இடைத்தங்கல் முகாம்களில் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் போசாக்கு உணவு வழங்கும் திட்டங்கள் என்ற போர்வையில், சுகாதார அமைச்சு புதிய திட்டங்களை ஆரம்பிக்க உள்ளதாக அறியப்படுகிறது. வன்னி பெருநிலப்பரப்பில் மக்கள் தற்போது குடியிருக்க முடியாத அளவு மக்கள் தொகை ஒன்றும் பெருகிவிடவில்லை. மாறாக 20,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந் நிலையில் குடும்பக் கட்டுப்பாடு எதற்கு ?. சிங்களப் பகுதிகளில் இலங்கை அரசு மேற்கொள்ளாத குடும்பக்கட்டுப்பாட்டை ஏன் தமிழர் தாயகப்பகுதிகளில் மேற்கொள்கிறது ? இலங்கையில் ஏற்கனவே தமிழர்களின் இன வீதாசாரம் நலிந்து காணப்படும் இத் தருனத்தில், இலங்கை அரசானது நன்கு திட்டமிட்டு இன அழிப்பு நடவடிக்கைகளை மிக நாசூக்காகச் செய்துவருகிறது. தமிழர்களை போரின் மூலம் கொன்றுகுவித்துவந்த அரசு தற்போது பிறக்கவிருக்கும் எமது வருங்காலச் சந்ததியினர் மீதும் இன அழிப்பை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. தற்போது வன்னியில் பல நிலப்பரப்புகள், வாழ்விடங்கள் என்பன காலியாவே உள்ளது. சுமார் 6 இலச்சம் மக்களை இலகுவாக குடியமர்த்தக் கூடிய பகுதிகளில் மூன்று லட்சம் மக்களே தற்போது உள்ளனர். தடுப்பு முகாம்களில் குழந்தைகள் பிறந்தால் பராமரிப்பது, கடினம் மற்றும் போசாக்கான உணவுகளை வழங்கவேண்டும் அத்துடன் தமிழர்கள் தொகை அதிகரித்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு இலங்கை நயவஞ்சகமாகச் செயல்பட்டு வருகிறது. புலம் பெயர்வாழ் எம் தமிழ் உறவுகளே தடுப்பு முகாமில் அடைபட்டிருக்கும், உங்கள் உறவினர்களுக்கு இலங்கை அரசின் இந்தத் திட்டத்தை புரியப்படுத்துங்கள். எமது இனம் பூண்டோடு அழிந்துவிடாமல், வாழையடி வாழையாகத் தழைக்க, உறுதியும் உரமும் சேருங்கள், உங்கள் உறவினர்கள் மனங்களில். இலங்கை அரசின் போலியான நாடங்களை நம்பி எமது இனம் மோசம் போனது, இனியாவது முகத்திரையைக் கிழிப்போம். தடுப்பு முகாமில் நடைபெறவுள்ள குடும்பக்கட்டுப்பாடு ஏற்பாடுகளை முடக்குவோம். இதில் உங்கள் கருத்துக்கள் எதிர்பார்க்கப்படுகிறது athirvu@gmail.com |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக