Last Updated :
கொழும்பு, ஆக. 13: கொழும்பில் இன்னமும் பல இடங்களில் ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ளனர் விடுதலைப் புலிகள் என்று இலங்கைப் பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயக எச்சரிக்கிறார்.ஹெüரண என்ற ஊரில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் விக்ரமநாயக இதைத் தெரிவித்தார்."விடுதலைப் புலிகள் இயக்கத்தை வெட்டிச் சாய்த்ததன் மூலம் பற்றி எரியும் பெரு நெருப்பை நாம் அணைத்துவிட்டோம். ஆனால் இன்னமும் அந்த ஆபத்து முற்றிலும் நீங்கிவிட்டதாகக் கூற முடியாது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேசத் தலைவர் கே. பத்மநாதனை விசாரித்தபோது, இலங்கைத் தலைவர்களைக் கொல்வதற்காக நகரின் பல பகுதிகளில் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் ஆங்காங்கே பதுக்கி வைத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். அவரிடம் மேலும் பேசி தகவல்களைப் பெற வேண்டியிருக்கிறது. அவர் கூறும் தகவல்கள் உண்மைதானா என்று சோதிக்க வேண்டிய வேலையும் இருக்கிறது.விடுதலைப் புலிகளை ஒடுக்க முடியாது, அவர்களுடைய சர்வதேசத் தொடர்புகளை முறியடிக்க முடியாது என்றெல்லாம் பேசினார்கள். அவர்களை அடியோடு அழிக்கவும் முடியும் வெளிநாடுகளில் கிளைபரப்பியிருந்தாலும் நினைத்த நேரத்தில் நினைத்தபடி அவர்களைக் கைது செய்து இலங்கைக்குக் கொண்டுவரவும் முடியும் என்பதைத்தான் இலங்கை அரசு இப்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறது.அதே சமயம், புலிகளும் புலிகளின் ஆதரவாளர்களும் நம் நாட்டின் எந்த மூலையிலும் பதுங்கிக் கொண்டிருக்கலாம், தக்க சமயத்தில் வெளிப்பட்டு சிறு சிறு நாச வேலைகளில் ஈடுபட்டுவிட்டுத் தலைமறைவாகிவிடலாம் என்பதையும் நிராகரித்துவிட முடியாது. அவர்களிடமிருந்து வரும் சோதனைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை எதிர்த்து வெற்றி பெறும் சக்தி நம்முடைய அரசுக்கு இருக்கிறது என்பதை உலகுக்கே உணர்த்தி வருகிறோம்' என்றார் ரத்னஸ்ரீவிக்ரமநாயகே.கே.பத்மநாதன் அளித்த தகவல்களின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டார் என்றும் பிரதமர் அப்போது தெரிவித்தார்.கே. பத்மநாதனைக் கைது செய்ததில் சர்வதேச சட்டங்களையோ விதிகளையோ இலங்கை அரசு மீறிவிடவில்லை என்று செய்தித்துறை அமைச்சர் லட்சுமண் யப அபயவர்தன நிருபர்களிடம் தெரிவித்தார்.
By Ilakkuvanar Thiruvalluvan
8/14/2009 4:54:00 AM