வெள்ளி, 13 நவம்பர், 2009

செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணையதள மாநாடுசென்னை, நவ. 12: கோவையில் வரும் ஜூன் மாதம் நடைபெறும் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக "தமிழ் இணைய (தள) மாநாட்டை'யும் நடத்த முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்துடன் (உத்தமம்) இணைந்து தமிழ் இணைய (தள) மாநாட்டை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ""இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழாக ஒளிரும் தமிழ் மொழியை இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கும் தேவைகளுக்கும் ஈடு கொடுக்கும் வகையில் வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியம் உள்ளது. இதையடுத்து கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன், தமிழ் இணைய (தள) மாநாடும் இணைந்து நடைபெற உள்ளது. இது தொடர்பாக நடைபெறும் கருத்தரங்குகள், ஆய்வரங்குகள் ஆகியவற்றில் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழ்த்தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுநர்களும் கணினித் தமிழ் அறிஞர்களும் பங்கு பெறுவார்கள். உலகளாவிய அளவில் தமிழுக்குத் தகவல் தொழில்நுட்பம் சேர்த்துள்ள வளங்களை வெளிப்படுத்தும் வகையிலும், இனி எதிர்வரும் காலங்களில் அது செல்ல வேண்டிய பாதை, எட்ட வேண்டிய இலக்கு, இவை குறித்த சிந்தனைகள் ஆகியவற்றைத் தொகுத்து ஆற்ற வேண்டிய பணிகளை முடிவு செய்யும் வகையில் இந்த மாநாடு அமையும்'' என்று தமிழக அரசு தெரிவிக்கிறது.
கருத்துக்கள்

இவ்வாறே அறிவியல் தமிழ் மாநாட்டையும் தமிழ்க்கலை மாநாட்டையும் நடத்தலாம். அதே நேரம் வாண வேடிக்கைகள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் பொழுதுபோக்குக்கலைநிகழ்ச்சிகளை அடியோடு தவிர்த்து இம்மாநாடுகள் அறிவார்ந்த நிலையில மட்டுமே நிகழும என்னும் சரியான நிலைப்பாட்டை எடுக்கலாம். ஈழப் படுகொலைகளை மறைக்கவும் மறக்கடிக்கவும் தேர்தலுக்கான முன்னோட்ட மாநாடு அல்ல என்பதை உணர்த்த இவ்வாறு பொதுநிலை மாநடாக இலலாமல் அறிவுநிலைப் பன்னாட்டக் கருத்தரங்கங்களாக மட்டும் நடத்துவதே சிறப்பாகும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/13/2009 3:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக