திங்கள், 9 நவம்பர், 2009

லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றமாகும்திருவண்ணாமலை, நவ. 7: லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றமாகும் என மத்திய கூட்டுறவு வங்கியின் தனி அலுவலர் மா.குழந்தைவேலு கூறினார். கிரிப்கோ உர நிறுவனம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பில் கூட்டுறவாளர்கள் கருத்தரங்கம், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடந்தது. நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் மா.குழந்தைவேலு பேசியது: கிரிப்கோ நிறுவனம் ஏழை விவசாயிகளின் நலன் கருதி செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 18.38 லட்சம் டன் யூரியா உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு அளித்து வருகிறது. லஞ்சம் வாங்குவதும், தருவதும் முக்கிய குற்றமாகும். அனைவரும் இதை தவிர்க்க வேண்டும் என்றார். தொடர்ந்து, டிஎஸ்பி வைத்தியலிங்கம் பேசியது: லஞ்ச ஒழிப்புவிழிப்புணர்வு முகாம் கூட்டுறவு துறை சார்பில் நடத்தப்படுவது சிறப்பாக உள்ளது. ஊழல் நடைபெறும் நாடுகளில் இந்தியா 73-வது இடத்தில் உள்ளது. லஞ்சம், வாங்குவதையும், தருவதையும் ஒழிக்க வேண்டும் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்யும். அதிகளவில் நகைக்கடன்களை தர வேண்டும் என்றார். கிரிப்கோ கள அலுவலர் கே.ஜெகநாதன், மாநில முதுநிலை மேலாளர் எம்.குமரேசன், மத்திய வங்கி பொதுமேலாளர் பி.சுந்தரேசன், உதவி பொதுமேலாளர் டி.காந்தி, ஒன்றிய தனி அலுவலர்பி.ஆறுமுகம், டான்பெட் மேலாளர் கோ.மூர்த்தி, கூட்டுறவு வளர்ச்சி அலுவலர் ப.துரைராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துக்கள்

'கையூட்டுக் கொடுத்தால்தான் காரியம் ஆகும்' என்னும் சூழலை வைத்திருப்பது யார் குற்றம்? புதிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியுள்ள இந்த அதிகாரி எவ்வளவு கையூட்டு வாங்குபவர் எனக் கண்டறியுங்கள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2009 2:42:00 AM

anything in thousands is crime, above 1 lakh is not a crime.

By kriston
11/8/2009 8:48:00 PM

Ariya kandupidipu!!!

By RSL
11/8/2009 4:38:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக