செவ்வாய், 10 நவம்பர், 2009

திருச்செந்தூர் கோயிலில் ராஜபட்ச தங்கை, மைத்துனர் தரிசனம்திருச்செந்தூர், நவ. 7: இலங்கை அதிபர் ராஜபட்சவின் தங்கை நிருபமா மற்றும் அவரது கணவர் திருக்குமர நடேசன் உள்ளிட்ட உறவினர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்களுக்கு கறுப்புக் கொடி காட்டப்போவதாக அறிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ராஜபட்சவின் தங்கை கணவர் திருக்குமர நடேசன் கடந்த 22 ஆண்டுகளாக திருச்செந்தூருக்கு தரிசனம் செய்ய வந்து செல்கிறார். இந்நிலையில், அவர் தனது மனைவி நிருபமா மற்றும் உறவினர்களுடன் சனிக்கிழமை இரவு திருச்செந்தூர் வந்தார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று சண்முகர் அர்ச்சனை செய்தார். பின்னர், அனைவரும் தனியார் விடுதிக்கு இரவு 8.30 மணிக்கு வந்தனர். இந்நிலையில், அவருக்கு நாம் தமிழர் இயக்கம் சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என அறிவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, டிஎஸ்பி நடராஜமூர்த்தி தலைமையில் கோயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால், யாரும் போராட்டம் செய்ய வரவில்லை. ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூரில் திருக்குமர நடேசன், நிருபமா ஆகியோர் சிறப்பு யாகம் நடத்த உள்ளனர்.
கருத்துக்கள்

இராம் என்று பெயர் வைத்திருந்தாலே இப்படித்தான் இருப்பார்களோ! அவரது குடும்பத்தையே வெறித்தனமாகக் கொலைசெய்த கும்பல் வீட்டிற்கு வந்தால் விருந்தினர் என்று காலில் விழுந்து வரவேற்பாரோ! சரி சரி மானமுள்ளவன் வீட்டிற்கு வரப் பகைவனும் அஞ்சுவானே! சூடு சொரணை அற்றவர்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் யார் வந்தால் என்ன? ஆரத்தி எடுத்துக் கொலைக்கருவிகளை மேலும் வழங்கினால் போகிறது!!!

அறவழியிலான எதிர்ப்பை வரவேற்கும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/10/2009 2:56:00 AM

They are guests from a different country. They should be welcome and given honourable treatment. Showing black flag to them is an act of stupidity.

By Raam
11/9/2009 10:52:00 PM

**யார் தவறு? - பாகம் 18: துட்டகைமுனுவின் படையெடுப்பு! **பாகம் 11: குஞ்சரின் அதிரடிப் பதில்கள்! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 4: "வணங்காமண்" என்னும் பெயருடன் வன்னியில் போரினால் அவதியுறும்... **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
11/9/2009 10:00:00 PM

Annan seitha paavam karaippathu romba kadinam.Kadavul mattum enna seivaar.

By uthaman
11/9/2009 7:58:00 AM

DON'T AFRAID, here tamilian's PREGNENT PIGS, IF YOU THROUGH rs 500 everybody collect and salute you

By raj
11/8/2009 5:32:00 PM

முன்பு வரிந்து கட்டிக் கொண்டு வந்தவர்கள், இப்பொழுது அமைதி காண்கின்றனரே, ஆச்சரியம்தான்? ஒருவேளை தமிழகத்தில் வந்து தமிழ் கடவுளைக் கும்பிட்டதால் மௌனம் காக்கிறார்கள் போலும்! "ராவணனின் சகோதரி, மைத்துனர்" என்றெல்லாம் சொல்லவில்லை! புகைப்படங்களும் வெளியாகவில்லை!"திராவிட நாட்டில், ஆரியர்கள்" யாகம் செய்கின்றனர் என்றும் சொல்லவில்லை!

By Vedaprakash
11/8/2009 2:03:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக