சென்னை, அக். 13: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து ம.தி.மு.க. சார்பில் சென்னையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்ததற்காக சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியவர் ராஜபட்ச. ஆனால், அவரை தில்லியில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவுக்கு அழைத்து கெüரவப்படுத்துவது, தமிழர்களுக்கு எதிரான செயல் ஆகும். எனவே, ராஜபட்சவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவும் ம.தி.மு.க. சார்பில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை (அக். 14) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

மனித நேயத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/14/2010 3:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/14/2010 3:13:00 AM