செவ்வாய், 10 நவம்பர், 2009

இலங்கை அணி மும்பையில் பயிற்சி



மும்பை, நவ.9: டெஸ்ட், ஒரு நாள், டுவென் டி 20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந் தி யா வுக்கு இலங்கை கிரிக்கெட் அ ணி இந்தியா வந்துள்ள இலங்கை அணி வீரர்கள் மும்பை எம்சிஏ மைதானத்தில் இன்று பயிற்சியில் ஈடுபட்டனர்.3 மணி நேரத்துக்கும் மேலாக உள்ளூர் பந்துவீச்சாளர்களின் துணையுடன் அவர்கள் பயிற்சி மேற்கொண்டனர். முத்தையா முரளிதன் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களும் சிறிதுநேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.நவம்பர் 11-ல் ரோகித் சர்மா தலைமையிலான பிரசிடெண்ட் லெவன் அணியுடன் இலங்கை அணியினர் முதலில் மோதுகின்றனர். மூன்று நாட்கள் அந்த ஆட்டம் நடைபெறும்.அதைத்தொடர்ந்து ஆமதாபாதில் நவம்பர் 16 அன்று இந்தியா-இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரிலும்(நவம்பர்24-28), மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்பையிலும்(டிசம்பர் 2-6) நடைபெறவுள்ளன.2005-06 ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2-0 என்ற கணக்கில் இலங்கை அணியைத் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

கொலைகாரக் கூட்டாளிகள் தங்களுக்கிடையே பரிமாற்றம செய்து கொண்டிருக்கிறார்கள். கொலையுண்ட குடும்பத்தினர் கைகளைத்தட்டி வரவேற்று மகிழ்ந்து கொண்டிருக்கின்றோம். இனப்படுகொலைகளில் மகிழ்ந்து இந்திய வீரர்களை அனுப்பியது இந்தியா! இப்பொழுது சிங்கள வீரர்களை வரவழைத்துள்ளது. சிவசேனாவிடம் கூறி அடித்து விரட்டினாலும் தவறு இல்லை. ஆனால், குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் நாம் அவ்வாறெல்லாம் செய்ய மாட்டோம். வருகின்றவன் காமுகனா கொலகாரனா கொள்ளைக்காரனா என்றெல்லாம் பார்க்காமல் காலில் விழுந்து வரவேற்கும் மரபார்நத பெருமைக்குரியவர்களாயிற்றே நாம்! நேரில் சென்றும் தொலைக்காட்சிகள் வழியாகவும் விழுந்து விழுந்து வரவேற்போம்! இன்னும் தீவிரமாகச் சிங்களர்கள் இனக்கொலைத் தொழிலில் ஈடுபட ஊக்குவிப்போம்! வரலாற்றில் அழியாக் கறையுடன் இருப்போம்!

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/10/2009 3:07:00 AM

**யார் தவறு? - பாகம் 18: துட்டகைமுனுவின் படையெடுப்பு! **பாகம் 11: குஞ்சரின் அதிரடிப் பதில்கள்! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 4: "வணங்காமண்" என்னும் பெயருடன் வன்னியில் போரினால் அவதியுறும்... **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
11/9/2009 10:00:00 PM

gook luck

By sakthivel
11/9/2009 7:45:00 PM

part-2 : தமிழர்களுக்கு எவ்வித அதிகாரங்களையும் வழங்கமாட்டோம். ஏனெனில் அவர்கள் தனிநாடு கேட்டுப் போராடுவதற்கு அதுவே வாய்ப்பாகிவிடும். அதுமட்டுமல்லாது இந்தியாவால் எங்கள் மீது திணிக்கப்பட்ட உடன்பாட்டையும் தூக்கியெறிவோம். அதன் மூலம் இந்திய ஆதிக்கத்தின் கடைசி அடையாளங்களையும் துடைத்தெறிவோம். எங்கள் நாட்டை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ளும் நோக்கத்துடன் நீங்கள் விடுதலைப்புலிகளை உருவாக்கினீர்கள். நீங்கள் உருவாக்கியதை நாங்கள் அழித்துவிட்டோம்.’

By sri lanka
11/9/2009 7:28:00 PM

இலங்கை அதிபர் ராஜபட்சவின் தம்பியும், பாதுகாப்பு ஆலோசகருமான கோத்தபய ராஜபட்ச கட்டுப்பாட்டில் உள்ள இணையதளத்தில் அவரின் நண்பர் ஜெயசூரியா என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் இந்தியாவைப் பற்றி மிகவும் கடுமையான விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. >>> “ஈழத்தமிழர்களுக்கு சமவுரிமை வழங்கவேண்டுமென்று எங்களுக்கு ஆணையிட இந்தியாவுக்கு உரிமையில்லை. இந்தியாவிலுள்ள அனைத்து தலைவர்களும், அரசதிகாரிகளும் இலங்கைக்கு ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் தமிழர்கள் உள்பட அனைத்து சமூகத்தினருக்கும் அதிகாரம் அளிப்பதன் மூலமே இனப்பிரச்னைக்கான அடிப்படைக் காரணங்களை சரிசெய்திட முடியும் என்று கூறியிருக்கிறார். அவரிடம் நாங்கள் கேட்பது என்னவென்றால் இந்த அறிவுரையைக் கூற நீங்கள் யார்? உங்களுக்கு என்ன தகுதி உள்ளது? இறையாண்மை மிக்க நாடான இலங்கைக்கு எப்படி ஆட்சி செய்ய வேண்டுமென்பது தெரியும். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். தமிழர்களுக்கு எவ்வித அதிகாரங்களையும் வழங்கமாட்டோம். ஏனெனில் அவர்கள் தனிநாடு கேட்டுப் போராடுவதற்கு அதுவே வாய்ப்பாகிவிடும். அதுமட்டுமல்ல

By sri lanka
11/9/2009 7:26:00 PM

எங்கே எல்லாம் ஸ்ரீலங்கா அணி ஆடுகிறதோ அந்த நகரில் உள்ள எல்லா தமிழ் மக்கள்ளும் போராட்டம் நடத்த வேண்டும்

By kannan
11/9/2009 6:16:00 PM

கே எல்லாம் ஸ்ரீலங்கா அணி ஆடுகிறதோ அந்த நகரில் உள்ள எல்லா தமிழ் மக்கள்ளும் போராட்டம் நடத்த வேண்டும்

By kanann
11/9/2009 6:16:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக