வியாழன், 26 நவம்பர், 2009

முடிந்த தொடர்... முடியாத வரலாறு...: இலங்கை தமிழ் மன்னர் குறித்து முதல்வர் கருணாநிதி



சென்னை, நவ. 25: இலங்கை வன்னிப் பகுதியில் வாழ்ந்த பண்டாரக வன்னியன் என்ற தமிழ் மன்னரின் கதை முடியாத வரலாறாக வாழும் என்று முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். இன்று விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த தினம். அதை நினைவில் கொண்டு முதல்வர் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. இதுதொடர்பாக, அவர் புதன்கிழமை எழுதியுள்ள கடித விவரம்: "முரசொலி'யில் இரண்டாவது முறையாக வெளிவந்துகொண்டிருந்த "பாயும்புலி பண்டாரக வன்னியன்' என்ற வரலாற்று காவியம் முடிவடைந்துவிட்டது. ஆனால், அந்த வீர காவியம் வாழ்ந்து கொண்டே இருக்கும். இந்த நாவலில், வஞ்சிக்கப்பட்ட நல்ல நாச்சியார், "நானும் தமிழன் தானே' என்று கூறுகிற காக்கை வன்னியனை நோக்கி, "நீ தமிழன் தான்! இனத்தால், மொழியால், உன் உடலில் ஓடும் ரத்தத்தால் நீ தமிழன் தான்! ஆனால் சூடு, சொரணை இல்லாத தமிழன்! பணத்துக்காகப் பாத பூஜை செய்யும் தமிழன்! பதவிக்காக மானத்தை அடகு வைக்கும் தமிழன்!' என்று சினந்து கூறுவதாக அமையும். இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய நிதியமைச்சர் க. அன்பழகன், ""இது இன்றைய தமிழ் மண்ணில் எவ்வளவு பேருக்கு ஏற்புடையதாக அமையும் என எண்ணத் தோன்றுகிறது'' என்று குறிப்பிட்டுள்ள்ர். மற்றொரு இடத்தில் வெள்ளைக்கார மேஜர், "எதிரிகள் கஷ்டப்பட்டுப் பிரித்து வைக்கத் தேவை இல்லாமலே, தாங்களாகவே பிரிந்து நிற்கும் இனமும் தமிழ் இனம்தான்!' என்று கூறுவதாக அமையும். ""இந்தக் கூற்று எவ்வளவு வேதனையோடு நம் நெஞ்சில் அதிர்கிறது'' என்று தான் கொண்ட அதிர்வை அன்பழகன் அணிந்துரையில் எடுத்துக்காட்டுகிறார். இந்த வீரனது சிலை திறப்பு விழா 1982-ம் ஆண்டு நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி வித்யானந்தன், ""வன்னிப் பிரதேச மக்களுக்கு மட்டுமின்றி, நம்பிக்கை தளர்ந்து போயிருக்கும் ஈழத் தமிழர் யாவருக்கும் நம்பிக்கையும், தேசப்பற்றும், உரிமைக் குரலும் அதிகரிக்க இச்சிலை உதவும். நல்ல தலைவர்களை மக்கள் விரும்பவும், இனம் கண்டு கொள்ளவும், புதிய தலைவர்கள் தோன்றவும் இந்த சிலை வழிவகுக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார். உண்மையிலேயே அந்த சுதந்திரப் போர் வீரன் தோற்கடிக்கப்பட்டானா? அத்துடன் அவனது போர் முழக்கம் முற்றுப்பெற்றுவிட்டதா? அல்லது மீண்டும் ஆர்ப்பரித்துக் கிளம்பியதா அந்த அரிமா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் "பாயும் புலி பண்டாரக வன்னியன்' தொடர் சித்திரம், பதில் அளிக்கத்தான் செய்கிறது! விளக்கமான பதில்! வீரம் கொப்பளிக்கும் பதில்! அந்த நாவலின் முடிவில், குருவிச்சியின் மூச்சு நின்று போனது தெரியாமலே குதிரை மீது அவளை அணைத்தவாறு பண்டாரக வன்னியன், ஆங்கிலேயரிடமிருந்து தப்பிவிட்டதாக வரும். மணக்கோலம் பூண்டு வாழ்வின் சுவை அறியத் துடித்தவள், இலட்சியத் திருவிளக்காய், பிணக்கோலம் பூண்டு பண்டாரகனின் குதிரையில் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தாள்; அவள் உயிருடன் இருப்பதாகவே கருதிக்கொண்டு அவனும், அவனைப் பின்தொடர்ந்த தமிழ் வீரர்களும் காட்டுப் பாதையில் நெடுந்தூரம் சென்றுகொண்டிருந்தனர் என்று முடியும். காட்டுப்பாதையில் சென்று அவர்கள் அன்று காட்டிய பாதை வீரமறவர்களின் பாதை! பண்டாரக வன்னியன் ஒருவனல்ல; அவனைப் போல பலர்; உறுதியும் வாய்மை ஒளியும் உணர்வும் கொண்டவர்கள் தோன்றிட, அந்த மாவீரனின் வரலாறு பயன்படத் தவறவில்லை. எனவே, அது வாழும் வரலாறு என்று முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

வாழும் செங்குட்டுவனாகப் புதிய புறநானூறு படைத்த புதுமை வீரனாகத் தாயக உரிமையை நாட்டும் மான மறவனாகத் திகழும் தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மாவீரர் மேதகு பிரபாகரன் அவர்களின் சீர்மைகளையும சிறப்புகளையும் வெளிப்படையாகவே உலகம் போற்றும் காலம் வெகு விரைவில் வரும். தாய் இனமானத் தமிழ் இனத்தைச் சேய் இனங்கள் வஞ்சிப்பதற்கு விரைவில் முற்றுப்புள்ளி இடப்பெறும். தமிழ் ஈழம் உலக நாடுகளின் ஒப்பற்ற உயர்ந்த நாடாகத் திகழ்ந்து தமிழ் இலக்கிய, நாகரிக, வரலாற்ற,பண்பாட்டுச் சிறப்புகளைப் பாரறியச செய்யும். உலகு போற்றும் வகையில் அறிவியல் மேதைகளையும் தொழில் மேதைகளையும் இலக்கிய மேதைகளையும் பாருக்கு அளிக்கும். நாம் யார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என வாழும் வீரத் தமிழினத்தில் களப் போராளிகளும் மனைப் போராளிகளும் சிந்திய குருதி வீண் போகாது. வெல்க தமி்ழ் ஈழம்! ஓங்குக தமிழ் ஈழ-உலக உறவுகள்! மேதகு பிரபாகரன் நூறாண்டுகள் நலமாக வளமாக வாழ்க! எனத் தினமணி வாசகர்கள் சார்பில் வாழ்த்துகின்றேன். வீர வணக்கங்களுடனும் வாழ்த்துகளுடனும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/26/2009 2:38:00 AM

தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மாவீரர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளில் அவரை எண்ணாமல் யாரும் இருக்க முடியாது என்பதற்கு இதுவே சான்று. வாழும் செங்குட்டுவனாகப் புதிய புறநானூறு படைத்த புதுமை வீரனாகத் தாயக உரிமையை நாட்டும் மான மறவனாகத் திகழும் மேதகு பிரபாகரன் அவர்களின் சீர்மைகளையும சிறப்புகளையும் வெளிப்படையாகவே உலகம் போற்றும் காலம் வெகு விரைவில் வரும். தாய் இனமானத் தமிழ் இனத்தைச் சேய் இனங்கள் வஞ்சிப்பதற்கு விரைவில் முற்றுப்புள்ளி இடப்பெறும். தமிழ் ஈழம் உலக நாடுகளின் ஒப்பற்ற உயர்ந்த நாடாகத் திகழ்ந்து தமிழ் இலக்கிய, நாகரிக, வரலாற்ற,பண்பாட்டுச் சிறப்புகளைப் பாரறியச செய்யும். உலகு போற்றும் வகையில் அறிவியல் மேதைகளையும் தொழில் மேதைகளையும் இலக்கிய மேதைகளையும் பாருக்கு அளிக்கும். நாம் யார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என வாழும் வீரத் தமிழினத்தில் களப் போராளிகளும் மனைப் போராளிகளும் சிந்திய குருதி வீண் போகாது. வெல்க தமி்ழ் ஈழம்! ஓங்குக தமிழ் ஈழ-உலக உறவுகள்! மேதகு பிரபாகரன் நூறாண்டுகள் நலமாக வளமாக வாழ்க! எனத் தினமணி வாசகர்கள் சார்பில் வாழ்த்துகின்றேன். வீர வணக்கங்களுடனும் வாழ்த்துகளுடனும் இலக்

By anbumalar
11/26/2009 2:36:00 AM

)கருணாநிதி:::மதுரையில் நடந்த "டெசோ' இயக்க மாநாட்டில், பல்வேறு போராளிக் குழுக்களின் தலைவர்கள் பங்கேற்று, சகோதார ஒற்றுமை வேண்டுமென்று வலியுறுத்தினர். அந்த மாநாட்டில் எல்.டி.டி.ஈ., இயக்கத்தின் சார்பாக திலகர் என்பவர் வந்திருந்தார்; பிரபாகரன் வரவில்லை! 1) பதில்....1986ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற டெசோ பேரணி மாநாட்டில் பிரபாகரன் கலந்து கொள்ளாமல் தனது பிரதிநிதியாக திலகர், பேபி சுப்பிரமணியம் ஆகியோரை அனுப்பியதைக் குறைகூறியிருக்கிறார். ஆனால் அம்மாநாட்டில் ஈரோஸ் இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பாலகுமாரன், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பத்மநாபா, பிளாட் இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் உமாமகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளாமல் தங்கள் பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி வைத்தார்கள் என்ற உண்மையை மறைத்து பிரபாகரன் மீது வீண்பழியைச் சுமத்தியிருக்கிறார்

By usanthan
11/26/2009 2:35:00 AM

தட்சணாமூர்த்தியாகிய இந்திய‌ கருணா வெளியிட்ட கருத்துக்கு பதில் கருத்து விடவேண்டிய அவசியம் தமிழீழ தமிழருக்குண்டு‏

By uasnthan
11/26/2009 2:34:00 AM

FOR MONEY & POWER THIS ETTAYAPPAN KILLED HIS OWN RACE. WHAT DOES THIS OLD FOX THINKS OF US? WE ARE NOT FOOLS TO BELIVE YOUR WORDS.

By Paris EJILAN
11/26/2009 2:24:00 AM

whatever drama old fox tamil ina no 1 throki tries,,, it is very evudent he most fit to be described as one doing ''pathapujai'' for power and family and a traitor of tamil inam for joininig delhi durbar to kill 20000 tamils in 2 months. Tamil eelam will be vicorious by the sacrifice of maveerarkal and such throkis will be wiped off!!

By durai
11/26/2009 2:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக