பெங்களூர், ஆக.9: பெங்களூரில் 18 ஆண்டுகளாக மூடிக்கிடந்த தமிழ்ப்புலவர் திருவள்ளுவர் சிலையை பலத்த பாதுகாப்புக்கிடையே தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை திறந்து வைத்தார்.
ஆர்பிஏஎன்எம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் திருவள்ளுவர் சிலையை கர்நாடக முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி ரிமோட் கண்ட்ரோல் மூலம் திறந்து வைத்து உரையாற்றினார்.
சிலை திறப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னட ரக்ஷணா வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள் போலீசாரால் விழா நடைபெறும் இடத்திலிருந்து 10 கிலோமீட்டருக்கு அப்பால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் சிலை திறப்பு விழா அமைதியாக நடைபெற்றதாகப் போலீசார் தெரிவித்தனர். விழாவின்போது எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமலிருக்க 3000த்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக