பெங்களூர், அக்.11- கர்நாடக ஆளுநர் ஹெச்.ஆர். பரத்வாஜை நீக்க வேண்டும் என்று பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநில பாஜக தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:"ஆளுநர் எதிர்க்கட்சித் தலைவரைப் போல செயல்படுகிறார். அவர் ஆளுநராக பதவியேற்றது முதல் பாஜக அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்தார். எனவே, அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம். சட்டப்பேரவைத் தலைவரை தானே வழிநடத்த வேண்டும் என்று நினைக்கிறார். இத்தகைய ஆளுநர் அகற்றப்பட வேண்டும்." என்றார்."ஆளுநர் சட்டப்பேரவைத் தலைவரின் அதிகாரத்தை எடுத்துக்கொள்ள முற்பட்டுள்ளார். இது துரதிஷ்டவசமானது. கர்நாடக மக்கள் ஆளுநரிடம் இருந்து இத்தகைய ஒருதலைப்பட்சமான போக்கை எதிர்பார்க்கவில்லை." என்று முதல்வர் எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
10/12/2010 2:35:00 AM
10/12/2010 2:35:00 AM


By S Raj
10/11/2010 7:35:00 PM
10/11/2010 7:35:00 PM


By மின்னல்
10/11/2010 6:20:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/11/2010 6:20:00 PM