சனி, 14 நவம்பர், 2009

கேரள முதல்வரின் துணிவு எனக்கு இல்லை: கருணாநிதி



சென்னை, நவ. 13: ""முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முடியாதபடி செய்த கேரள முதல்வரைப் போன்று துணிவு எனக்கு இல்லை'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
""முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு அறிவித்து இருக்கிறது.
நாடு என்னவாகும்? முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்னவாயிற்று? உச்ச நீதிமன்றத் தீர்ப்புதான் எல்லாவற்றுக்கும் உச்ச கட்டம் என்று சொல்லப்படுகிறதே, அந்தத் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதா?
கேரள அரசு, அந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்து, அதை முடக்கும் வகையில் கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி அந்த மாநில சட்டப் பேரவையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியது.
இவ்வாறு புதிய சட்டத் திருத்தம் இயற்றலாமா? அது ஏற்புடையதுதானா? இதுபோன்ற பிரச்னைகளில் ஒவ்வொரு மாநிலமும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்கு எதிராக இருக்குமானால் அதை எதிர்த்து தங்கள் மாநிலச் சட்டப் பேரவைகளில் சட்டம் இயற்றிக் கொள்ள முனைந்தால் நாடு என்னவாகும்?
தான் வழங்கிய தீர்ப்புக்கு மாறாக ஒரு சட்டத்தை நிறைவேற்றிய மாநில அரசு மீது உச்ச நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன?
அவ்வாறு கேரள அரசு சட்டம் இயற்றியதைப் பற்றி இப்போது உச்ச நீதிமன்றம் எதுவும் குறிப்பிடவில்லை. வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி, தீர்ப்பு சொன்ன காரணத்தால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக கேரள அரசு போன்று வேறு சில மாநிலங்களும் -நம்மை என்ன செய்து விடப் போகிறார்கள் -என்ற எண்ணத்தோடு செயல்பட வழி வகுக்கும் அல்லவா?
வியப்பும் திகைப்பும்... ஜனநாயக நாட்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும், அதற்கு மாறாக ஒரு மாநில அரசே சட்டப் பேரவையைக் கூட்டி சட்டத்தை இயற்றுகிறது.
அதற்குப் பிறகும், உச்ச நீதிமன்றம் அதற்காக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல், அந்த மாநில அரசு நிறைவேற்றிய சட்டத்தைப் பற்றி எதுவும் கூறாமல் அந்த மாநிலத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு தீர்ப்பளிக்கிறது என்றால், ஏன் இப்படி? என்ற திகைப்பும் "எதற்காக இப்படி?' என்ற வியப்பும் ஏற்படுமா இல்லையா?
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக முதன் முதலாக உச்ச நீதிமன்றம் சென்றது டிசம்பர் 1998. 11 ஆண்டுகள் ஆகி, தமிழகத்துக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், அதற்கு மாறாக மீண்டும் ஒரு விசாரணை -அதனை ஐந்து நீதிபதிகள் விசாரிப்பார்கள் -என்ற முடிவு, இன்னும் எத்தனை ஆண்டுகளோ என்று வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.
தாமதிக்கப்பட்ட நீதி -மறுக்கப்பட்ட நீதி என்ற பழமொழி பலித்து விடாமல் இருக்க, யாரிடம் நாம் முறையிடுவது என்றே தெரியவில்லை'' என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

பின்வரும் செய்தியில் குடும்பத்தாருக்குக் கிடைக்காத பொழுது எனத் திருத்தி வாசித்துக் கொள்ளுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2009 4:32:00 AM

ஆமாம்! அதிகாரப் பதவிகள் குடும்பத்தாருக்குக் கிடைக்கும் பொழுது எதிர்க்கும் துணிவு தமிழ் நாட்டு உரிமைகளுக்காகப் போரிடும் பொழுது இருப்பதில்லை. உண்மைதான்! என் செய்வது? அப்பொழுது துணிவு இல்லாவிட்டால் அதிகாரம் கிடைக்காது. இப்பொழுது துணிவு இருந்தால் அதிகாரம் நிலைக்காது. தமிழகத்தின் முசிபூர் இரகுமான் என்பதெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனதுவே! குடுமப நலம் குறுக்கே வருமபொழுது இன நலத்தை நினைக்க முடியாதே! வேதனையை உணரும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2009 4:30:00 AM

Mrs. Sonia Gandi is above suprime court of India. Mr. Sonia Gandi gave pover to Kerala CM via Mr. Anthony , Defence minister of India. TN Government cannot over rule Mrs. Sonia Gandi who is a powerful congress leader in India. Is Mr. Karunanithi knows that Sonia Gandi is above suprime court of India? Sonia Gandi appoint the suprime court judges too.

By Ramayan
11/14/2009 3:30:00 AM

Once eminent Lawer Mr.Nani Palkiwala said that in our Country justice is expessive where as judges are very cheap.

By R.Gopu
11/14/2009 1:35:00 AM

supreme court reservation 50% ceiling meerinathu yaar? Intha Karunanithi thaane? Thanakku oru niyayam marravarukku oru niyayama?

By satish
11/14/2009 1:21:00 AM

**யார் தவறு? - பாகம் 19: சூழ்ச்சியும் தமிழர் வீழ்ச்சியும்! **பாகம் 11: குஞ்சரின் அதிரடிப் பதில்கள்! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 4: "வணங்காமண்" என்னும் பெயருடன் வன்னியில் போரினால் அவதியுறும்... **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை!m U N A R V U K A L . C O M

By ELLALAN
11/14/2009 1:09:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக