மும்பை, நவ. 9: மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட சமாஜவாதி கட்சி எம்.எல்.ஏ. ஆஸ்மி கடுமையாக தாக்கப்பட்டார்.
ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சியினர் இந்தத் தாக்குதலில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
இந்தத் தாக்குதலை தடுக்க முயன்ற பெண் எம்.எல்.ஏ. மீனாட்சி பாட்டீல் உள்பட பல்வேறு கட்சியினரையும் எம்என்எஸ் உறுப்பினர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கினர்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இத் தாக்குதலில் ஈடுபட்ட எம்என்எஸ் உறுப்பினர்கள் சிசிர் ஷிண்டே, ராம் கடம், ரமேஷ் வாஞ்சலே, வசந்த் கீதே ஆகிய 4 பேரும் 4 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மராத்தியில் மட்டுமே பதவிப் பிரமாணம் எடுக்க வேண்டும் என்று கூறி மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடந்த இந்த அடிதடி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளன.
மகாராஷ்டிரத்தில் அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மராத்தி மொழியில் தான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வேறு மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ராஜ் தாக்கரே எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவை திங்கள்கிழமை கூடியது. முதல் நாளில் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்றனர்.
உறுப்பினர்கள் அனைவரும் மராத்தியில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். ஆனால் சமாஜவாதி கட்சி உறுப்பினர் அபு அசிம் ஆஸ்மி மட்டும் ஹிந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
இதற்கு மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சியினர் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தனர். நவநிர்மாண் கட்சி எம்.எல்.ஏ. ரமேஷ் வாஞ்சலே பதவிப் பிரமாண மேடையை நோக்கி ஆவேசமாக பாய்ந்து சென்று ஆஸ்மி பேசிய மைக்கை பறித்து கீழே வீசி எறிந்தார். அவரது கட்சியைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களும் ஆஸ்மியை நோக்கி ஆவேசமாக பாய்ந்து வந்தனர். ஆனால், பிற கட்சி உறுப்பினர்கள் அதைத் தடுக்க முயன்றனர். அப்போது கைகலப்பு ஏற்பட்டது. ஹிந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்த ஆஸ்மியை சுற்றிவளைத்து நவநிர்மாண் உறுப்பினர்கள் தாக்கினர்.
இதனால் அவையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அந்தவேளையில் மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சி உறுப்பினர் ராம் கடம், சமாஜவாதி உறுப்பினர் ஆஸ்மியின் மார்பிலும் தோள்பகுதியிலும் கடுமையாகத் தாக்கினார். இதனால் அமளி உச்சகட்டத்தை அடைந்தது. இதையடுத்து அவை நடவடிக்கைகள் 30 நிமிஷங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் அவை கூடியதும், தாக்குதலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் பாஜக - சிவசேனை கூட்டணி உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
இந்த தீர்மானத்தின்படி தாக்குதலில் ஈடுபட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் இனி 4 ஆண்டுகள் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்க முடியாது.
முதல்வர் கண்டனம்: இந்த தாக்குதலை மாநில முதல்வர் அசோக் சவாண் கடுமையாகக் கண்டித்துள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இதுபோன்று மோசமான சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை. வன்முறைக்கும் ரெüடியிஸத்துக்கும் இங்கு இடமில்லை என்று அவர் கூறினார்.
ஆட்சி அதிகாரம் கிடைக்காமல் போனதால் அடிதடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது தவறுதான். ஆனால் இதற்கு மூல காரணமான சமாசுவாடி சமஉ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றும் பேசாமல் இந்தியில் பேசியிருந்தால்கூட பரவாயில்லை. ஆனால் இந்தி தேசிய மொழி எனவே அம்மொழியில் உறுதிமொழி எடுப்பதாகத் தவறான தகவலை ஆணவத்துடன் தெரிவித்துள்ளார். இந்திய அரசிய லமைப்புச்சட்டததின்படி மராத்தி, வங்காளம்,தமிழ் முதலான மாநில மொழிகள் எல்லாம் தேசிய மொழிகள்தாம். அவ்வாறிருக்க மராட்டிய சட்ட மன்றததில் மராத்தி மொழியை அவமதிக்கும் வகையில் இந்திதான் தேசிய மொழி எனத் தன் கட்சியின் இந்தி வெறியை வெளிப்படுத்தி சட்டமன்றத்தில் வன்முறை நடக்க வேண்டம் எனத் திட்டமிட்டுக் காரணமாக இருந்த ஆசுமி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ம.ந.சே. கட்சயினர் வன்முறையைக் கைவிட்டு தாய்மொழி உணர்வை வளர்க்க வேண்டுமேயன்றி இவ்வாறு நடந்து கொள்வது தவறு. எனவே, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை சரிதான். இருப்பினும் இதன் மூலம் இந்தி மட்டுமே தேசிய மொழி எனக் கிணற்றுத் தவளையாகக் கத்தும் கும்பல்களுக்கு அறிவு வந்தால் மகிழ்ச்சி.
11/10/2009 10:20:00 AM
Marathis also, like tamils, against Imposition of Hindi language and culture. Hindi has not conferred with the National Language status by the constitution of India. Because of Hindi invasion, Marathi language and culture is in a stage of slow extinct. That should not happen to other Languages also. Only 30% people wants to dominate rest 70% people, that is too bad. Social eveis like, Dowry., Ragging and Eve Teasing are the worst legend of Hindi Speaking People. They are not ready to learn Non Hindi Languages. We are not secondary citizen or slaves to this pyjama,kurtha idiots.
11/10/2009 10:18:00 AM
Dear Editor Sir Just by opposing the Imposition of Hindi, Tamil Nadu has got a bad name. Now for the atrocious act of a legilator slapping a fellow legislator for being sworn in Hindi I am waiting to hear from the Tamil speaking Hindi fanatics. Thanks
11/10/2009 4:02:00 AM