சென்னை, அக். 12: காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.வைகோ: இலங்கை அரசு செய்த இனக்கொலை குறித்து உலக நாடுகளில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இந் நிலையில் ராஜபட்சவை பாதுகாப்பதற்காக இந்திய அரசு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது.தமிழக மீனவர்கள், நமது கடலிலேயே இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் அன்றாடச் சம்பவங்கள் ஆகிவிட்டன. பிரதமர் மன்மோகன்சிங்கும், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளும்தான் இந்த துரோகத்துக்குப் பொறுப்பாளிகள்.திருமாவளவன்: மக்களவை உறுப்பினர் என்ற முறையில் காமன்வெல்த் நிறைவு விழாவில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்துள்ளது. இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கை கண்டிக்கும் வகையில் அவ் விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழின ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் விழாவைப் புறக்கணிக்க வேண்டும்.டாக்டர் கிருஷ்ணசாமி: காமன்வெல்த் விளையாட்டு நிறைவு விழாவில் சிறப்பு அழைப்பாளராக ராஜபக்சே இந்திய அரசால் அழைக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
கருத்துக்கள்

அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/13/2010 3:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/13/2010 3:37:00 AM