சென்னை, அக்.12- தில்லி காமன்வெல்த் போட்டியின் நிறைவு விழாவை புறக்கணிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தில்லி காமென்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக ராஜபட்சவை மத்திய அரசு அழைத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி லட்சக் கணக்கில் கொன்றுகுவித்த ராஜபட்சவை தில்லிக்கு அழைத்துச் சிறப்பிக்க விரும்பும் மத்திய அரசின் அணுகுமுறையானது சுமார் 10 கோடிக்கும் மேலான ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் கேவலப்படுத்துவதாக அமைந்துள்ளது. அத்துடன் பிறர் துன்பத்தில் இன்பம் காணும் கொடூர வன்மம் நிறைந்த வக்கிரபுத்தியை இதன்மூலம் மத்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது.ராஜபட்சவும் சிங்கள அரசும் போர் மரபுகளை மீறி மனிதநேயமற்ற முறையில் போர்க் குற்றம் இழைத்துள்ளனர் என்று ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள சர்வதேச நாடுகள் கண்டித்து வருகிற நிலையில், மத்திய அரசு அதற்கு நேர்மாறாக ஒரு போர்க் குற்றவாளிக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது அத்தகைய போர்க் குற்றத்தில் மத்திய அரசின் பங்களிப்பு எத்தகையது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. மத்திய அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ராஜபட்சவை அழைக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் தமிழினத்தின் சார்பில் வற்புறுத்துகிறோம்.நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் நிறைவு விழாவில் பங்கேற்பதற்கு எனக்கும் அழைப்பு வந்துள்ளது. ஆனால் மத்திய அரசின் தமிழின விரோதப் போக்கைக் கண்டிக்கும் வகையில் அவ்விழாவை நான் புறக்கணிக்கிறேன். தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் தமிழின ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அவ்விழாவைப் புறக்கணிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
10/13/2010 3:49:00 AM
10/13/2010 3:49:00 AM


By VAIKOPRIYAN
10/13/2010 1:15:00 AM
10/13/2010 1:15:00 AM


By Raja
10/12/2010 11:06:00 PM
10/12/2010 11:06:00 PM


By by a MONKEY
10/12/2010 10:10:00 PM
10/12/2010 10:10:00 PM


By Tamizan
10/12/2010 8:12:00 PM
10/12/2010 8:12:00 PM


By KANNANUKKU ANNAN
10/12/2010 8:10:00 PM
10/12/2010 8:10:00 PM


By KANNANUKKU ANNAN
10/12/2010 8:10:00 PM
10/12/2010 8:10:00 PM


By KANNANUKKU ANNAN
10/12/2010 8:10:00 PM
10/12/2010 8:10:00 PM


By KANNANUKKU ANNAN
10/12/2010 8:10:00 PM
10/12/2010 8:10:00 PM


By KANNANUKKU ANNAN
10/12/2010 8:10:00 PM
10/12/2010 8:10:00 PM


By KANNANUKKU ANNAN
10/12/2010 8:10:00 PM
10/12/2010 8:10:00 PM


By KANNANUKKU ANNAN
10/12/2010 8:10:00 PM
10/12/2010 8:10:00 PM


By KANNANUKKU ANNAN
10/12/2010 8:10:00 PM
10/12/2010 8:10:00 PM


By KANNANUKKU ANNAN
10/12/2010 8:10:00 PM
10/12/2010 8:10:00 PM


By KANNANUKKU ANNAN
10/12/2010 8:10:00 PM
10/12/2010 8:10:00 PM


By KANNANUKKU ANNAN
10/12/2010 8:10:00 PM
10/12/2010 8:10:00 PM


By KANNANUKKU ANNAN
10/12/2010 8:10:00 PM
10/12/2010 8:10:00 PM


By Kannanukku Annan
10/12/2010 7:34:00 PM
10/12/2010 7:34:00 PM


By Kannanukku Annan
10/12/2010 7:34:00 PM
10/12/2010 7:34:00 PM


By Kannanukku Annan
10/12/2010 7:34:00 PM
10/12/2010 7:34:00 PM


By Kannanukku Annan
10/12/2010 7:34:00 PM
10/12/2010 7:34:00 PM


By Kannanukku Annan
10/12/2010 7:34:00 PM
10/12/2010 7:34:00 PM


By Kannanukku Annan
10/12/2010 7:34:00 PM
10/12/2010 7:34:00 PM


By Kannanukku Annan
10/12/2010 7:34:00 PM
10/12/2010 7:34:00 PM


By Kannanukku Annan
10/12/2010 7:34:00 PM
10/12/2010 7:34:00 PM


By Kannanukku Annan
10/12/2010 7:34:00 PM
10/12/2010 7:34:00 PM


By Kannanukku Annan
10/12/2010 7:34:00 PM
10/12/2010 7:34:00 PM


By Kannanukku Annan
10/12/2010 7:34:00 PM
10/12/2010 7:34:00 PM


By Kannanukku Annan
10/12/2010 7:34:00 PM
10/12/2010 7:34:00 PM


By Kannanukku Annan
10/12/2010 7:33:00 PM
10/12/2010 7:33:00 PM


By பாமரன்
10/12/2010 7:12:00 PM
10/12/2010 7:12:00 PM


By cbi kku yeman
10/12/2010 7:09:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/12/2010 7:09:00 PM