ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009


கொழும்பு, ஆக. 3-

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே போர் நடந்தபோது விடுதலைப்புலிகளின் தலைவர்கள் பலர் வவுனியாவுக்கு இடம் பெயர்ந்தனர்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் இவர்கள் முகாம்களில் தங்கியிருந்தனர். அப்போது இலங்கை அரசு அவர்களை கைது செய்து விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து சென்றது.

அங்கு அவர்கள் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு ரகசியமாக படுகொலை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த பாலகுமார் (முன்னாள் ஈரோஸ் தலைவர்), யோக ரத்தினம் யோகி, கரிகாலன், புலவர் புதுவை ரத்தினதுரை ஆகியோர் கொல்லப்பட்ட வர்களில் அடங்குவர்.
இந்த தகவலை ஸ்ரீலங்கா கார்டியன் என்ற இணைய தளம் வெளியிட்டுள்ளது.

தென் பகுதியில் உள்ள சிறை சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட இவர்கள் அங்கு கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டனர். பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த சுமார் முக்கிய 100 தலைவர் கள் திட்டமிட்டு வெளியே தெரியாமல் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் கொலை குழு ஒன்று இவர்களை கொன்று விட்டது என்றும் அந்த இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது.

இவர்கள் கைது செய்யப்பட்டது பற்றியோ கொல்லப்பட்டது பற்றி யோ இலங்கை அரசு எந்த தகவலையும் வெளி யிடாமல் மவுன மாகவே இருந்து வருகிறது.

தயாமாஸ்டர் மற்றும் அரசியல் துறை பொறுப் பாளர் தமிழ்செல்வனின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் குறித்து மட்டுமே அரசு தகவல்களை வெளியிட்டு வருகிறது.

இவர்கள் குறித்து அனைத் துலக செஞ்சிலுவை சங்க குழுவுக்கு கூட தகவல் தெரிவிக்கப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக