வியாழன், 26 நவம்பர், 2009

மக்​க​ள​வை​யில் அழ​கிரி இல்​லா​த​தால் அமளிபுது தில்லி,​ நவ. 25: மக்​க​ள​வை​யில் கவன ஈர்ப்​புத் தீர்​மா​னத்​தின்​போது பதி​ல​ளிக்க மத்​திய அமைச்​சர் மு.க.அழ​கிரி அவை​யில் இல்​லா​த​தால் கூச்​சல்,​ குழப்​பம் ஏற்​பட்​டது. உ​ரத் தட்​டுப்​பாடு தொடர்​பாக மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி உறுப்​பி​னர் வாசு​தேவ் ஆசார்யா புதன்​கி​ழமை கவன ஈர்ப்​புத் தீர்​மா​னம் கொண்டு வந்​தார். இ​தற்கு பதி​ல​ளிப்​ப​தற்​காக மத்​திய ரசா​ய​னம் மற்​றும் உரங்​கள் துறை இணை அமைச்​சர் ஸ்ரீகாந்த் ஜெனா இருக்​கை​யில் இருந்து எழுந்​தார். ஆனால்,​ முக்​கி​ய​மான இப் பிரச்னை குறித்து அழ​கி​ரி​தான் பதி​ல​ளிக்க வேண்​டும் என ஆசார்யா,​ அனந்த குமார் ​(பாஜக)​ உள்​ளிட்ட எதிர்க்​கட்சி உறுப்​பி​னர்​கள் குரல் எழுப்​பி​னர். அ​ரசு என்​பது கூட்​டுப் பொறுப்பு என்​ப​தால்,​ கேள்​வி​க​ளுக்கு பதி​ல​ளிக்க எந்த அமைச்​சரை வேண்​டு​மா​னா​லும் அரசு கேட்​டுக் கொள்​ள​லாம் என அவைத் தலை​வர் மீரா குமார் கூறி​னார். இத​னால்,​ திருப்​தி​ய​டை​யாத எதிர்க்​கட்சி உறுப்​பி​னர்​கள் தங்​கள் கோரிக்​கை​யில் விடாப்​பி​டி​யாக இருந்​த​னர். இந்​நி​லை​யில்,​ மத்​திய அமைச்​சர்​கள் டி.ஆர்.பாலு,​ ஆ.ராசா ஆகி​யோர் முன்​வ​ரி​சைக்கு வந்து அழ​கி​ரிக்கு ஆத​ர​வாக குரல் எழுப்​பி​னர். ​ பிரச்​னையை முத​லில் எழுப்​பி​யது கம்​யூ​னிஸ்ட் உறுப்​பி​னர் என்​ப​தால்,​ அழ​கி​ரிக்கு ஆத​ர​வாக திரி​ண​மூல் காங்​கி​ரஸ் உறுப்​பி​னர்​கள் கோஷ​மிட்​ட​னர். அ​வைத் தலை​வ​ரின் சமா​தா​னத்தை எதிர்க்​கட்​சி​கள் ஏற்​கா​தது குறித்த தனது அதி​ருப்​தியை அவை முன்​ன​வர் பிர​ணாப் முகர்ஜி வெளிப்​ப​டுத்​தி​னார்.
கருத்துக்கள்

தமிழில் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாராளுமன்றத்தைப் புறக்கணித்திருக்கலாம். எனவே, உடனே, தமிழுக்கான சம உரிமையை மத்திய அரசு வழங்க வேண்டும். அது வரை பிறரும் இவரைப் பின்பற்றி அவையைப் புறக்கணிக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/26/2009 3:07:00 AM

Azhagiri might be hiding in the toilet!, When ever question times comes, he will say "Escape" and next second he will be in toilet and he dont come until the Q/A section completes. It is really a shame that these goons are going to Parliment.

By prabha
11/26/2009 2:10:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக