சனி, 28 நவம்பர், 2009

அக​தி​கள் முகா​மில் விடு​த​லைப் புலி​க​ளின் கொடி​யேற்​றப்​பட்​ட​தால் பர​ப​ரப்பு



கும் ​மி​டிப்​பூண்டி,​நவ.27: ​ விடு​த​லைப் புலி​கள் நவம்​பர் 27-ம் நாளை மாவீ​ரர் வீர வணக்க நாளாக அனு​ச​ரிப்​ப​தை​யொட்டி கும்​மி​டிப்​பூண்டி இலங்கை அக​தி​கள் முகா​மில் வெள்​ளிக்​கி​ழமை விடு​த​லைப் புலி​க​ளின் கொடி​யேற்​றப்​பட்​டும்,​ கருப்பு கொடி​யேற்​றப்​பட்​டும்,​ தீப​மேற்​றப்​பட்​டும் இருந்​த​தால் பெரும் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது.÷வி ​டு​த​லைப் புலி​கள் ஆண்​டு​தோ​றும் அதன் தலை​வர் வேலு​பிள்ளை பிர​பா​க​ர​னின் பிறந்த நாளான நவம்​பர் 26-க்கு மறு​நாள் நவம்​பர் 27-ம் நாளை மாவீ​ரர் வீர​வ​ணக்க நாளாக அனு​ச​ரிப்​பார்​கள். இந்த ஆண்டு இலங்கை அர​சுக்​கும்,​ விடு​த​லைப் புலி​க​ளுக்​கும் இடை​யே​யான போரில் விடு​த​லைப் புலி​க​ளின் தலை​வர் பிர​பா​க​ர​னின் மர​ணத்தை தொடர்ந்து முதல் முத​லாக வீர​வ​ணக்க நாள் வரு​வ​தால் அதை தொடர்ந்து தமி​ழ​கத்​தில் உள்ள அனைத்து இலங்கை தமி​ழர் அக​தி​கள் முகா​மில் எவ்​வித அசம்​பா​வி​த​மும் நடை​பெ​றக்​கூ​டாது என்று போலீ​ஸôர் விழிப்​பு​டன் இருந்​த​னர். ​÷இந்​நி​லை​யில் கும்​மி​டிப்​பூண்​டி​யில் இலங்கை அக​தி​கள் முகா​மில் வெள்​ளிக்​கி​ழமை காலை முகாம் மக்​கள் கூடும் பெரிய ஆல​ம​ரத்​தின் உச்​சி​யில் புலிச்​சின்​னம் தாங்​கிய விடு​த​லைப் புலி​க​ளின் கொடி​யேற்​றப்​பட்​டி​ருந்​தது. முன்​தி​னம் நள்​ளி​ரவே முகாம் பகு​தி​யைச் சேர்ந்த யாரோ சிலர் விடு​த​லைப் புலி​க​ளின் கொடியை ஆல மர உச்​சி​யில் கட்​டி​யி​ருக்​கி​றார்​கள்.÷அதே போல கும்​மி​டிப்​பூண்​டி​யில் இருந்து முகா​முக்கு வரும் வழி​யில் முகா​மின் நுழை​வாயி​லில் ஒரு பனை மரத்​தில் வாழை மரம் கட்டி,​ அதில் தீபம் ஏற்​றப்​பட்டு கருப்பு கொடி கட்​டப்​பட்டு இருந்​தது. அந்த பனை மரத்​தில் ஒட்​டப்​பட்​டி​ருந்த துண்டு பிர​சு​ரத்​தில் மாவீ​ரர் நாள் என்று எழு​தப்​பட்​டும்,​ யூதர்​க​ளின் அர்ப்​ப​ணிப்​பில் விடிந்​தது இஸ்​ரேல்,​ தமி​ழர்​க​ளின் அர்ப்​ப​ணிப்​பில் விடி​யும் தமி​ழீ​ழம் என்று எழு​தப்​பட்​டி​ருந்​தது. ​÷அதே போல கும்​மி​டிப்​பூண்டி அக​தி​கள் முகாமை சேர்ந்த மாவீ​ரன் முகா​மில் சில மாதங்​க​ளுக்கு முன்பு விடு​த​லைப் புலி​க​ளுக்​கும்,​ இலங்கை ராணு​வத்​துக்​கும் இடையே நடை​பெற்ற போரின் போது அப்​பாவி தமி​ழர்​கள் கொல்​லப்​ப​டு​வ​தற்கு எதிர்ப்பு தெரி​வித்து தங்​கள் உயிரை மாய்த்​துக் கொண்ட முத்​துக்​கு​ம​ரன்,​ முரு​க​தாசு,​ இராஜா,​ அம​ரே​சன்,​ பால​சுந்​த​ரம்,​கோகுல்,​ ராஜ​சே​கர்,​ எழில்​வேந்​தன்,​இர​வி​சந்​தி​ரன்,​ தமிழ்​வேந்​தன்,​ சீனு​வா​சன்,​ தமிழ்​வேந்​தன்,​ சிவ​பி​ர​கா​சம்,​ இரவி ஆகிய 14 பேர்​க​ளின் படங்​களை தாங்கி பதாகை வைக்​கப்​பட்டு அதன் முன்பே வாழை மரம் நடப்​பட்டு அதன் உச்​சி​யில் தீபம் ஏற்​றப்​பட்​டி​ருந்​தது. ​
கருத்துக்கள்

நீத்தார் பெருமையைப் போற்றம் நாட்டில் இறந்தவர்களுக்கு வணக்கம் செலுத்துவதைத்தடை செய்ய வேண்டிய கொடுமை ஏன்? பண்பாடற்ற செயலில் அரசு ஏன் ஈடுபட வேண்டும? அச்சமா? ஆணவமா? எதுவாக இருந்தாலும் தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிரான செயல்பாடுகளை நிறுத்துவதே நல்லது. தாய் மண் மீட்க உயிரிழந்த களப் போராளிகளுக்கும் மனைப் போராளிகளுக்கும் (வஞ்சகத்தால், அரச வன்முறையால், பன்னாட்டுச சதிகளால் உயிரிழந்த பொதுமக்கள்- இக் கொடுமைகளில் இறக்கும் யாவரும் போராளிகளே!) தினமணி வாசகர்கள் சார்பில் வீர வணக்கம் ! வீர வணக்கம்! வீர வணக்கம்! வீர வணக்கங்களுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/28/2009 3:19:00 AM

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் திஸ்ஸநாயகத்தை விடுவிக்குமாறு கோரி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எனக்கு கடிதம் எழுதியுள்ளார். திஸ்ஸநாயகத்தை தொடர்ந்து ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்கள் மீதான அடக்குமுறைக் குற்றச்சாட்டுகள் எம்மீது சுமத்தப்படுகின்றன.குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் அடிப்படையில் திஸ்ஸநாயகத்திற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து சட்டமாஅதிபரிடம் நான ஆலோசனை கோரியுள்ளேன். முன்னொரு போது என்மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் நான் உரியமுறையில் சட்டத்தரணி மூலம் வாதிட்டமையினால் அந்த குற்றச்சாட்டிலிருந்து விடுதலை பெற்றேன்.எனக்கு எதிராக சாட்சியமளித்தவர்கள் பொய்ச்சாட்சி சொன்னமைக்காக சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதேபோல் திஸ்ஸநாயகமும் தனது தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியும்.அதன் மூலம் அவர் உரிய பரிகாரத்தை தேடிக்கொள்ளலாம். இதனை விடுத்து திஸ்ஸநாயகம் விவகாரத்தை வைத்து அரசியல் நடத்த எவரும் மு

By Ellalan via
11/28/2009 2:54:00 AM

One correction. That is the Thamizh National flag and soon would be the National Flag of the Greater Thamizh Nation. Maveerar Naal should be accepted as a National Day for Thamizhs all over the world. Let us salute their sacrifices for our liberation and freedom.

By Raja
11/28/2009 2:46:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக