சனி, 16 அக்டோபர், 2010

எதிர்க்கட்சிகள் விடுவிக்க வலியுறுத்துவதால் சரத் பொன்சேகாவின் குடியுரிமை பறிப்பு: ராஜபக்சே முடிவு
கொழும்பு, அக். 14-
 
இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, ஆயுதங்கள் வாங்கியதில் முறைகேடுகள் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது 30 மாத ஜெயில் தண்டனையை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.
 
சரத் பொன்சேகாவை விடுவிக்கும் வரை போராட்டம் நடத்தப்போவதாக புத்த மதக்குருக்களும் கூறியுள்ளனர். இதையடுத்து சரத் பொன்சேகாவுக்கு சிங்களர்களிடம் ஆதரவு கிடைத்து வருகிறது.
 
இது இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பொன் சேகாவை விடுதலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு உருவாகி வருகிறது.
 
இதையடுத்து சரத் பொன்சேகாவுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்த ராஜபக்சே ஆலோ சித்து வருகிறார். சரத் பொன்சேகாவின் குடியுரிமையை பறிக்க ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. குடியுரிமையைப் பறித்தால், அடுத்து வரும் 7 ஆண்டுகளுக்கு பொன்சேகாவால் எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாது.
 
அப்படி செய்வதால் அரசியலில் தனக்கு எதிரியாக திகழும் பொன்சேகாவை ஒழித்து விட முடியும் என்று நினைக்கிறார். மேலும் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரும் பிரச்சி னையை திசை திருப்பவும் ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.
 
ஜனாதிபதியாக விரைவில் பதவி பிரமாணம் எடுக்க ராஜபக்சே ஏற்பாடு செய்துள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவை பலகோடி ரூபாய் செலவழித்து கொண்டாட அவர் உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் எதிர்த்து கேள்வி கேட்பாரே இல்லாததால் ராஜபக்சே இப்படி ஆணவத்துடன் ஆட்டம் போடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
 
கருத்து 
Saturday, October 16,2010 02:24 PM,
Ilakkuvanar Thiruvalluvan said:
இப்படிப்பட்ட தவறுகளையும் குற்றங்களையும் பக்சே செய்வது நல்லது. வினை விதைத்த அவ்ன வினை அறுக்கப்போகிறான். அதனை இவை விரைவு படுத்தும். முன்பு வினை விதைத்த பொன்சேகோ இப்பொழுது வினை அறுக்கின்றான். தமிழினப் படுகொலையாளிகள் விரைவில் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு அழியட்டும். மனித நேயர்கள் பெருகட்டும். தமிழ் ஈழம் மலரட்டும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
Thursday, October 14,2010 04:30 PM, karuna said:
ராஜபக்ச sayvathu சரி tamil ஹிந்து payankaravathikai alithavar
Thursday, October 14,2010 11:31 AM, இரா. ஜா. செ said:
இந்த மாதிரி கேடுகெட்ட செயல்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே நடக்கும். குடியுரிமை பறிப்பு, தேர்தலில் போட்டியிட தடை, ஒட்டு போடும் உரிமை பறிப்பு என்பதெல்லாம் உலகமே இந்தியாவிடம் கற்றுக்கொண்ட பாடம். பால் தாக்கரே தான் முதல் பலி இதில். ஐந்து வருடம் அவருக்கு ஒட்டு போட தடை விதித்து தங்கள் ஆட்சியை மராட்டியத்தில் தக்கவைத்துக்கொண்டது காங்கிரஸ். அதை பின்பற்றுகிறான் ராஜ பக்ஷே, இந்தியா வாழ்க
On Thursday, October 14,2010 02:48 PM, நடுநிலையாளன் said :
பால் தாக்கரேவின் ஓட்டுரிமையை பறித்தல்தால் ஒன்றும் குடி முழுகி போய்விடவில்லை. பால் தாக்கரேவும் நம் ஊர் மருத்துவர் ஐயா டாக்டர் ராமதாசும் ஒரே ஜாதி.
On Thursday, October 14,2010 07:52 PM, Maniyan said :
மருத்துவர் ஐயா பற்றி என்ன தெரியும் உங்களுக்கு
On Thursday, October 14,2010 10:53 PM, நடுநிலையாளன் said :
எனக்கு மட்டுமல்ல. ஒட்டு மொத்த தமிழர்களுக்கும், ஏன் ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் மருத்துவர் ஐயாவைப்பற்றி மிக நன்றாக தெரியும்.
On Thursday, October 14,2010 11:47 PM, saravanan said :
ஸ்டாப் யுவர் கம்மண்ட்ஸ் ராமதாஸ்
On Thursday, October 14,2010 11:55 PM, balaji said :
நீ ஒரு அர குற
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக