பொன்னேரி, அக். 11: கோவில் குளத்தில் சேரும் குப்பைகளை அகற்றி பொது சேவைக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார் பொன்னேரி இளைஞர் பாபு (34). திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பழைய பஸ் நிலையம் அருகில் ஓடும் ஆரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது ஸ்ரீ ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரர் ஆலயம். ÷9-ம் நூற்றாண்டில் ராஜராஜசோழனால் கட்டப்பட்டதாக கூறப்படும் இப் பழமை வாய்ந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். ÷இக்கோயில் முன்புறம் அமைந்திருக்கும் அக்னித் தீர்த்தக் குளம் இதுவரை வற்றாத குளமாகும். அத்துடன் இக்குளத்தில் உள்ள நீரை தலையில் தெளித்து கொண்டு சென்று அகத்தீஸ்வரரை வழிபட்டால் அனைத்து நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். ÷ஆனால் இக்கோயில் குளத்தில், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவு பொருள்களை இதில் வீசிச் சென்று குளத்து நீரை மாசடைய செய்து வருகின்றனர். ÷பிளாஸ்டிக் கழிவுக் குப்பைகள் குளத்தில் சேர்ந்துள்ளது குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியாகும்போது பேரூராட்சி ஊழியர்கள் அன்றைய தினம் குப்பைகளை அகற்றுவர். ÷அதற்கு பிறகு பழைய நிலையே தொடரும். ÷இந்நிலையில் பொன்னேரியில் உள்ள ஹரிஹரன் பஜார் வீதியில் வசிக்கும் பாபு என்ற இளைஞர், வாரத்தில் ஒரு நாள் இக்குளத்தில் சேரும் பிளாஸ்டிக் கழிவு குப்பைகளை தானே முன்னின்று அகற்றி சேவை செய்கிறார். ÷இதுகுறித்து பாபு கூறுகையில், ""பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகளால் குளம் அசுத்தமாக மாற்றப்படுகிறது. இதையடுத்து வாரத்தில் ஒரு நாள் இக்குளத்தில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி புண்ணியம் தேடி வருகிறேன்'' என்றார். ÷தன் வீட்டில் சேரும் குப்பைகளையே யாருக்கும் தெரியாமல் தெருமுனையில் கொட்டி அசிங்கப்படுத்தும் இந்த காலகட்டத்தில், பொது கோயில் குளத்தில் சேரும் குப்பையை தானாக முன்வந்து அகற்றும் பாபுவின் சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது.
கருத்துக்கள்

மலரும் நினைவுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/12/2010 3:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/12/2010 3:00:00 AM