பழநி: பழநி அருகே அமரபூண்டியில் 3,000 ஆண்டுகள் பழமையான கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டது. அமரபூண்டியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, கோயில் கட்டடக்கலை நிபுணர் மணிவண்ணன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நாராணமூர்த்தி அறிக்கை: அமரபூண்டி ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள காட்டில் 2 கல்திட்டைகள் உள்ளன. இவை 3,000 ஆண்டுகள் பழமையானவை. பழங்காலத்தில் இறந்தவர்களை முதுமக்கள் தாழியில் வைத்து புதைத்து, அந்த இடத்தை அடையாளம் காணும் வகையில் புறாக்கூண்டு போன்ற அமைப்புடன் பலகைக்கல் அமைப்பை ஏற்படுத்துவர்.
இதை கல்திட்டை என்பர். அமரபூண்டியில் கிடைக்கப்பெற்றவை ராட்சத வடிவில் உள்ளது. ஒரு கல்திட்டு 1.17 மீ., உயரமும், 6.61 மீ., சுற்றளவும் கொண்டுள்ளது. மற்றொன்று 1.6 மீ., உயரமும், 6 மீ., சுற்றளவும் கொண்டுள்ளது, இக்கல்திட்டைகளை வெவ்வேறு சமூகத்தினர் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக