ஓபரா வின்ஃபிரே தொலைக்காட்சி நிகழ்ச்சி 2011-ல் நிறைவு
First Published : 22 Nov 2009 12:46:41 AM IST
Last Updated :
சிகாகோ, நவ.21: அமெரிக்காவில் ஒளிபரப்பப்படும் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி "ஓபரா வின்ஃபிரே' செப்டம்பர், 2011ல் நிறைவுபெறுகிறது என்று அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ஓபாரா வின்ஃபிரே சனிக்கிழமை தெரிவித்தார்.
ஓபரா வின்ஃபிரே நிகழ்ச்சி காலை வேளையில் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செப்டம்பர் 8, 1986-ம் ஆண்டு தொடங்கியது.
உலகில் உள்ள 145 நாடுகளில் இந் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சிக்கு முதலில் சிகாகோ என பெயரிட்டப்பட்டது. பின்னர் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளினி பெயரிலேயே ஓபார வின்ஃபிரே என்றானது.
ஓபரா வின்ஃபிரே (55), அமெரிக்காவின் பிரபல பத்திரிகை ஃபோர்ப்ஸ் வெளியிடும் சக்தி வாய்ந்த பெண்மணிகள் வரிசையில் தொடர்ந்து 45-வது இடத்தை பிடித்துள்ளார்.
தொகுப்பாளினி வின்ஃபிரே, உலகம் முழுவதிலும் இருந்து இந்நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் அனைவரையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில் மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சியானது 25-வது ஆண்டில் நிறைவுபெற உள்ளதாக தொகுப்பாளினி ஓபரா வின்ஃபிரே தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நான் மிகவும் விரும்பி நடத்திய நிகழ்ச்சி ஓபரா வின்ஃபிரேவாகும். இந்நிகழ்ச்சி நிறைவுபெறுவதை நினைத்து வருத்தமாக உள்ளது. இருப்பினும் உலகம் முழுவதும் இந்நிகழ்ச்சியின் மூலம் பெரும்பாலான மக்களின் மனதில் இடம்பெற்றுள்ளேன். இது என் வாழ்வில் கிடைத்த பெரும் பேறாகும் என்று கண்ணீர்மல்க கூறினார்.
ஓபரா வின்ஃபிரே நிகழ்ச்சியில் பெண்கள் முன்னேற்றம், கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைமுறைகள் உள்ளிட்ட மிகவும் முக்கியமான பிரச்னைகள் குறித்து ஒளிபரப்பப்பட்டுள்ளது. இவற்றை தொகுப்பாளினி ஓபரா வின்ஃபிரே மக்களைச் சென்றûடையும் வகையில் ரசனையாக தொகுத்தளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓபரா வின்ஃபிரே ஓய்வுபெறுவது குறித்து பத்திரிகையாளர் லிசா லிங் கூறுகையில், ஓபராவின் இடத்தை வேறு யாராலும் நிரப்பமுடியாது. அந்த அளவுக்கு ஓபரா வின்ஃபிரே சிறந்த தொகுப்பாளினி என்றார். காலைவேளையில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் எலன் டிஜெனிரஸ் கூறுகையில், காலைவேளையில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ராணி ஓபரா வின்ஃபிரே தான் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக