புதன், 25 நவம்பர், 2009

கவிஞர் மேத்தாவுக்கு உமறுப் புலவர் விருதுசென்னை, நவ. 24: இஸ்லாமிய இலக்கியக் கழகம் வழங்கும் உமறுப் புலவர் விருது இந்த ஆண்டு கவிஞர் மேத்தாவுக்கு வழங்கப்பட உள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: இஸ்லாமிய இலக்கியக் கழகம் இதுவரை 7 அனைத்துலக இலக்கிய மாநாடுகளையும், ஒரு மாநில மாநாட்டையும் நடத்தியுள்ளது. இரண்டாவது மாநில மாநாடு வரும் டிசம்பர் 13-ம் தேதி சென்னை, சோழிங்கநல்லூர் சதக் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. அம்மாநாட்டில் ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் கூடிய இந்த ஆண்டுக்கான உமறுப்புலவர் விருது கவிஞர் மேத்தாவுக்கு வழங்கப்படும். நலிந்த எழுத்தாளருக்கான ரூ.20 ஆயிரம் கொண்ட விருது துபாஸ் தாஜூதீனுக்கு வழங்கப்பட உள்ளது. மாநாட்டில் மத்திய, மாநில அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்பார்கள் என இதாயத்துல்லா தெரிவித்தார். பேட்டியின்போது இலக்கியக் கழகத் தலைவர் என்.ஏ. அமீர் அலி உடனிருந்தார்.
கருத்துக்கள்

விருது பெறும் கவிஞர் மேத்தா அவர்களுக்கும் பொருத்தமானவருக்கு விருது வழங்கும் இசுலாமிய இலக்கியக் கழகத்திற்கும் தினமணி வாசகர்கள் சார்பில் பாராட்டுகள்.

By Ilakkuvanar Thiruvalluvan
11/25/2009 2:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக