தமிழ் உணர்வாளர் சீமான் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்
கனடியப் பொலிசார் நேற்றைய தினம் சீமான் அவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர் என்ற செய்திகள் வெளியாகின. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இருப்பினும் நேற்று இரவு (கனடிய நேரப்படி) அவர் பொலிசாரால் நாடு கடத்தப்பட்டார் என்பது உறுதியாகியுள்ளது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவர் எப்போது இந்தியா சென்றடைவார் என்ற விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
சீமான் அவர்கள் இன்று நடைபெறவிருக்கும் மாவீரர் தின நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை நாடு கடத்துவதன் மூலம் நடைபெறவுள்ள மாவீரர் தினத்திற்கும் கனடிய அரசு அச்சுறுத்தல் விடுப்பதாகவே அமைந்துள்ளது. இலங்கை இந்திய கூட்டுச் சதியாக இவை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போரில் இறந்தவர்களுக்கு மதிப்பளிக்கும் மேற்குலகம், ஒரு விடுதலைப் போரில் இறந்தவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்த முயல்வது மிகவும் வேதனைக்குரியது.
அமைதியாக, ஆர்ப்பாட்டமின்றி நடைபெறும் மாவீரர் தினத்தில் தமது சொந்தக் கருத்துக்களை முன்வைக்க கனடிய அரசு தடை விதித்திருப்பதானது பெரும் அதிர்ச்சியான விடயம், மட்டுமல்லாது இது அவர்களின் தனிப்பட்ட விருப்பில் எடுத்த முடிவாக இருக்காது என்பதிலும் ஐயமில்லை.
Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 18408
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக