சனி, 16 அக்டோபர், 2010

கவிதாயினி சௌந்தரா கைலாசம் காலமானார்

சென்னை, அக்.16: ப.சிதம்பரத்தின் மாமியார் சௌந்தரா கைலாசம் நேற்றிரவு காலமானார். முன்னாள் நீதிபதி கைலாசத்தின் மனைவியான சௌந்தரா கைலாசம், தன் கணவரின் நினைவைப் போற்றும் வகையில், அவர் எழுதும் கடிதங்களில் ”நாதன் தாள் வாழ்க” என்றே முத்திரையிடுவார். இவர், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் தாயார். மிகச் சிறந்த கவிதைகளைப் படைத்த கவிதாயினி இவர். சிலேடைகளை கவிதைகளில் புகுத்துவதில் வல்லவராகத் திகழ்ந்தவர். சிலேடைச் செல்வராகத் திகழ்ந்த கி.வா.ஜகன்னாதன் மற்றும் அன்றைய தமிழறிஞர்களுடன் நட்பு கொண்டு, தமிழ் மேடைகளில் கவிதை முழக்கமிட்டவர்.
கருத்துக்கள்

பலரின் நல்லெண்ணத்திற்குரிய கவிஞர் சௌந்தரா கைலாசம் அவர்கள் மறைவிற்குத் தினமணி இணைய நண்பர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு அறிஞருடன் அவரைச் சந்தித்த பொழுது குடும்பத்தினர் ஒருவர் பற்றி அவர் கவலையுடன் தெரிவித்த கருத்துகள் அவரது நடுநிலை உணர்வை வெளிப்படுத்தின. அந் நிகழ்வு நினைவிற்கு வருகின்றது. தனிப்பட்ட முறையிலும் ஆழ்நத இரங்கல்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/16/2010 2:34:00 PM
இந்த நல்ல குடும்பத்திலா புகுந்துடிச்சு நல்ல பாம்பு.............
By pannadai pandian
10/16/2010 1:36:00 PM
TAMIZH WORLD HAS LOST A GOOD SCHOLAR.WHEN ARE WE GOING TO SEE THE LIKES OF THEM AGAIN? oUR SYMATHIES TO THE FAMILY MEMBERS.
By S Raj
10/16/2010 10:09:00 AM
A GOOD SOUL. OUR SYMPATHIES AND CONDOLENCES TO THE BEREAVED MEMBERS OF THE FAMILY. Dr S Ramasami Dr P Damayanthi
By Dr S Ramasami, Dr PDamayanthi
10/16/2010 9:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக