வெள்ளி, 27 நவம்பர், 2009

மான் தொடர்ந்தும் விசாரணையில் நாடு கடத்தப்படும் அபாயம் (3ம் இணைப்பு)

26 November, 2009 by admin

சற்று முன்னர் கிடைத்த தகவல்படி, உணர்வாளர் சீமானவர்கள் விசாரணையின் பின்னர் விடுதலைசெய்யப்பட்டதாகவும், தாம் அவரைக் கைதுசெய்யவில்லை, விசாரணைக்காகவே அழைத்துச் சென்றதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர் தொடர்ந்தும் விசாரிக்கப்படு வருவதாகவும். அவரை தடுத்துவைத்து , நாடு கடுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

இன்று இரவு நடைபெறவுள்ள நிகழ்வில் சீமான் நடத்த உள்ள பேச்சுக் குறித்தும், அங்கு கூடவுள்ள மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படுவது குறித்தும் அவரது சட்ட வல்லுநர்களுடனும் கலந்துரையாடவே கனடிய போலீசார் சீமானை அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் கூறுகின்றது.

நேற்றைய தினம் மாணவர் நிகழ்வொன்றில் சீமான் அவர்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமாகப் பேசியிருந்தார். இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திய இலங்கை அரசு, சில ஆதாரங்களைத் திரட்டி கனடிய பொலிசாரிடம் கொடுத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன் கனடாவில் நடைபெற இருக்கும் மாவீரர் நாள் மற்றும் இன்று நடைபெற இருந்த தேசிய தலைவரின் பிறந்த நாள் நிகழ்வுகளைக் குழப்பும் நோக்கில் இலங்கை அரசும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் கைக்கூலிகளுமே இவ்வாறு ஒரு ஈனச் செயலில் ஈடுபட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அனைத்து நாடுகளிலும் மாவீரர் தினம் நடைபெற உள்ள இந்தவேளையில் இதனைக் குழப்பும் நோக்கில் இவ்வாறான செயல்களில் அந்நாட்டு அரசாங்கங்களைத் தூண்டும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளது. தோழர் சீமான் அவர்களின் கைது செய்யப்பட்டதை அதிர்வு இணையம் வன்மையாகக் கண்டிப்பதுடன், கனடா போன்ற பேச்சு, ஜனநாயகச் சுதந்திரம் மிக்க நாட்டில் தமது சொந்தக் கருத்துக்களை முன்வைப்போரை கைது செய்வது, ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் ஒரு நடவடிக்கையாகும். அத்துடன் விசாரணை என்ற போர்வையில் இவர்கள் வாயை அடைக்க அரசு முயல்கிறது என்பது வருந்தத்தக்க விடையமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக