வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

வெளியுறவுக் கொள்கையை
மறுபரிசீலனை செய்யக் கோரி தில்லியில் செப்.16-ல் பேரணி



தஞ்சாவூர், ஆக. 13: மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனான இந்திய வெளியுறவுக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, தில்லியில் செப்டம்பர் 16-ம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் பேரணி நடைபெறவுள்ளது என்றார் அக் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத்.தஞ்சாவூரில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:விநாயகர் சதுர்த்தி விழா 5,000 இடங்களில் கொண்டாடப்படும். இவ்விழா ஈழத்தில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்படும் விழிப்புணர்வு ஊர்வலமாக இருக்கும். மேலும், அங்கு அமைதியும், தமிழ் ஈழம் அமைய விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரார்திக்கப்படும்.வங்கதேசத்தில் இந்து கோயில்கள் இடிக்கப்படுகின்றன. பாகிஸ்தானில் இந்துக்களுக்கு வரி விதிக்கப்படுகிறது. மாலத் தீவு, நேபாளத்திலும் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தில்லியில் நடைபெறும் பேரணியின்போது குடியரசுத் தலைவரிடம் இதுகுறித்து மனு கொடுக்கப்படும்.தில்லி பேரணியில் கர்நாடகத்திலிருந்து ராம் சேனை, மகாராஷ்டிரத்திலிருந்து சிவசேனை, ஆந்திரத்திலிருந்து ஹிந்து மஞ்சி ஆகிய அமைப்புகள் பங்கேற்கின்றன என்றார் அர்ஜுன் சம்பத்.
கருத்துக்கள்

தேவையான ஒன்று.இவ்வமைப்பிற்குப் பாராட்டுகள். இந்திய அரசின் தவறான வெறியுறவுக் கொள்கைகளால்தான் உலகத் தமிழர்கள் அல்லலுறுகின்றனர்; இடர்ப்படுகின்றனர்; அழிகின்றனர். தமிழ் ஈழத்தைச் சுடுகாடாகவும் இடுகாடாகவும் மாற்றியதும் இந்த மோசமான வெளியுறவுக் கொள்கையே ஆகும். இத்தகைய பேரணிகள் அரசிற்கு விழிப்புணர்வு ஊட்டும் என்றால் நன்று. ஆனால், மததிய அரசில் உள்ள சிலரின் ஆதிக்கம் தொடர்ந்து தவறான பாதயி்ல் தெரிந்தே அரசை வழிநடத்துவதால் மத்திய அரசு திருந்தப் போவதில்லை. எனவே, தொடர்பான பொறுப்பில் உள்ளவர்களை மாற்ற வேண்டியும் வலியுறுத்தி வெற்றி காண வேண்டும். உலகத் தமிழர்கள் உரிமையுடன் வாழ்க! தாம் சார்ந்துள்ள பகுதியின் முன்னேற்றதுடன் இணைந்து வாழ்க! இவர்கள் இன்றி அப்பகுதியின் வாழ்வும் வளமும் இல்லை என்பதை உரியவர்கள் உணர்ந்து உரிய மதிப்பினை வழங்கும வகையில் வாழ்க! வெல்க தமிழ் ஈழம்! ஓங்குக உலக ஈழ உலக நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/14/2009 4:02:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக