாரிப்பு என்பது அதன மொழி நடையிலேயே தெளிவாக தெரிகிறது. இன்று தலைமை செயற் பீடத்தின் வாயிலாகவும், ராம் மூலமாகவும் வெளியிடப்பட்டிருக்கும் மாவீரர் நாள் அறிக்கைகளை நாம் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அதனை நாம் எளிதில் கண்டுகொள்ள முடியும்.

- இரண்டாவதாக இந்த அறிக்கை முழுக்கவும் 'பிரகடனப்படுத்துகின்றேன், நினைவு கூறுகின்றேன்'என்று ஏகப் பிரதிநிதியாக தன்னை விளித்துக் கொள்வதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

- மிகமுக்கியமாக 2ம் பக்கத்தில் இருக்கும் பின்வரும் வரிகளை கவனியுங்கள் சிங்கள அரசின் அருவெறுப்பான் முகம் பல்லிளிக்கும்:

"எமது தலைவர் எமது மக்களினுடைய இலட்சியத்தை எந்த சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்காமல் தன்னம்பிக்கையோடு களத்தில் நின்றார். இதன் விளைவு ஒரு பாரதூரமான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
.................."

இப்படியாக பொடிவைத்து இன்று சிங்கள அரசு தமிழின மக்களை முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கி வைத்திருப்பதை பட்டியிலிட்டு அதற்கெல்லாம் காரணம் தன்னம்பிக்கையோடு களத்தில் நின்ற பிரபாகரன்தான் என்று நிறுவுகிறது இந்த அறிக்கை.
---------------------------------------------
comments by: Rajan
Well done athirvu i like the depth you get into it. Thanks for all that,As we all expected prisoner Ram has come on our heros day and exposed the sri lankan government's ideas for us,unfortunately we didn't like and also we like to tell sinhala fools tamil are not fools and stop all these nonsense and don't try to triggers the tamils again,if they keep doing that again and again they will pay for it soon.we dom't want anybody insult our heros and our leader,our leader is not cheep like sinhala monkeys.we will continue to fight until our brother come out.our people got the clear ideas now so no one can't confuse them any more.
---------------------------------------------
comments by: ஜெனகன்,தம்பசிட்டி.
இவர் தலைவர் பிர்பாகரன் மாதிரி அதே பாணியில் உரை நிகழ்த்த என்ன அருகதை இருக்கு...?
தலைவரின் இடத்தை யாரால் நிரப்ப முடியும்..?
---------------------------------------------
comments by: Disanth Sweeden
ram is a realy leader and he is my leader.
---------------------------------------------
comments by: Meeman
ram....you are another karuna/traitor.
do not think you can bluff anyone like this. we are true tamils,decentants of the GREAT VELLUPILLAI PRABAKARAN.
not traitors like you fools, go and lick sinhala modayas feet.
---------------------------------------------
comments by: sutha
சென்ற முறை கருணா இம்முறை ராம் உக்காந்திருந்து பிளான் போடுவாங்களோ
---------------------------------------------
comments by: Meenamaa
well done NEDUMAARAN AIYA,leaders like you should give us all advice to get our precious land.Ram's speech is sinhala doggies statement. we are not fools to believe this. our one and only leader is V. PRABAKARAN THE GREAT.
--------------------------------------------
comments by: Athavan
உங்கள் கருத்துப்படி காட்டுக்குள் இருந்தாலும் அவர் தகுதி இல்லாதவர். சரணடைந்தவர்களும் எந்த முயற்ச்சியும் எடுக்காதவர்கள் தகுதியானவர்கள்..
---------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக