சனி, 14 நவம்பர், 2009

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட இலங்கை அணிக்குத் தடை கோரி மனு



மதுரை, நவ. 12: இலங்கை அரசு மனித உரிமைகளை மீறிவருவதால், அந்நாட்டுக் கிரிக்கெட் அணி இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளத் தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வியாழக்கிழமை மனு தாக்கல்
செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ. ஜோயல்பவுல் ஆண்டனி தாக்கல்
செய்துள்ள மனு:
இலங்கை கிரிக்கெட் அணி கலந்து கொள்ளும் 20:20 போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் கட் டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது.
16.11.2009 முதல் 27.12.2009 வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
கடந்த 50 ஆண்டுகளாக இலங்கைத் தமி ழர்களை துன்புறுத்தி மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. உலக நாடுகள் இலங்கையைக் கண்டித்து வந்தபோதிலும் அதை அந்த நாட்டு அரசு பொருட்படுத்தவில்லை. இலங்கை ராணுவ அத்துமீறல் களால் பல லட்சம் தமிழ் மக்கள் உயிரிழந்துள்ளனர். 1.5 லட்சம் தமிழர்கள் அகதிகளாகத் தமிழகம் வந்துள்ளனர்.
இந் நிலையில், இலங்கை அணி இந்திய மண்ணில் விளையாடத் தடை விதி க்க வேண்டும் என மனு வில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

கருத்துக்கள்

ஏற்கெனவே இலஙகைக்கு இந்திய அணியை அனுப்பக் கூடாது என மதுரை வழக்குரைஞர்கள் வழக்கு தொடுத்தீர்கள்! கால நீட்டிப்பு கொடுக்கப்பட்டு வழக்கு இருக்கும் பொழுதே அனுப்பப்பட்டு ஆடித் திரும்பியுள்ளனர். இந்த வழக்கை முன்னரே போடக் கூடாதா? இந்தியத்தின் வஞ்சகம் அறிந்தஒன்றுதானே! நீதித்துறையும் அதற்குக் கட்டுப்பட்டதுதானே! போகட்டும்! போட்டி நடைபெறும் மாநில உயர்நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும வழக்குகள் தொடுத்துத் தீவிரப்படுத்துங்கள்.

வேண்டுதலுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2009 4:49:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக