சென்னை: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள ராஜபட்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை:பிரிட்டன் ஆதிக்கத்துக்கு உட்பட்டு இருந்த பல நாடுகள் காமன்வெல்த் நாடுகள் ஆயின. 71 நாடுகள் கலந்து கொள்ளும் விளையாட்டுப் போட்டிகள், இந்திய நாட்டின் தலைநகர் டெல்லியில், 70,000 கோடி செலவில் நடத்தப்படுகின்றன.விழாவைக் கோலாகலமாகத் தொடங்கி வைக்க, இங்கிலாந்து அரச குடும்பத்தின் பிரதிநிதியாக, இளவரசர் சார்லஸ் இந்திய அரசால் அழைக்கப்பட்டு, அவரும் பங்கு ஏற்றுத் தொடங்கி வைத்தார். நாளை மறுநாள் (14.10.2010) அன்று, இந்தப் போட்டிகளின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கு ஏற்று முடித்து வைக்க, இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது.இந்தச் செய்தியையும், ஏடுகளுக்கும், ஊடகங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக வைத்து இருந்தது. கொழும்பில் இருந்து வெளியாகின்ற இலங்கை அரசின் ஆதரவுப் பத்திரிகையான ‘சண்டே அப்சர்வர்’, இந்திய அரசின் அழைப்பை வெளியிட்டு இருக்கிறது.ஈழத்தமிழர்களை இனப்படுகொலைக்கு ஆளாக்கிய ராஜபட்ச அரசின் குற்றங்களை ஆய்வு செய்ய, ஐ.நா.மன்றத்தின் பொதுச்செயலாளர் மூவர் குழுவை அமைத்து உள்ளதாலும், அயர்லாந்தில் டப்ளினில், இந்த ஆண்டு ஜனவரியில் கூடிய, பன்னாட்டு நீதிமான்களின் தீர்ப்பாயம், சிங்கள அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்து உள்ளதாலும், ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்காக, வரிச்சலுகைகளை ரத்து செய்ததாலும், அனைத்து உலக நாடுகளில் சிங்கள அரசு செய்த இனக்கொலை பற்றிய, விழிப்பு உணர்வு வேகமாக ஏற்பட்டு வருவதாலும், ராஜபட்சவை பாதுகாப்பதற்காகவே, இந்த நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு உள்ளது.இராஜபட்சவுக்கு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை முடித்து வைக்கின்ற கௌரவத்தைக் கொடுத்து, ஈழத்தமிழர்களுக்கு சிங்கள அரசு, கொடுமை செய்யவில்லை என்ற எண்ணத்தை, உலக நாடுகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, இந்தச் செயலை இந்திய அரசு செய்கிறது.ஆஸ்திரேலியாவில் பத்து இந்தியர்கள் தாக்கப்பட்டதற்கு இந்திய அரசு கொதித்து எழுந்து, ஆஸ்திரேலிய அரசுக்குக் கண்டனம் தெரிவித்ததையும், அதற்கு ஆஸ்திரேலிய அரசும், தூதரகமும் மன்னிப்புத் தெரிவித்ததாகவும் தெரிவித்துக் கொள்கிறது.நியூசிலாந்து நாட்டின் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் தில்லி மாநில முதல்வரை அவமதித்து விட்டதாகக் கூறி, இந்திய அரசு கண்டனம் தெரிவித்ததற்கு, நியூசிலாந்து அரசு வருத்தம் தெரிவிக்க நேரிட்டது.மும்பையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கு, பாகிஸ்தானோடு போர் தொடுப்போம் என்று, அன்றைய வெளி விவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி மிரட்டல் விடுத்தார்.ஆனால், தாய்த்தமிழத்து மீனவர்கள், நமது கடலிலேயே இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் அன்றாடச் சம்பவங்கள் ஆகிவிட்டன.பிரதமர் மன்மோகன்சிங் அரசும், அதனை இயக்குகின்ற தலைமையும், அந்த அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளும், இந்த துரோகத்துக்குப் பொறுப்பாளிகள் ஆவார்கள்.இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/12/2010 4:40:00 PM
10/12/2010 4:40:00 PM


By jalini
10/12/2010 4:29:00 PM
10/12/2010 4:29:00 PM


By Vis
10/12/2010 4:20:00 PM
10/12/2010 4:20:00 PM


By SUNDER
10/12/2010 4:16:00 PM
10/12/2010 4:16:00 PM


By Appan
10/12/2010 3:56:00 PM
10/12/2010 3:56:00 PM


By SRINIVASAA IYENGAAR- SRIRANGAM
10/12/2010 3:45:00 PM
10/12/2010 3:45:00 PM


By SRINIVASAA IYENGAAR- SRIRANGAM
10/12/2010 3:45:00 PM
10/12/2010 3:45:00 PM


By SRINIVASAA IYENGAAR- SRIRANGAM
10/12/2010 3:45:00 PM
10/12/2010 3:45:00 PM


By SRINIVASAA IYENGAAR- SRIRANGAM
10/12/2010 3:30:00 PM
10/12/2010 3:30:00 PM


By Jack, Singapore
10/12/2010 3:30:00 PM
10/12/2010 3:30:00 PM


By GANDHI DHESAM
10/12/2010 3:26:00 PM
10/12/2010 3:26:00 PM


By jai indian
10/12/2010 3:26:00 PM
10/12/2010 3:26:00 PM


By cbi kku yeman
10/12/2010 3:25:00 PM
10/12/2010 3:25:00 PM


By cbi kku yeman
10/12/2010 3:25:00 PM
10/12/2010 3:25:00 PM


By cbi kku yeman
10/12/2010 3:25:00 PM
10/12/2010 3:25:00 PM


By cbi kku yeman
10/12/2010 3:25:00 PM
10/12/2010 3:25:00 PM


By seeri
10/12/2010 3:20:00 PM
10/12/2010 3:20:00 PM


By cbi kku yeman
10/12/2010 3:18:00 PM
10/12/2010 3:18:00 PM


By cbi kku yeman
10/12/2010 3:18:00 PM
10/12/2010 3:18:00 PM


By cbi kku yeman
10/12/2010 3:18:00 PM
10/12/2010 3:18:00 PM


By cbi kku yeman
10/12/2010 3:18:00 PM
10/12/2010 3:18:00 PM


By cbi kku yeman
10/12/2010 3:18:00 PM
10/12/2010 3:18:00 PM


By cbi kku yeman
10/12/2010 3:18:00 PM
10/12/2010 3:18:00 PM


By cbi kku yeman
10/12/2010 3:18:00 PM
10/12/2010 3:18:00 PM


By Ramesh
10/12/2010 3:12:00 PM
10/12/2010 3:12:00 PM


By MAHATMA GANDHI
10/12/2010 3:09:00 PM
10/12/2010 3:09:00 PM


By Ravu
10/12/2010 2:49:00 PM
10/12/2010 2:49:00 PM


By WILLIAMS R
10/12/2010 2:45:00 PM
10/12/2010 2:45:00 PM


By Thiru
10/12/2010 2:43:00 PM
10/12/2010 2:43:00 PM


By gnanam
10/12/2010 2:35:00 PM
10/12/2010 2:35:00 PM


By kannan
10/12/2010 2:32:00 PM
10/12/2010 2:32:00 PM


By KOOPU
10/12/2010 2:32:00 PM
10/12/2010 2:32:00 PM


By R.Krishnamurthy
10/12/2010 2:27:00 PM
10/12/2010 2:27:00 PM


By prabu, chennai
10/12/2010 2:16:00 PM
10/12/2010 2:16:00 PM


By jalini
10/12/2010 2:00:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/12/2010 2:00:00 PM