புது தில்லி, அக்.14: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா 101 பதக்கங்களுடன் 2-வது இடத்தைப் பிடித்தது. தில்லியில் காமன்வெல்த் போட்டிகள் கடந்த 3-ம் தேதி கோலாகலமாக துவங்கின. 4-ம் தேதி முதல் போட்டிகள் நடைபெற்றன. 11 நாள்கள் நடைபெற்ற போட்டி வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது. 101 பதக்கம்: வியாழக்கிழமையன்று நடந்த போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்களைப் பெற்ற இந்தியா 2-வது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்தது. காமன்வெல்த் போட்டியில் முதன்முறையாக பதக்கப் பட்டியலில் 2-வது இடத்தை இந்தியா பிடித்தது. 2002-ம் ஆண்டு மான்செஸ்டரில் நடைபெற்ற காமன்வெல்த்தில் இந்தியா அதிகபட்சமாக 69 பதக்கங்களைக் கைப்பற்றியதே இதுவரை சாதனையாக இருந்தது. 38 தங்கம்: தில்லி போட்டியில் இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்களை வென்றது. ஆஸ்திரேலியா 74 தங்கம், 54 வெள்ளி, 48 வெண்கலங்களுடன் முதலிடத்தையும், இங்கிலாந்து 37 தங்கம், 59 வெள்ளி, 45 வெண்கலங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தது. கடைசி நாள் ஆட்டத்தில் பாட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நெவாலும், மகளிர் இரட்டையர் பிரிவில் ஜுவாலா குட்டா-அஸ்வினியும் தங்கம் வென்றனர். ஆடவர் ஹாக்கிப் பிரிவில் இந்திய அணி வெள்ளியை வென்றது. ஆடவர் ஒற்றையர் டேபிள் டென்னிஸில் தமிழக வீரர் சரத் கமல் வெண்கலம் வென்றார். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வெண்கலம் வென்றது. நிறைவு விழா: போட்டிகள் நிறைவடைந்ததும் இரவு 7 மணியளவில் நிறைவு விழா நிகழ்ச்சிகள் துவங்கின. நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி குருசரண் கெüர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இலங்கை அதிபர் ராஜபட்ச, வெசக்ஸ் இளவரசர் எட்வர்ட், பூடான் இளவரசர் ஜிக்மே வான்சுக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவு விழா நிகழ்ச்சி இசை விருந்தாக அமைந்தது. முதலில் "சக் தே இந்தியா' விளையாட்டு தீம் பாடலை சுக்விந்தர் பாடினார். இதைத் தொடர்ந்து கைலாஷ் "கர் அல்லாஹ் கே பந்தே' பாடலையும், சுபா முத்கல் "அப்கே சவான்' பாடலையும் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். பின்னர் 2,010 பள்ளிக் குழந்தைகளின் வந்தே மாதரம் நிகழ்ச்சி 50 நிமிடங்களுக்கு நடைபெற்றது. வந்தே மாதரம் நிகழ்ச்சி நிறைவுற்ற பின்னர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 400 கலைஞர்கள், ஸ்காட்லாந்தின் பழமையான பேக்பைப்பர் இசையை வாசித்து பார்வையாளர்களை மகிழ்வித்தனர். பின்னர் தமிழகம், கேரளம், பஞ்சாப், மணிப்பூர், மகாராஷ்டிரம், குஜராத்தைச் சேர்ந்த 800 கலைஞர்களின் தற்காப்புக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பிரபல பாடகர்கள் சுனிதி செüகான், சங்கர் மகாதேவன் பாடி ரசிகர்களை மயக்கினர். நிறைவு விழாவுக்காக மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுமார் 60 ஆயிரம் பார்வையாளர்கள் மைதானத்தில் குழுமியிருந்தனர். 2014-ல் கிளாஸ்கோவில் காமன்வெல்த்: அடுத்த காமன்வெல்த் போட்டி 2014-ம் ஆண்டு பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெறுகிறது.
கருத்துக்கள்
செய்திக்கான படம் ந்னறாக உள்ளது. 101 என்பதுபோல் மேலும் விருதாளர்களின் படங்களையும் சேர்த்து வடிவமைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
வேண்டுகோளுடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
வேண்டுகோளுடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/15/2010 3:48:00 AM
10/15/2010 3:48:00 AM
மத சார்பற்ற நாடு! அப்புறம் ஏன் அல்லா பாட்டு? துலுக்கன் வோட்டு போய் விடுமா?
By Solomon
10/15/2010 2:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/15/2010 2:53:00 AM