வியாழன், 13 ஆகஸ்ட், 2009

உயர்நிலைப்பள்ளி தேர்வு எழுதிய முன்னாள் விடுதலைப்புலிகள்: இலங்கை அரசு ஏற்பாடு



கொழும்பு, ஆக. 11: விடுதலைப்புலிகள் படையில் வீரர்களாக இருந்த சிறுவர்கள் 100 பேர் உயர்நிலைப்பள்ளி தேர்வில் செவ்வாய்க்கிழமை பங்கேற்றனர். இந்த தேர்வு வட இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் நடைபெற்றது. முன்னாள் விடுதலைப் புலிகளுடன், இடம்பெயர்ந்து முகாம்களில் வசிக்கும் 1187 தமிழர்களும் இந்த தேர்வை எழுதினர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்கள் படித்து தேர்வுக்கு தயாராக வசதியாக இவர்களுக்காக அவசர கதியில் முகாமிலேயே பள்ளிக்கூடமும் அமைக்கப்பட்டது. இதில் தங்கி இவர்கள் தேர்வுக்கு தயாராகினர். முன்னாள் விடுதலைப்புலிகள் செட்டிக்குளம் பகுதியில் தேர்வு எழுதினர். வவுனியா, செட்டிக்குளம் முகாமகளில் தங்கியுள்ளவர்களுக்கு தேர்வுத் துறை சிறப்பு அடையாள அட்டை வழங்கியது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் படைவீரர்களாக இருந்த சிறுவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அரசு தயாராக உள்ளது. தேர்வு எழுத அவர்கள் அனுமதிக்கப்பட்டதே இதற்கு உதாரணம் என்று தேர்வுகள் துறை தலைமை இயக்குநர் அனுரா எடிரிசிங்க தெரிவித்தார். தேர்வு எழுதியவர்களுக்கு வசதியாக முன்னதாக பாடப் புத்தகங்கள், பழைய வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.
கருத்துக்கள்

படைவீரர்களாக இருந்த சிறுவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் என்றால் திடீரென்று எழுதி விட முடியாது. எனவே, இதுவரை படித்து வந்துள்ளார்கள் என்று தெரிகிறது. எல்லா நாடுகளிலும் உள்ள தேசிய மாணவர் பயிற்சிப்படை என்பது போன்ற படைப்பயிற்சியை விடுதலைப் புலிகள் சிறார்க்கு வழங்கினாலும் அவர்களைப் படிப்பிக்கத் தவறவில்லை. படைக் கல்வியும் கல்வியில் ஒரு பகுதியாக இருந்துள்ளது. சிங்கள அழிவு வேலை நடைபெறாமல் இருந்திருக்குமெனில் தமிழ் ஈழத்திலேயே தேர்வு எழுதியிருப்பார்கள். எனவே, இதன் மூலம் சிறாரின் கல்வியிலும் தமிழ் ஈழ அரசு கருத்து செலுத்தி வந்துள்ளது நன்கு புலனாகின்றது. பாராட்டிற்குரிய அவர்களின் பணியைச் சிதைத்தவர்கள் சிதைந்து போகட்டும்! வெல்க தமிழ் ஈழம்! தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் வாழ்க! ஓங்குக ஈழ-உலக நட்புறவு! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/13/2009 5:39:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக